• முகப்பு>
  • 2014>
  • 2014-08
  • 2014-08

    ¬Å½¢ Á¡¾ ¦ÅǢ£Π(Aug-Sep 2014) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,115

    ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ »¡ÿâ¡÷ º¢ò¾÷ ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ÅÃÄ¡üÚî ÍÕì¸õ

    ¯ûÙ¨È

    ªó¾ ª¾Æ¢ø ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ À¾¢§ÿáÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ »¡ÄÌÕ º¢ò¾÷ ¸¡Å¢Ã¢Â¡üÈí¸¨Ãì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ÅÃÄ¡üÚî ÍÕì¸õ ÅÆí¸ô Àθ¢ýÈÐ.

    1. ÓýÛ¨Ã
    2. «È¢Ó¸×¨Ã
    3. «½¢óШÃ
    4. »¡ÿâ¡÷ º¢ò¾÷ ¸Õçþ÷ ÅÃÄ¡üÚî ÍÕì¸õ
    5. ¿¢¨ÈרÃ
    6. º¢ò¾÷ ªÄ츢Âõ
    7. »¡ÿâ¡÷¸Ç¢ý §À¡¾©É¸û
    8. ªóÐÁ¾ ÅÃÄ¡üÚô §ÀÕñ¨Á¸û

    ஞானாச்சாரியார் வரலாறு
    தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தருகிலேயே தவக் கோலத்தில் அமர்ந்திருக்கும் ஞானாச்சாரியார் அவர்கள், இந்து மதத்துக்கும், இந்து வேதத்திற்கும், இந்துக் கோயில்களுக்கும், இந்து மதத்துக்குரிய அனைத்து வகைப்பட்ட கலைகளுக்கும், நிலைகளுக்கும் விளக்கமாகக் காட்சி தருகிறார். விண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ?!; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது, இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் என்பதை எண்ணித்தான் இச்சிறு புத்தகம் வெளியிடப்படுகிறது.

    மேலும் படிக்க...


    அறிமுகவுரை
    தமிழரின் மெய்யான இந்து மதத்தின் குருபீடமாக, தலைவராக, பாதுகாவலராகத் தோன்றிட்ட ஞானாச்சாரியார்களில் பதினோராவது ஞானாச்சாரியாராகத் தோன்றியவரே தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார். இவரும், இவருக்கு முன் தோன்றிய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்தான் கலியுகத்தில் தோன்றியவர்கள். இந்த இருவருக்கும் மட்டும்தான்; மற்ற ஞானாச்சாரியார்களுக்கு ஏற்படாத அளவுக்குத் தமிழரின் மெய்யான இந்து மதத்தைச் செப்பனிடல், பாதுகாத்திடல், பொய்யானதும் போலியானதுமான ஹிந்து மதத்தை எதிர்த்துப் போராடல்,.. முதலிய பல பொறுப்புக்கள் ஏற்பட்டிட்டன.

    மேலும் படிக்க...


    அணிந்துரை
    “மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,.. இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. .. .. .. இனி விரைவில் அருளுலகம் இருண்டு மருண்டு பயன் தர முடியாத நிலையையே அடைந்திடும். இதற்காகத்தான், அனைத்து வகைப்பட்ட கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும், வழிபாட்டு நிலையக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்யக் கூடிய அருளாளர்களும், அருட்கலைகளும் அருகுபோல் தழைத்து ஆல்போல் நிலைத்திடச் செய்கிறோம் யாம். எனவே, எம்மைப் புரிந்தால், எல்லோரும் தம்மைப் புரிவர்,

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார் - வரலாறு
    ஞானாச்சாரியார் எழுதிய குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரசபாரம்பரியம் எனும் முப்பெரும் சமய, சமுதாய, அரசியல் இலக்கியங்களின் இறுதியில் ‘நிலவறையின் வாயிலிலே’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கின்ற அருளுரைகள் உலக மானுடர் அனைவருக்கும் பயன்படக்கூடிய பொன்னுரைகளாக இருக்கின்றன. இவர் நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற கோயில் கட்டிடப்பணிகள் அனைத்தையும், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் பெருமளவில் நிறைவேற்றினார்கள். திருமாளிகைத் தேவருக்குப் பிறகே இம்மூவரையும் பற்றிய இன்னிசைப் பாடல் இலக்கியங்களை ‘மூவர் தோற்றம்’, ‘மூவர் ஞான உலா’, ‘காவடிச் சிந்து’, ‘தாலாட்டு’, ‘உடுக்கை’, ‘கும்மி’ .. எனும் பெயர்களில் இலக்கியங்கள் பிறந்தன. இப்பொழுது பதினெண் சித்தர் மடம் இவை அனைத்தையும் வெளிப்படுத்த முயலுகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

    மேலும் படிக்க...


    புத்தகத்தின் நிறைவுரை
    இனியாவது, ‘தமிழின, மொழி, மத விடுதலை முயற்சி’ தொடர்கதையாகி விடக்கூடாது. ஒவ்வொரு தமிழரும் தங்களின் ஞானாச்சாரியார், குருபீடம், தமிழ் மொழியின் மெய்ஞ்ஞானசபைத் தலைவர், அருளுலக வழிகாட்டி, வழித்துணை, சமுதாயத் தத்துவ நாயகம், அரசியலின் அருளாட்சி நாயகம் யாரென்பதை நன்கு எண்ணிச் செயல்பட வேண்டும். இன்னுமுள்ள இக்கலியன் உக 4,26,907 ஆண்டுகளிலாவது தமிழர்கள் தக்க தலைமையையும், வழிகாட்டியையும், வழித்துணையையும் பெற்றுச் சிறக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    சித்தர் இலக்கியம்
    சித்தர் இலக்கியத்தில் உடலியல், உயிரியல், மருத்துவம், கலை, தெய்வீகம் .. முதலிய அனைத்துத் துறைகளும் இடம் பெறுகின்றன. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய, இனிய, சுவைமிக்க மொழிநடையைப் பெற்றிருப்பனவே சித்தர் இலக்கியங்கள்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார்களின் போதனைகள்
    இவர்கள் பதினெண்சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் மெய்யான இந்துமதம் ஒன்றையே தத்துவ அடிப்படையிலும்; செயல் சித்தாந்த அடிப்படையிலும்; அருளூறு பூசா மொழிகள், பூசாவிதிகள் முதலியவற்றின் அடிப்படையிலுமே தங்கள் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப விளக்குகிறார்கள். மேலும், ஒவ்வொரு ஞானாச்சாரியாரும் தமக்கு முன்னர் வாழ்ந்த ஞானாச்சாரியார்களின் போதனைகளையும், சாதனைகளையும் முழுமையாகத் தெரிந்தும், ஆராய்ந்தறிந்து புரிந்துமே, தங்களின் போதனைகளையும், சாதனைகளையும் முன்னோரின் அடியொற்றியே வழங்கிடுகின்றார்கள்.

    மேலும் படிக்க...


    இந்துமத வரலாறு
    இந்துமத வரலாற்றுப் பேருண்மைகள்

    மேலும் படிக்க...


    தமிழரின் இந்துமதம் பற்றி
    தமிழரின் மெய்யான இந்துமதம் ‘ஞானம்’, ‘அகஞானம்’, ‘புறஞானம்’, ‘விஞ்ஞானம்’, ‘மெய்ஞ்ஞானம்’ எனும் ‘ஐந்திணை அறிவியலை’ உடையது. “இந்து மதமே சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியச் சான்றோர்களைக் கடவுளாக்கிடுகின்றது”.

    மேலும் படிக்க...