நமது இ.மு.க.வும், இ.ம.இ.யும் தான் நமது முன்னோர்களும், சான்றோர்களும், ஆன்றோர்களும், முனிவர்களும், இருடிகளும், மகான்களும் நமது நாட்டுக்கு உரியது என்று உருவாக்கியுள்ள சாத்தர, சாத்திர, சாத்திறங்களின் கருத்துக்களையும், செயல்நிலைகளையும் கிராமம் முதல் சிற்றூர், பேரூர், மாநகரம் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதில் சித்த மருத்துவம், சித்தர் சமையல் முறை, உணவு முறை, உடை முறை, உடற்பயிற்சிகள், .. .. மதம் சார்ந்த பூசைமுறைகள், ஓகாசன யோகாசனக் கலைகள், ஞானக்காட்சி, அருட்கணிப்பு, பரிகாரம் செய்யும் முறைகள், பதினெண் மேல்கணக்குகள், பதினெண் கீழ்க்கணக்குகள், பதினெண் நடுக்கணக்குகள் எனும் மூன்று வகைப்பட்ட இலக்கியங்கள், (உலகியல் இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், அருளுலக இலக்கியங்கள்) .. .. முதலியவைகளையெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் முதலியோர்களின் உள்ளங்களையும், இல்லங்களையும் மேற்படி அனைத்தின் விதைப் பண்ணைகளாகவும், நாற்றுப் பண்ணைகளாகவும் தயாரித்துத்தான் நம் நாட்டுப் பொதுமக்களிடம் பரப்ப வேண்டும்.
மேலும் படிக்க...
அருளும், மருளுமாக மனிதர்கள் மீது வந்து இறங்கி ஆடக்கூடிய கடவுள்களாகவும், குருதிப்பலியையும், இறைச்சி உணவையும் மிகுந்த விருப்பத்தோடு ஏற்கக்கூடிய கடவுள்களாகவும் இருக்கின்ற கடவுள்களின் கோயில்களுக்கும்; இவற்றை விரும்பாது மரக்கறி உணவையே விரும்புகின்ற கடவுள்களை உடைய கோயில்களுக்கும் உயிர்ப்புச் சத்திப் பூசைகளையும், புத்துயிர்ப்புச் சத்திப் பூசைகளையும் செய்து தரக்கூடிய வல்லவர்களை உருவாக்கும் அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார், குவலய குருபீடம், குருதேவர் விடுத்துக் கொள்ளும் செயல்நலம் பாராட்டுத் திருவோலை
மேலும் படிக்க...
தமிழருடைய மதத்தின் மறுவாழ்வுக்காகப் பாடுபட வேண்டும். குருதிப் பலி நீராட்டும், இறைச்சியுணவும் உடைய தமிழனுடைய கடவுள்கள்; பிறமண்ணினரான பிறாமணர்களாலும், அவர்களுடைய சமசுக்கிருத மொழிக்குரிய சனாதன தருமம் எனப்படும் ஹிந்துமதத்தாலும் பட்டினி போடப்பட்டு பாழாக்கப்பட்டு விட்டார்கள். பிறாமணருக்கு வராத அருளும், மருளும், காவடியும், தீச்சட்டியும், பூக்குழியும் மறுக்கப்பட்டன, வெறுக்கப்பட்டன. இவை மாற்றப்பட வேண்டும்.
மேலும் படிக்க...
பதினெண்சித்தர்களுடைய இந்துவேதமும், இந்துமதமும் தமிழ்மொழியில்தான் இருக்கின்றன. இதில் கூறப்படக் கூடிய கடவுள்களை அப்பா, அம்மா, அண்ணா, அத்தா, அமரா, இறைவா, தெய்வமே, தேவரே, தேவதையே, பட்டவரே, எல்லாவே, .. .. என்று மிகத் தெளிவாகப் பெயரிடப்பட்டு நாற்பத்தெட்டு வகைகளாகப் பட்டியலிடப்பட்டு பிரித்துக் காட்டப்பட்டிருந்தாலும்; இவர்கள் பிறப்பாலும், வாழ்வியல்களாலும், அருளாற்றல்களாலும், செயல்படும் எல்லைகளாலும் மிகமிகத் தெளிவாக வரையறுத்துக் காட்டப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் படிக்க...
இந்துவேதம் என்பது மிகப் பெரிய கடல் போன்றது. இதில் கோடியில் ஒரு பங்காக விளங்குவதுதான் இந்துமதம். எனவே, இந்த கடலில் சிறிது தண்ணீர் எடுத்து உப்பு காய்ச்சுவது போல்தான் இந்து வேதத்திலிருந்து இந்து மதம் உண்டாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...