இந்து வேதம் மணீசர்களை மனிதர்களாக்கும் வேதம். இந்து வேதம்தான் தனிமனித வாழ்க்கையை செம்மைப்படுத்தியது, இந்து வேதம்தான் குடும்ப வாழ்க்கையை நியாயப்படுத்தியது, இந்து வேதம்தான் ஆணும் பெண்ணும் குழந்தைகளோடு வாழும் இல்லற வாழ்க்கையின் விதியை வகுத்தது, இந்து வேதம்தான் ஆண் தன் மனைவியையும், குழந்தைகளையும் காப்பாற்றும் கடமையை கற்பித்தது. இந்து வேதம்தான் பல குடும்பங்கள் சேர்ந்து வாழும் சமுதாய அமைப்பை கருவாக்கி, உருவாக்கி, செயலாக்கி நிலைப்படுத்திற்று. இந்து வேதம்தான் சமுதாயத்தைப் பாதுகாக்க அரசியல் என்ற ஓர் அமைப்பை உருவாக்கிற்று.
மேலும் படிக்க...
குவலய குருபீடம், பரபிறம்மம், நான்கு யுக நாயகம், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், நிறையக்ஞர், அண்டபேரண்ட அனாதி ஆதி சத்திகள் சன்னிதானம், கருமூலப் பண்டாரம், இந்துவேத நாயகம், இந்து வேத பீடம், இந்துமதத் தந்தை, இந்துமதப் பீடம், இந்துவேதத்தை இம்மண்ணுலகுக்கு அருளிய பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதி, இந்துமதத்தை இம்மண்ணுலகில் தோற்றுவித்த பதினெண்சித்தர் பீடத்தின் பீடாதிபதி, ஆதி அனாதி கடந்த தம்பிரான் சாமிகள் (அடிகளார்), குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார், அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் அவர்களால்தான் இந்து வேதத்திற்கும், இந்து மதத்திற்கும் உரிய பணிகளுக்கு விழியாக, வழியாக, வழிகாட்டியாக, வழிப்பயனாக இருந்திட முடியும், இருந்திட முடியும், இருந்திட முடியும்.
மேலும் படிக்க...
இன்றைக்கு இவ்வையகத்தில் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும்தான் பதினெண்சித்தர்களுடைய இந்துவேத மதமான ‘இந்துமதம்’ வாழ்கிறது. ஆனால், ஒருகாலத்தில் இந்த இந்துமதம் உலகம் முழுவதும் பரவியிருந்தது என்பதற்குச் சான்றாக இலிங்கங்களும், மற்ற இந்துமதச் சின்னங்களும் ஆசுதிரேலியா, அதைச் சுற்றியுள்ள தீவுகளிலும்; உருசியா, சைபீரியப் பாலைவனங்களிலும்; செர்மனி, அராபிய நாடுகள், ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகள், மத்திய அமெரிக்கா, இத்தாலி, சீனா, இங்கிலாந்து, பிரான்சு, .. .. முதலிய பல நாடுகளிலும் இன்றும் காணக் கிடக்கின்றன, கிடைக்கின்றன. இப்படி உலகளாவிய இந்துமதம் இந்தியத் துணைக் கண்டத்துக்குள் மட்டும் சுருங்கியதற்குக் காரணம் இந்துமத சரித்தர, சரித்திர, சரித்திறங்களும், இந்துமதச் சாத்தர, சாத்திர, சாத்திறங்களும், இவை சார்ந்த இந்துமத நூல்களும், இந்துவேத நூல்களும் மறக்கப் பட்டதாலும், மறக்கடிக்கப்பட்டதாலும், துறக்கப்பட்டதாலும், துறக்கடிக்கப் பட்டதாலும் சூழ்ச்சியாக சிதைத்தும், சீரழித்தும், திருத்தியும், மாற்றுமொழியில் மொழி பெயர்த்தும், செல்வாக்கிழந்து செல்லாக் காசு ஆகும்படிச் செய்துவிட்டதுதான்.
மேலும் படிக்க...
இந்து வேதத்தின் மூலமாகத்தான் மற்ற மதங்கள் பிறந்தன, பிறப்பிக்கப்பட்டு வருகின்றன, நாளையும் பிறக்கும். எனவே இதுதான் அடிப்படை. இதற்கான கருத்துக்கள், சான்றுகள், ஊன்றுகள் இந்துவேதத்தில் இருக்கின்றன. இந்துவேதம் என்ற ஆலமரத்தின் விழுதுகளாகவோ, கிளைகளாகவோ இலைகளாகவோதான் எந்த மதமும் தோன்றின என்பதனையே இது விளக்குகின்றது, எனவே இந்து மதத்திற்கு, இந்து வேதத்திற்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்போ, மறுப்போ, பகையோ, எதிர்ப்போ இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
மேலும் படிக்க...
நான் மலை அணில் என்றும், கடல் பறவை என்றும், பரந்த வெளியிலே ஓடி வாழும் கரும்புலி என்றும், எங்கும் தவழும் தென்றல் என்றும், எல்லோரிடத்திலும் வேறுபாடு காட்டாது அன்பு செலுத்தும் பருவ மழை என்றும், யாராலும் எதனாலும் தடுத்து நிறுத்த முடியாதபடி தன் போக்கில் செயல்படும் கோடைக் கால மழையின் இடி என்றும், .. .. சிறப்பாகப் பாராட்டப்பட்டு வருகிறேன்.
மேலும் படிக்க...