இந்துமதத்துக்கு என்று முழுக்க முழுக்க பாடுபட இ.ம.இ.யும், இந்துக்களின் சமுதாய அரசியல் உரிமைகளையும், பெருமைகளையும் பாதுகாப்பதற்கென்று பாடுபட இ.மு.க.வையும் தனித்தனியாக இரு பெரும் இயக்கங்களாக வளர்த்தேயாக வேண்டும்! வளர்த்தேயாக வேண்டும்! வளர்த்தேயாக வேண்டும்! இல்லையேல்
இந்துமதம் இருக்கிறதா? இறக்கிறதா? இந்துமதம் இருக்குமா? இறக்குமா? என்ற தலைப்புக்களில் நாடு தழுவி மிகப் பெரிய கருத்துப் போராட்டச் சிந்தனை அரங்குகள் உருவாக நேரிடும். அதற்கு இப்பொழுதிருந்தே ஆக்கச் செயல்களை, ஆக்கப் பூர்வமான செயல்திட்டங்களை தங்களைப் போன்றோர் செய்தேயாக வேண்டும்.
மேலும் படிக்க...
நமது இந்துமதத்தில்தான் (1) பெயரியல் (ஒருவருடைய பெயரைக் கொண்டு அவருடைய பாதிப்புக்களைக் கண்டு பரிகாரங்களைச் செய்தல்), (2) வரியியல் (ஒருவருடைய கைரேகையை வைத்து அருட்கணிப்பு செய்து பாதிப்புக்களைக் கண்டுபிடித்து பரிகாரங்களைச் செய்தல்), (3) மனையியல் (ஒருவர் வாழுகின்ற அல்லது தொழில் செய்கின்ற இடத்தின் தரையைக் கூட்டி சிறிதளவு தூசியை எடுத்து அருட்கணிப்பு செய்து பாதிப்புகளுக்குப் பரிகாரம் செய்தல்), (4) அங்கவியல் (ஒருவருடைய புகைப்படத்தை வைத்து அருட்கணிப்பு செய்து பாதிப்புக்களைக் கண்டறிந்து பரிகாரங்களைச் செய்தல்), (5) பிறப்பியல் (ஒருவர் பிறந்த நேரம் அல்லது கிழமை அல்லது சாதகம் அல்லது தாய் தகப்பனார் பெயர் முதலியவற்றில் ஏதாவது ஒன்றைத் தெரிவித்தால் போதும். அதைக் கொண்டு அருட்கணிப்பு கணித்து பரிகாரம் செய்தல்) என்ற பஞ்சாங்க முறை, அருள்வழங்கு கலைகளின் செயல் முறை முதலிய செயல்முறைகள் இருக்கின்றன, இருக்கின்றன, இருக்கின்றன.
மேலும் படிக்க...
மடாதிபதி => மடம் = இளமை; அதி = வளர்ந்து கொண்டே இருக்கும், அழியாதது; பதி = தலைவன்; குறிப்பிட்ட கோயில் கடவுளோடு சேர்ந்து ஆவி, ஆன்மா, ஆருயிர் மாறாத இளமையோடு தலைமை பெற்று விளங்கிடும். பீடாதிபதி => அந்தக் கடவுளின் இருக்கை, அந்த இருக்கையில் அதிகம் வளர்ந்து கொண்டே போவது, அந்தக் கடவுளாகவே மாறி செல்வாக்கு வளர்ந்து கொண்டே போவது.
மேலும் படிக்க...
இந்து மதத்தின் மூலவர்களான பதினெண்சித்தர்கள்தான், தங்களுடைய துணைத் தலைவர்களான பதினெட்டாம்படிக் கருப்புக்களையும், தாங்கள் தோற்றுவித்த நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களையும், அண்ட பேரண்டங்களிலிருந்து தாங்கள் அழைத்து வந்த நாற்பத்தெட்டு வகைக் கடவுள்களையும், நாற்பத்தெட்டு வழிபடு நிலையினர்களையும் பயன்படுத்தி இப்பூவுலகு முழுதும் உள்ள அருளூறு ஊற்றுக்களை கண்டறிந்து; அந்த அருளூறு ஊற்றுக்கள் என்றென்றும் மக்களுக்குப் பயன்படும் வண்ணம் நாற்பத்தெட்டு வகைக் கோயில்களைக் கட்டினார்கள்.
மேலும் படிக்க...