.. எனது முன்னோர்களால் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு மேல் பொற்கலயம் வைக்கவும்; .. .. .. எல்லாக் கோயில்களும் பல்கலைக் கழகமாக, திருமண மண்டபமாக, மனமகிழ் மன்றமாக, கலைவளர் கூடமாக, மருத்துவமனையாக, உயிரின் நலம் பேணும் தெய்வீகக் கலைகளைத் தவத்திலாழ்ந்து பயிலும் தவப் பள்ளியாக; .. ஆக்கிடுதற்குரிய தெளிவான, முறையான, முழுமையான திட்டங்கள் அனைத்தும் தீட்டி முடிக்கப்பட்டு விட்டன ..
மேலும் படிக்க...
நான், உலகுக்கு வழங்குபவை அனைத்தும் உலக முதலினமான தமிழினத்தவர் உருவாக்கிய அறிவுச் செல்வங்களே! இவை தமிழர் புகழ் பாடுபவை மட்டுமல்ல; மனித இனத்தின் நல்வாழ்வுக்கு வழியமைப்பவை.
மேலும் படிக்க...
மானுட நலனுக்காக நான் பெற்ற அநுபவங்களையும், உற்ற ஏட்டறிவுகளையும், பட்டறிவுகளையும் சுமந்து வந்த போதுதான் தயங்கினேன், தடுமாறினேன், சிந்தித்தேன். சமுதாயம் மூடநம்பிக்கையாலும், மடமைப் போக்காலும், வீணான வறட்டுவாதத் தத்துவத்தாலும் புரையோடிக் கிடப்பதைக் கண்டு துணுக்குற்றேன்! ஆழ்ந்து ஆராய்ந்தேன்!
மேலும் படிக்க...
உனக்கு நான் மடல் வரையும் போதெல்லாம் என்னுடைய சுமையை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் பீடாதிபதியாக பதவியேற்றிருக்கும் நான் என்னை முழுமையாக வெளிப்படுத்தி ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்! ஏராளம்!! ஏராளம்!!! அவற்றில் ஓரளவு உன் மூலமாக இச்சமுதாயத்திற்கு வழங்கி வருகிறோம்.
மேலும் படிக்க...
எம் வாழ்க்கை ‘ஒரு தெய்வீகச் சோதனையே’ [My life is the Test of Divinity]. யாம் நஞ்சுண்ட மேனியனாகவே வளர்க்கப் பட்டும்; இம்மாஞாலம் முழுதும் பயிற்சி, முயற்சிகளில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியுற்றும்; அரசயோகியாக, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக, இந்துமதத் தந்தையாக, குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறாராக, பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகச் செயல்பட்டும்; இந்துக்களை ஒற்றுமைப்படுத்தவோ, ஒருமைப்பாடு பெறவோ, ஆட்சியுரிமையை பெறச் செய்யவோ.. முடியவில்லை..
மேலும் படிக்க...
‘கண்டவர் விண்டார்’ என்ற புதுப் பெருமையைப் படைப்பேன், ‘கடை விரித்தேன் நல்ல வியாபாரம் நடந்தது’ என்ற அடைய முடியாப் பெருநிலையை அடைவேன்; என் மொழி, என் இனம், என் நாடு என்பவை எனது மூன்று நாடித்துடிப்பு. நான் எடுக்கும் முயற்சிகளும், பிறர் தடுக்கும் முயற்சிகளும் வீர வரலாற்றின் படிக்கட்டுகள்..;
மேலும் படிக்க...
எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல!
மேலும் படிக்க...
யாம் சாதாரணச் சித்திகளைப் பெற்ற அருளாளர்களைப் போல் ஓரிடத்திலமர்ந்து கொண்டு எம்மைக் காண வருகிறவர்களை எம்முடைய அருள் எல்லைக்குள் கொண்டு வந்து அவர்களுடைய அக, புற போராட்டங்கள் தற்காலிகமாக அமைதியடையும்படிச் செய்து செயல்பட்டிட்டால்; இந்நேரம் உலகம் முழுவதும் எமக்கென ஒரு பெரிய மாபெரும் கூட்டத்தையும், எண்ணற்ற அமைப்புக்களையும் பெற்றிருக்க முடியும். ஆனால், யாம் அப்படிப்பட்ட மாயாநிலைச் செயல் புரிந்து எம்மை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்பியதே இல்லை.
மேலும் படிக்க...
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிக நுட்பமான தொலைநோக்குடன், தான் உண்டாக்கிய திராவிடக் கழகத்தைக் கலைத்திட்ட வரலாற்று நிகழ்ச்சியை தெரிந்து கொள்ளாத திராவிடக் கழகத்தவர்களே நிறைய உள்ளனர். எனவே, பெரியாரின் அந்தச் செயலைப் புரிந்து கொள்ளாதவர்களே இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர் என்பது தவறல்ல. பெரியார் பயந்தது போலவே, அவருடைய குறிக்கோள்களும், கொள்கைகளும் அவருடைய கழகத்துக்கு மட்டுமே உரியவை என்பது போல் அதனுடைய இன்றைய தலைவர், தளபதி கி. வீரமணி செயல்படுகின்றார்.
மேலும் படிக்க...
சில ஆயிரம் பேர் ஒருங்கு கூடி ஒற்றுமையுடன் திட்டமிட்டபடி மிகப் பெரிய திருவிழா நிகழ்த்தியிருக்கிறோம். ஆனால், இத்திருநாட்டுப் பதிப்பகங்களோ, செய்தியேடுகளோ, சமய சமுதாய அரசியல் கலை இலக்கியக் கழகங்களோ, தனிமனிதர்களோ, .. நம் பக்கம் திரும்பவில்லை; நம்மை விமரிசிக்கவில்லை.
ஏன் நமக்கு எதிர்பார்க்கும் வரவேற்பில்லை?
மேலும் படிக்க...
அஞ்சல் வடிவக் கட்டுரைகளும், கட்டுரைகளும், நூல்களும் பழைய நூல்களைத் தேவைக்கேற்ப சிறுசிறு செய்தித் தொகுப்பாக வடிவப்படுத்தும் செய்திக் கட்டுரைகளும், .. எழுதி எழுதிக் கோப்புகள் நூற்றுக்கணக்கில் குவிந்ததுதான் மிச்சம், பயன் ஏதும் உருப்படியாக எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. நெஞ்சத்தில் நெருப்புக் கடல் கொதித்துப் பேரலைகள் மிகுந்து அனல் புயல் வீசவாரம்பித்து விட்டது.
மேலும் படிக்க...
நம்மிடம் அருளுலக ஐயங்களை அகற்றிக் கொள்ள வந்த ஆர்வலர் முதல், நமது அருட்பணியால் நலமடைந்தோர் வரை அனைவரையும் சித்தரடியான், சித்தரடியார், சித்தரடியாள்.. என்று எண்ணற்று உருவாக்கி அருளுலக இளவரசர்களாக, அருட்படைத் தளபதிகளாக, அருட்சேனை வியூகநாயகங்களாக, அருட்படையின் மாவீரர்களாக நாடு முழுவதும் சென்று செயல்படச் செய்தும்.. நம்மால் நன்மையடைந்தவர்கள் கூட நமக்குத் துணையாக வராத நிலையே உருவாகிவிட்டது. இது வருந்தத் தக்கதே.
மேலும் படிக்க...