• முகப்பு>
  • 2017>
  • 2017-06
  • 2017-06

    «ýÒî §º×¸! - ¦¾¡ÌôÒ 2

    ª.Á.ª. ´Õ Ţξ©Ä ªÂ츧Á !

    ¯ûÙ¨È

    «ýÒûÇ §º×¸!

    ¦ºýÈ Á¡¾ ª¾ú §À¡Ä ªó¾ ª¾Æ¢Öõ ÌÕ§¾Å÷ ¾ÉÐ ¾©Ä¨Á Á¡—ì¸÷ ¾¢Õ ¦¿.§º×¸ÛìÌ ±Ø¾¢Â «ïºø¸Ç¢ø ÌÕ§¾Å÷ «È¢ì¨¸Â¢ø «îº¡É «ïºø ¸ðΨøǢý ¦¾¡ÌôÒ ¦ÅǢ¡¸¢ýÈÐ. ÌÕ§¾Å÷ «È¢ì¨¸ 20 Ó¾ø 27 Ũà ¯ûÇ «È¢ì¨¸¸Ç¢ø ¦ÅǢ¡¸¢Â ‘«ýÒî §º×¸!’ «ïºø ÅÊÅì ¸ðΨøû ªó¾ ¦ÅǢ£ðÊø ¯ûÇÉ.


    குருதேவர் அறிக்கை:20
    நண்ப! மத சம்மந்தமான அனைத்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் நம்மவர்கள் மதரீதியாகவே, சமுதாய, பொருளாதார, இலக்கிய, கலை, அரசியல் சிந்தனைகளை வளர்க்கும் வண்ணம் சொற்பொழிவாற்ற வேண்டும். இதற்குத் தேவையான பாடப் புத்தகங்கள் இதுவரை நாம் வெளியிட்டு இருக்கும் அறிக்கைகளும், அறிவிக்கைகளும், புத்தகங்களும், மாதந்தோறும் வெளிவரும் குருதேவர் இதழுமேயாகும்.

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:21
    நாம் மிகமிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், நேரடியாகவும் நமது கொள்கைகள், குறிக்கோள்கள், திட்டங்கள்.. முதலியவற்றை விளக்கியேயாக வேண்டும். இதற்காகவே நாடெங்கும் கையெழுத்துப் பிறதி நூலகங்கள் துவக்கி வைக்கின்றோம்; நம்மவர்கள் தனித்தோ! குழுக்களாக இணைந்தோ வசதி வாய்ப்புப்படி அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களிலும், பிற பொது இடங்களிலும் கூடி நின்று உரையாடல் முறையிலும், வினாவிடை முறையிலும், கலந்துரையாடல் விவாத முறையிலும்; நம்மையும், நமது இயக்கத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முயலுகின்றோம்.

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:22
    நெடுங்காலமாகக் கிறித்தவ மதம் தனது வேத நூலான ‘திரு பைபிளையும்’, பிற கருத்துக்களையும் இப்ரூ (Hebrew) மொழியிலும், இலத்தீன் (Latin) மொழியிலுமே வைத்துக் காத்திட்டது. இதேபோல், இசுலாமும் தனது வேதநூலான ‘திருக்குரானையும்’, மற்றபடி உள்ள மதத் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் அராபிய (Arabic) மொழியிலும், பாரசீக (Persian) மொழியிலுமே பாதுகாத்திட்டது. ஆனால், உலகம் முழுவதும் இந்த இரு மதங்களும் பரவியதால், பிற மொழியாளர்களும் மதத் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் .. புரிந்து கொள்ளுவதற்காக அனைத்தையும் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்துத் தாராளமாக வழங்கிட்டார்கள். இதனைப் பின்பற்றி இந்துமதத்தின் தலைவர்களாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் பிறாமணர்களும், பிறாமண ஆச்சாரியார்களும், பீடாதிபதிகளும், மடாதிபதிகளும் ஏன் சமசுக்கிருத மொழியிலுள்ள மத இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தர முன்வரவில்லை?

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:23
    தமிழர்களுக்கும் ஓர் இக்கட்டான போராட்ட நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், இந்துமதத் தத்துவத்திலும், வரலாற்றிலும் உண்மையான பற்றும், முறையான பயிற்சியும், நிறைவான தேர்ச்சியும் விளைந்திடும். அதாவது, இந்துமதத்தை ஏற்றுக் கொண்ட தன்மானத் தமிழனுக்கும்; அரைகுறை இந்துமத அறிவும், பற்றும், பயிற்சியுமுள்ள அப்பாவித் தமிழர்களின் போலித் தலைவர்களுக்கும் இடையே நேரடியான போராட்டம் துவங்கிடல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:25
    பெரும்பாலான மக்கள் தங்களுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது; எப்படியாவது எதைச் செய்தாவது தங்களது குடும்பத்தைக் காப்பாற்றினால் போதும்.. என்ற அச்சத்திலேயே எதைப் பற்றியும் விமரிசிக்காமல், கவலைப்படாமல், நடைப்பிணமாக வாழுகிறார்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்த அனைத்துத் துறைத் தலைவர்களும், முன்னணியினர்களும் மக்களைச் சுரட்டி, உருட்டி, மிரட்டி, அச்சுறுத்தியும், இச்சகம் பேசியும் செயல்படுகிறார்கள். எனவேதான், நாம் எவ்வளவு எழுதினாலும், பேசினாலும், தொண்டு புரிந்தாலும்,.. நம் பக்கம் கூட்டம் சேரவில்லை! நமது இயக்கம் வலுப்பட வில்லை!

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:26
    தமிழர்கள் எப்பொழுதுமே, தங்களுடைய மொழியையோ! இனத்தையோ! நாட்டையோ! பண்பாட்டையோ! நாகரீகத்தையோ! மதிப்பதில்லை! மதிப்பதில்லை!! மதிப்பதில்லை!!! மதிப்பதேயில்லை! விரும்புவதில்லை! விரும்புவதில்லை!! விரும்புவதில்லை!!! விரும்புவதேயில்லை என்ற பேருண்மை விளங்கிடும். அதாவது எப்படியோ தமிழர்களுக்குக் கூலிச் சிந்தையும், அடிமை நெஞ்சமும் ஏற்பட்டுத் “தங்களுக்கு அன்னியர்கள்தான் தலைவர்களாக இருக்க வேண்டும்” என்ற கருத்தும் விருப்பமும் ஏற்பட்டுவிட்டது. இதைத் திருத்த முற்படுபவர்களே நாம்

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:27
    மதத்துறையில் வாழும் ஒரு சில தனிமனிதர்கள் சுயநலத்தாலோ, உலகியலினாலோ தவறுகளைச் செய்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம் முதலிய துறைகளைச் சார்ந்தவர்கள் தவறுகளையும், குற்றங்களையும் செய்வதற்காகவே வாழுகிறார்கள். அதாவது, மதத்துறையில் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவர்தான் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம் முதலிய துறைகளில் தவறு செய்யாதவர்கள்தான் நூற்றுக்கு ஒருவர் இருவர் என்றிருக்கிறார்கள். இந்தப் பேருண்மையை மிகமிக நயமாகவும், நாகரீகமாகவும் அனைவருக்கும் எடுத்துக் கூறியே நமது மத விடுதலைப் போராட்டப் படையை உருவாக்க வேண்டும்!

    மேலும் படிக்க...


    இந்துமதமே தமிழரை உய்விக்கும்
    பதினெண்சித்தர்கள் கணக்கற்ற கோடி ஆண்டுகளாக அண்டபேரண்டம் முழுவதும் பரவியுள்ள இந்து மதத்தை மிகமிகத் தெளிவாக வரையறுத்து ஏட்டுலகச் செய்தியாகவும் (Theoretical Information), நாட்டுலக நடைமுறை அநுபவ அறிவாகவும் (Practical Knowledge) தூய வாய்மைமிகு அமுதப் பைந்தமிழில் வழங்கி யுள்ளார்கள். இப் பேருண்மைகளை உணரமுடியாத குருடர்களும், உணர மறுக்கும் திருடர்களும்; அன்னியர்களிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு தமிழுக்கும், தமிழாக உள்ள இந்து மதத்துக்கும் துணிந்து துரோகிகளாகச் செயல்படுகிறார்கள்.

    மேலும் படிக்க...


    இருக்கு வேத வாசகம்-1:47:5
    நெறிகளாக பூசை நெறிகள், வணங்கும் நெறிகள், வழிபடும் நெறிகள், கும்பிடும் நெறிகள் எனும் நான்கு வகை நெறிகள் திட்டவட்டமாக விளக்கமாக அருளப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...