தமிழனுடைய கோயில்கள் தமிழரல்லாதவர் கைகளிலேயே இருக்கின்றன; அல்லது தமிழ் மொழிப் பற்றோ, இனப் பற்றோ, பண்பாட்டுப் பிடிப்போ இல்லாதவர்களின் கைகளிலேயே இருக்கின்றன. இதைப் பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால், கோயிலுக்குச் செல்கின்ற எந்தத் தமிழனும் தன்னுடைய கடவுளுக்கு தனக்குப் புரியாத அன்னிய மொழியில் பூசைகள் செய்யப்படுவது ஏன்? என்று சிந்திக்கவே மாட்டேன் என்கிறான். இதற்கு என்ன செய்வது? தமிழனுடைய இந்துமதத்துக்கு மலையாளத்தானோ, தெலுங்கனோ, கன்னடத்துக்காரனோ அல்லது வேறு மாநிலத்தவனோ, வேறு மொழிக்குரியவனோ ஏன் ஆச்சாரியனாக, குருபீடமாக, மடாதிபதியாக, குருக்களாக இருக்கிறான் அல்லது இருக்க நேரிட்டிருக்கிறது என்று எந்தத் தமிழனுமே எள்முனையளவு கூட எண்ணிப் பார்க்க மறுக்கிறான். அது மட்டுமல்ல, இப்படிச் சிந்திக்க வேண்டுமென்று கூறுபவர்களை எரிமலையெனக் குமுறி வெடித்து எதிர்ப்பவர்களே நம்மில் ஏராளம், ஏராளம், ஏராளம்.
மேலும் படிக்க...
இந்துவேதம் உலகம் முழுவதும் இருந்த ஒரு வேதம்; இன்று கேட்பாரற்றுப் போய், கவனிப்பார் அற்றுப் போய், இமயம் முதல் குமரி வரை வாழ்ந்து வந்து, இன்று சுருங்கி தமிழ் நாட்டில்தான் இருக்கிறது. தமிழ் மொழியில் இந்துவேதம் இருக்கிறது. இந்து வேதத்திற்குரிய எல்லா கடவுள்களும், கோயில்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அருளாளர்கள் இங்குதான் இருக்கின்றனர்; நாயன்மார்கள், ஆழ்வார்கள் தமிழர்கள்தான். ‘இந்துவேதம் தமிழ் மொழியில் இருக்கிறது. உலக வேதம்தான் இந்துவேதம்’ என்று மக்களுக்கு விளக்கவே இந்துவேத விளக்க கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
மேலும் படிக்க...