நால்வர் உட்பட அறுபத்து நான்கு நாயன்மார்களில் சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைத் தவிர வேறு எவரும் ஆரியரின் வருகையால் பதினெண்சித்தர்களின் இந்துமதத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நலிவை, இழிவை கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ முயலவில்லை. தந்தை பெரியார் ஒருவர்தான் இம்மாபெரும் பணிக்கு தனியொரு மனிதனாக நின்று போராட்டத்தைத் துவக்கினார். அம்மாபெரும் பணியினைத் தொடரும் வகையில் ஒன்றாகத்தான் உண்மையான ஞானசம்பந்தரின் அருளுலக வீர வரலாற்றை கவிதை வடிவில் இங்கே தருகின்றோம். இக்கட்டுரையையே திரு வாசகத்தின் முன்னுரையாய் தருகின்றோம்.
மேலும் படிக்க...
சித்தர்கள் மடமைவாதிகள் (Superstitious men) அல்லர்; பழமைவாதிகள் (Conservatives) அல்லர்; மதவெறியர்கள் (Religious Fanatics) அல்லர்; காட்டுமிராண்டித் தனமான கற்பனைவாதிகள் (Men of Wild Dreams) அல்லர்; பகற்கனவு காண்பவர்கள் (Men of Daylight dreams) அல்லர்; .. என்பதை முதலில் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பிறகு இந்தியத் துணைக்கண்டத்து பெருமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பகுத்தறிவு (Rationalism), சீர்திருத்தம் (Reformation) என்ற பெயர்களால் நாத்திகவாதம் (Atheism) முட்புதர் போல முளைத்து கிளைத்து கிடப்பதை வேரோடு பறித்து அழித்து ஒழிக்க முடியும். ஏனெனில், சித்தர்களை விட சிறந்த பகுத்தறிவு வாதிகள் (Rationalists), முற்போக்கு வாதிகள் (Radicalists), சீர்திருத்தவாதிகள் (Reformers), புரட்சிவாதிகள் (Revolutionists), விஞ்ஞானிகள் (Scientists), சிந்தனையாளர்கள் (Thinkers), மேதைகள் (Scholars), .. இவ்வுலகின் எந்தப் பகுதியிலும், எந்த இனத்திலும் இதுகாறும் தோன்றவேயில்லை.
மேலும் படிக்க...
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களால் எழுதப் பட்ட
பல ஆயிரம் குரு வாசகங்களில் சில துளிகளே இவை.
மேலும் படிக்க...
சாத்திரங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், முறைகள், நெறிகள், ஒழுகலாறுகள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், .. முதலியவைகளை உருவாக்கிய சித்தர்களின் அடியான்களும், அடியார்களும் ‘பொதுவுடமை’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’, ‘மனிதாபிமானம்’, ‘அன்புநெறி’, ‘அமைதி’, .. முதலியவை செழிக்கவே பாடுபடுவார்கள். சித்தர் நெறியே பகுத்தறிவு வளர்த்து அகவாழ்வுக்குரிய மெய்ஞ்ஞானத்தையும், புறவாழ்வுக்குரிய விஞ்ஞானத்தையும் செழிப்படையச் செய்யக்கூடிய ஒன்று.
மேலும் படிக்க...
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம்:
(அவர் தமது இறுதிக் காலத்தில் சிந்தை நொந்து மனம் நைந்து எழுதியவை) 1. “பைந்தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியக் கூறுபாடுகளே இந்துமதம்.” 2. “அண்டபேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தமிழ்மொழியில் வழிபடுபவர்களே அளப்பரிய அருளாற்றலைப் பெறுகிறார்கள்.” 3. “அருளுலக மூலவர்களாகவும், காவலர்களாகவும், வாரிசுகளாகவும் உள்ள தமிழர்களில்தான் அருளாளர்கள் காலங்கள் தோறும் தோன்றிக் கொண்டே யிருக்கிறார்கள்.”
மேலும் படிக்க...
மூவராலும் பாடப்பட்ட மொத்தத் தேவாரங்கள் (49,000 + 16,000 + 38,000 = 1,03,000) ஓர் இலக்கத்து மூவாயிரம் என்றும்; அவற்றுள் அழியாமல் கிடைத்த தேவாரங்கள் (312+384+100 = 796) எழுநூற்றுத் தொண்ணூற்றாறு என்றும்
திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் அவர்களால் தெளிவாகக் குறிக்கப்படுகின்றது
மேலும் படிக்க...