இராமலிங்க அடிகளார் தன்னை வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் வந்த ஒருவராகத்தான் அறிமுகப் படுத்திக் கொள்கிறார். அப்படியானால், ஏற்கனவே உள்ள சித்தர்கள், சித்தியாளர்கள், அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், மருளாளிகள், மருளாளர்கள், மருளாடு நாயகங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், .. என்று கூறப்படும் அனைவரின் மரபுகளையும் இவர் ஏற்கிறார் என்றுதான் பொருள்.
மேலும் படிக்க...
அனைத்து வகையான பயிரினங்களும் உயிரினங்களும் தங்கள் தங்களின் முயற்சிகளின் முதிர்ச்சிகளாலும், பயிற்சிகளின் தேர்ச்சிகளாலும் படிப்படியாகப் பல பிறப்புக்களால் அருளாற்றலைப் பெற்று; அமரர், தேவர், தேவதை, தெய்வம், ஆண்டவர், இயவுள், இறை, எல்லா (அல்லா), கடவுள் .. எனப்படும் 48 வகையான நிலைகளை அடைந்திடுவர் ..” என்று கூறும் தத்துவமே மெய்யான இந்து மதத்தின் அடிப்படையும் உள்ளீடும் ஆகும். .. .. .. இதன்படியே சென்ற நூற்றாண்டில் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமத மறுமலர்ச்சிக்காக, வளமைச் செழிச்சிக்காக, வலிமைப் பொலிவுக்காகத் தென்னாட்டில் தோன்றியவர் வடலூர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகளார், வடநாட்டில் தோன்றியவர் இராமகிருட்டிண பரமஅம்சர் ஆகிய இருவரும் ஆவர்.
மேலும் படிக்க...
இராமகிருட்டிணர், உலகம் முழுவதும் அறியப்பட்ட அருளாளராக நிறுவன நிர்வாக அமைப்புக்களோடு வளர்ந்துள்ளார். ஆனால், இராமலிங்க அடிகளாரோ தென்னாடு எனும் நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலத்தாருக்கு யாரென்றே தெரியாமலும்; தமிழ்நாட்டிற்குள் உள்ள (ஏறத்தாழ) இருபது மாவட்டத்தார்களில் இரண்டு மூன்று மாவட்டத்தார்களுக்கு மட்டுமே ஓரளவு தெரிந்தவராய் இருக்கின்ற இரங்கத் தக்க நிலையையும் எண்ணிப் பார்த்திடுக.
மேலும் படிக்க...
இராமகிருட்டிணர் உருவ வழிபாட்டால் காளியை (பவதாரிணி) நேரில் கண்டு தன்னை அருளூற்றாக்கிக் கொண்டார். இரவு பகலாகச் சுடுகாட்டிலும் புதைகாட்டிலும் அமர்ந்து அருளுலக அநுபவங்களைப் பெற்றார். அவரது மெய்யான இந்துமத அநுபவம்தான், அவரை அனைத்து மதங்களையும் மொழிகளையும் சமமாக ஏற்றுக் கொள்ளும்
சித்தர் நெறிச் செல்வராக, ஞானசித்தராக, வேதசித்தராக, நவநாத சித்தராக முதிர்ச்சி பெறச் செய்தது .. ஆனால், அவர் பெயரால் சனாதன தருமமும், வடஆரிய வேதமதமும், சமசுக்கிருத மொழியும், பிறாமண உயர்வும், கற்பனையான பிரம்மஞான வாதமும் .. வெறியாக வளர்க்கப்படும் நிலைகள் வளர்ந்து விட்டன.
மேலும் படிக்க...
குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் செங்கை மாவட்டம் செங்குன்றத்தை அடுத்து காரணோடை கிராமத்தில் கோசலையாற்றங்கரையில் நிறுவும் குவலய குருபீடத்தில், சித்தர் நெறிக் கருகுலத்தில், 1008 கருவறையார் சிவாலயத்தில், அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானத்தில், பதினெண் வெட்டவெளிக் கருவறை கொண்ட அருட்கோட்டத்தில், மெய்யான இந்துமதத் தலைமைப் பீடத்தில், சனீசுவரதேவன் கோவிலில் .. ஓர் இராமகிருட்டிண மடம் துவக்குகிறார்.
மேலும் படிக்க...
வள்ளலார் தமக்கு முன்னே வாழ்ந்திட்ட தமிழக அருளாளார்களைப் பின்பற்றியே செயல்பட்டார் என்பதற்குச் சான்றாக அமையும் பாடல்
மேலும் படிக்க...