அருளுலக அநுபவம் எவரையும் பொருளுலக உணர்வுகள் அனைத்தையும் மறந்து பேரின்ப ஆட்டத்தில் ஈடுபடுத்திடும். இப்பேருண்மையை, இனியாவது அனைவரும் அறிந்தும், பிறர்க்கு அறிவித்தும் நமது அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்.
மேலும் படிக்க...
நாடெங்கும் அ.வி.தி. நிலையங்கள் செயல்பட்டு மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கும் பணியும் வளமுற்றுவிட்டது. நமது அ.வி.தி. செயல்வீரர்கள் நடமாடும் அ.வி.தி. நிலையங்களாக மாறியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து நமது வளர்ச்சி வளமான, வலிமையான வளர்ச்சிதான் என்று எண்ணி பெருமைப்பட வேண்டும் நாம். நமது வளவளர்ச்சி வலிவும் பொலிவும் பெற்றிருந்தாலும் அதனுடைய செயல்நிலை முறையும் நிறையும் பெற்றுத் திகழவில்லை. அதாவது நமது செயல்நிலைகள் புதியபுதிய நிறுவனக் கட்டமைப்புக்களையும், தலைமையின் செயல்திட்டங்களின்படி இயங்குகின்ற நிர்வாக ஒழுங்கினையும் பெற்றிடவில்லை என்பது வருத்தத்தோடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் படிக்க...
அருளுலக அரியணையில் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடமாக அறிவு விழித்த நிலையில் திருவோலக்கத்திலும் நாளோலக்கத்திலும் அமர்ந்து அருளாட்சி நடத்தி வருகிறோம் யாம். அதாவது யாம், இலைமறைகாயாகவே இருந்து கொண்டு, எம்மால் உருவாக்கப்படுபவர்களின் மூலமே உலகைச் சந்தித்துச் செயல்பட்டு வருகிறோம்.
மேலும் படிக்க...
இன்றைய நிலையில் ஏறத்தாழ எந்தக் கட்சிக்குமே கொள்கை கிடையாது! குறிக்கோள் கிடையாது! செயல் சித்தாந்தம் கிடையாது! .. .. தனிமனிதச் செல்வாக்கினால்தான் கட்சிகள் வளர்க்கப்படுகின்றன என்ற பேருண்மை மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிலவுகின்றது. எனவேதான் எந்தக் கட்சியும் தொண்டர்கள் எடுக்கும் முடிவின்படி இயங்கவில்லை. அதாவது எல்லாத் தனிமனிதர்களின் கட்சிகளுமே சொந்த விருப்பு வெறுப்புக்களாலேயே நிகழும் கட்சியாகத்தான் இருக்க நேரிடுகிறது; இயங்குகின்றனவாகவே இருக்கின்றன. எனவே எந்தக் கட்சியாலும் நம் நாட்டு மக்களுக்கு நிலையான நன்மைகள் திட்டவட்டமாக உருவாக்கிட முடியாது! எனவேதான், நம் நாட்டு மக்களின் நலனுக்காக எந்தக் கட்சியும் இல்லை என்பதைப் புரிந்த நம் நாட்டு மக்கள்; எந்தக் கட்சியிடத்தும் நம்பிக்கையோ! ஆர்வமோ வளர்த்துக் கொள்ளாமல் ஏனோதானோ என்று வாழுகிறார்கள்.
மேலும் படிக்க...
பறவையின் குஞ்சுகள் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வருவது போலப் புதியன சாதிக்க விரும்புகிறவன், தன்னைச் சுற்றியுள்ள அனைத்துவிதமான சொந்தபந்தப் பாசக் கட்டுப்பாடுகளையும், மற்ற சமூக சட்டதிட்டக் கட்டுப்பாடுகளையும் முட்டிமோதிப் போரிட்டு உடைத்தெறிந்து விட்டுத் தியாகச் செம்மலாகப் புரட்சி வாழ்வை மேற்கொண்டேயாக வேண்டும். அதற்காகத் தனிமனித வாழ்வில் பழியையும், இழிவையும், அழிவையும், இழப்பையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் வீரதீரப் போரில் விழுப்புண்கள் தாங்கிப் போராட்ட வாழ்வு வாழத் தயாராக இருப்பவனே பக்குவம் பெற்றவனாகக் கருதப்படுகின்றான்.
மேலும் படிக்க...
நாம் ஒரு பண்பாட்டுப் புரட்சி இயக்கம்! நமக்கெனப் பழம்பெரும் வரலாறு, இலக்கியம், தத்துவம், வாழ்வியல் நெறிமுறை.. முதலியவை உண்டு. ஆனால், கண்மூடிப் பழக்கவழக்கங்களாலும், மூட நம்பிக்கைகளாலும், தவறான தலைமைகளாலும், இனப்பற்று மொழிப்பற்று இல்லாமையாலும், இனஒற்றுமையும் ஒருமைப்பாடும் இல்லாததாலுமே.. அனைத்தும் மண்மூடிப் போயின. எனவே,
நாம் இருளுக்குள் இருக்கிறோம்; நமக்குள் இருள் இருக்கக் கூடாது.
மேலும் படிக்க...
வைகாசிப் பருவ பூசை விழா; உண்மையான இந்துமத ஞானம் வழங்கு திருவிழா; இந்து மறுமலர்ச்சி விழா; தமிழ் கூறும் நல்லுலக விழா; அருள்நெறியாளர்கள் எழுச்சி விழா;
மேலும் படிக்க...