இந்துவேதம்; இருக்கு வேதம், அசுரவேதம், அதர்வான வேதம், யாமவேதம் என்று நான்கு வகைப்படும். இவை ஒவ்வொன்றிலும் 1,10,592 கருத்துக்கள் எண்ணிக்கையிடப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன. இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும், ‘
இருக்கு வேத உரைக்கோவை வாசகம்’ எனப் பெயரிடப் பட்டிருக்கிறது. அசுர வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் ‘
அசுரவேத வாக்கு’ எனப் பெயரிடப் பட்டிருக்கிறது. அதர்வான வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும்
‘அதர்வான வேத வாக்கியம்’ எனப் பெயரிடப் பட்டிருக்கிறது. யாம வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும்
‘யாம வேத வாசகம்’ எனப் பெயரிடப் பட்டிருக்கிறது. இந்த நான்கு வேதங்களிலும், ஒவ்வொரு வேதத்திலும்
காண்டங்கள் என்ற பெயரில் நாற்பத்தெட்டுப் பிரிவுகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு காண்டமும், மண்டலம் என்ற பெயரில் நாற்பத்தெட்டு பிரிவுகளாக வகுக்கப் பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு மண்டலத்திலும் நாற்பத்தெட்டு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.
மேலும் படிக்க...
இராசி பலன் பற்றிய அதிசய செய்தி:- இராசி பயன் என்பது 12 இராசி, 9 கோள்கள், சில விண்மீன்கள் இவற்றின் நிலைகளால், பயிரினங்களுக்கும், உயிரனங்களுக்கும், மனித வாழ்வியலுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகள் அல்லது கெடுதல்கள் இவற்றைக் குறைப்பதற்கான அல்லது முழுமையாக வராமல் தடுப்பதற்கான வழி முறைகளைப் பற்றி விளக்குவதாகும். இராசி பலன் என்பது 27 விண்மீன்கள், 9 கோள்கள், 12 இராசிகள் இவற்றின் நிலைகளால் பயிரின, உயிரின, மனித வாழ்வியலுக்கு ஏற்படும் பலன்களை விளக்குவதாகும், இவற்றின் கூட்டுத் தொகையான 48 (ஒரு மண்டலம்) என்ற எண்ணிக்கைப்படி இராசி பலன் 48 நாட்களுக்கு ஒருமுறைதான் மாறும் என்று இருக்குவேத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...