அழைப்புரை

About Gurudevar
குருதேவர், சித்தர் அரசயோகிக் கருவூறார் 12வது பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும், பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், குருமகாசன்னிதானமாகவும் 108ற்கும் மேற்பட்ட அருட்பட்டங்களை தமது பயிற்சியினாலும் முயற்சியினாலும் பெற்றிட்ட குருதேவர் அவர்களின் எழுத்துக்களை அச்சிட எந்தப் பதிப்பகத்தாரும் சென்ற நூற்றாண்டில் முன் வரவில்லை. எனவே, குருதேவர் அவர்கள் தமது எழுத்துக்களை கையெழுத்து நகல்கள் எடுத்துப் பலரிடமும் படிக்கக் கொடுக்கும் முறையினை வளர்த்துச் செயல்படுத்திட்டார். அந்த நகல் எடுத்துப் பரப்பும் பணி இந்த நூற்றாண்டிலும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மாத வெளியீடுகளாக சில கட்டுரைகளை ஒவ்வொரு மாதமும் தொகுத்து புத்தக வடிவில் அச்சிட்டு வழங்கும் பணி நிகழ்கின்றது.

இந்தப் பணியினால் தமிழகத்திற்குள் வழங்கப்பட்ட கட்டுரைகள் இங்கே வெளியிடப் படுகின்றன. இவற்றைத் தமிழர்கள் அனைவரும் படித்திட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.