முகப்பு>
2017>
2017-04
2017-04
º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ-V - Å¢ÍõÀ¡ò¾¢È÷ Òá½õ
¯ûÙ¨È
1. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - ²Æ¡õ À¡¸õ. (Å¢ÍÅ¡Á¢ò¾¢Ã÷ Òá½õ).
2. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - º¢Ú ÌÈ¢ôÒì¸û.
3. ÌÕÀ¡ÃõÀâÂõ ¾Õõ ź¢ð¼÷ ÅÃÄ¡Ú.
4. “º£¨¾Â¢ý ¸ü¨À ªÃ¡Áý ºó§¾¸ôÀ¼§Å ªø©Ä!” - ª.Á.ª. ¦ÅǢ£Î.
நாட்டு வழக்கில் சித்தர் இராமாயணம் செல்வாக்குப் பெற முடியாமல் போய்விட்டது. எனவே, விசுவாமித்திரர் புராணம் பற்றியும் எடுத்துக் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. விசுவாமித்திரர் வாழ்க்கை ஆரம்பம் முதல் இறுதி வரை பொருளுக்காகவும், போக இன்பங்களுக்காகவும், புகழுக்காகவும், பதவிக்காகவும் போரிட்டதாகவே இருக்கிறது. இவர் இறுதிவரை தான் விரும்பிய எதையும் முழுமையாகவே சாதிக்கவில்லை. இவர் அரசகுலத்துக்குரிய வீர உணர்வும், தீர உணர்வும், தலைமைப் பண்பும், போரிடும் பண்பும், பிடிவாதப் பண்பும், சூழ்ச்சித் திறனும் உடையவராகத்தான் வாழ்ந்தாரே தவிர ஒரு தவசியாகவோ, ஓர் அருளாளராகவோ முழுமையாக வாழவில்லை.
மேலும் படிக்க...
பொதுவாகச் சித்தர் இராமாயணம் பதினெண்சித்தர் பீடாதிபதிகளால் குறிக்கப்படவில்லை. அவ்வளவு முக்கியத்துவம் இராமாயணத்திற்கோ, பாரதத்திற்கோ தரப்படவில்லை. பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி கூடத் தனது குருபாரம்பரியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் குறிக்கின்றார். சித்தர் ஏளனம்பட்டியார்தான் மிகவும் சிரமப் பட்டுத் தேடிக் கண்டுபிடித்து இராமாயணத்தையும், பாரதத்தையும் பற்றிய குறிப்புக்களை எழுதுகின்றார்.
மேலும் படிக்க...
கருவூறார்களால்தான் எதையும் படைக்க முடியும். காகபுசுண்டர்கள் எதையும் காத்து வளர்க்கும் தொழிலுக்கே உரியவர்கள். கருவூறார்கள் இரவு நேரத்தில்தான் படைத்தல் தொழிலுக்குரிய எல்லாவித அருளுலக கல்வி கேள்வி முறைகளையும், கலை வகைகளையும் படைத்தார்கள். இரவில் சந்திரன், மீன், கோள் முதலியவை ஆட்சிதான் வலிமை. எனவே, காக்கையர்கள் பகலில் சூரியனை மட்டுமே வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்கின்றனர். கருவூறார்கள் தாயாக இருந்து ஈன்று தருபவைகளைக் காக்கையர்கள் தந்தையாக இருந்து காத்து வளர்க்கிறார்கள்..
மேலும் படிக்க...
சீதை அரக்கர் குலமகள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இலங்கையில் தீக்குளிக்குமாறு செய்யப் பட்டாள். அயோத்தியின் அரண்மனையில் இருந்து காட்டுக்கு அனுப்பப் பட்டாள். இதைத் தவிர அவளின் கற்பின் மீது சந்தேகம் கொண்டு இராமபிரான் மேற்படிச் சோதனைகளைச் செய்யவில்லை. அதாவது, அரக்கர் குலத்திற்கும், மானுட அரசகுலத்திற்கும் இணைப்பு ஏற்படுவதைத் தடுக்கவே இராமன் சீதையை சோதித்தான்! தண்டித்தான்!
மேலும் படிக்க...
திரேதா யுகத்தில் (12,90,000 ஆண்டுகள்) இராமாயணம் நிகழ்ந்தது. சூரியகுலத்தார் காகபுசுண்டர்கள் [காக்கையர்கள்] ஆட்சி ஓங்கியது. மானுடர்-அரக்கர் போர்க் காலம்.
மேலும் படிக்க...