இந்துமத விடுதலைப் புரட்சிப் பணி

இன்றைக்கும் நாட்டு வழக்கில் குடும்ப தெய்வங்கள், குலதெய்வங்கள், கிராம தேவதைகள் என்ற மூன்று வகையினருக்கும் உரிய வழிபாடுகள் அனைத்தும் தமிழ்மொழியில் நடைபெறுகின்றன; தமிழர்களையே பூசாறிகளாக, குருக்கள்களாக, குருமார்களாகக் குருக்கலாகக் கொண்டே நடைபெறுகின்றன; குருதிப் பலிகள் கணக்கற்று கொடுக்கப்பட்டே நடைபெறுகின்றன; முட்டை, மீன், கருவாடு, ஆடு, கோழி, .. .. முதலியனவற்றின் சமைத்த இறைச்சியுணவு, படையல்களுடனேயே நடைபெறுகின்றன .. .. என்ற பேருண்மைகளால் விளங்குகின்றன. இதே நேரத்தில், ஹிந்துமதம் கைப்பற்றிக் கொண்டுள்ள கோயில்களில் சமசுக்கிருத மொழியிலேயே பூசைகள் நடைபெறுகின்றன; பிறாமணர்களே குருக்கலாக இருந்து பூசைகள் நடைபெறுகின்றன; குருதி நீராட்டோ, குருதிப் பலியோ, இறைச்சியுணவுப் படையலோ இல்லாத பூசைமுறைகள்தான் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றின் மூலம் மிகத் தெளிவாக இமயம் முதல் குமரி வரை பதினெண்சித்தர்களுடைய இந்து மதமும், பிறாமணர்களுடைய ஹிந்து மதமும் தங்கள் தங்களுடைய தனித்தன்மைகள் கெடாமல் இரண்டு தனிப்பட்ட மதங்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற பேருண்மை விளங்கிடும் அல்லது விளங்குகின்றது.

விரிவாகப் படித்திட...

நாட்டை எந்தத் தத்துவம் ஆளுகின்றது?

நம்மை யார் ஆளுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலையில்லை?! நம்மை எது ஆளுகிறது என்பதைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும்” என்ற இந்த வாசகம்தான் தமிழருடைய அரசியல் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும், இதை உருவாக்குபவர்களின் வரலாறுகளையும் தொகுத்துக் கூறும் பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் அரசபாரம்பரியம் (The Political History) என்ற தொடர் வரலாற்று நூலின் ஆரம்பத்தில் இருக்கிறது. அதாவது நம்மை எந்தத் தத்துவம் ஆளுகிறது அல்லது நாம் எந்தச் சித்தாந்தப்படி ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துதான் அல்லது புரிய முயன்றுதான் வாழ வேண்டும் என்ற அறிவுரையையே வழங்குகிறார்கள் பதினெண்சித்தர்கள்.

விரிவாகப் படித்திட...

இந்துமதம் வேறு; ஹிந்துமதம் வேறு

(The Indhuism is not Hinduism). அதாவது, இந்துமதம் வேறு; ஹிந்துமதம் வேறு என்ற கருத்தை முதலில் தமிழர்களுக்கும், பிறகு இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியர்களுக்கும் மிகத் தெளிவாக விளக்கிட வேண்டும். அப்பொழுதுதான் இந்துமதம் மிகப்பெரிய மறுமலர்ச்சி அடைய முடியும்.

விரிவாகப் படித்திட...

இந்துமதம் தமிழருடைய மதம்

இந்துமதம் என்பது நமது தமிழ்மொழி மதம்தான்; இந்து என்ற சொல் தமிழ்ச் சொல்தான்; இந்துமதத்தின் குருபீடமாக, குருதேவராக, ஆச்சாறியாராக, தலைவராக, மடாதிபதியாக, பீடாதிபதியாக ஒரு தமிழன் தான் இருக்க முடியும்;.. .. இந்துமதத்தின் மெய்யான செயலாக்கங்களில் தமிழ்மொழி இந்துமதத்தில் இருந்து அகற்றப்பட்டதால்தான்; இந்துமதக் கோயில்கள் அருள்நலம் குன்றின. இந்துமதக் கடவுள்களுக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு குறைந்தன.

விரிவாகப் படித்திட...

அழைப்புரை

About Gurudevar
குருதேவர், சித்தர் அரசயோகிக் கருவூறார் 12வது பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும், பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், குருமகாசன்னிதானமாகவும் 108ற்கும் மேற்பட்ட அருட்பட்டங்களை தமது பயிற்சியினாலும் முயற்சியினாலும் பெற்றிட்ட குருதேவர் அவர்களின் எழுத்துக்களை அச்சிட எந்தப் பதிப்பகத்தாரும் சென்ற நூற்றாண்டில் முன் வரவில்லை. எனவே, குருதேவர் அவர்கள் தமது எழுத்துக்களை கையெழுத்து நகல்கள் எடுத்துப் பலரிடமும் படிக்கக் கொடுக்கும் முறையினை வளர்த்துச் செயல்படுத்திட்டார். அந்த நகல் எடுத்துப் பரப்பும் பணி இந்த நூற்றாண்டிலும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மாத வெளியீடுகளாக சில கட்டுரைகளை ஒவ்வொரு மாதமும் தொகுத்து புத்தக வடிவில் அச்சிட்டு வழங்கும் பணி நிகழ்கின்றது.

இந்தப் பணியினால் தமிழகத்திற்குள் வழங்கப்பட்ட கட்டுரைகள் இங்கே வெளியிடப் படுகின்றன. இவற்றைத் தமிழர்கள் அனைவரும் படித்திட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.