• முகப்பு>
  • 2013>
  • 2013-04
  • 2013-04

    º¢ò¾¢¨Ã Á¡¾ ¦ÅǢ£Π(April-May 2013) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114

    żæ÷ ÅûÇÄ¡÷ ÀüȢ º¢ò¾÷ ¸Õçþâý ¬öרøû

    ¯ûÙ¨È

    ªó¾ ª¾Æ¢ø ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û żæ÷ ªÃ¡ÁÄ¢í¸ «Ê¸Ç¡÷ ÀüÈ¢  ¬ö× ¦ºöÐ ¾ÁÐ ¦À¡Ð§Á¨¼ô §ÀîÍì¸Ç¢ø ¦ÅÇ¢ôÀÎò¾¢Â ¸ÕòÐì¸©Ç ÅÆí̸¢ý§þõ.

    1. ¦ºý©É ¦ºõÀ¢Âõ ¾¢Õ Å¢.¸.¿¸Ã¢ø ¯ûÇ ´Õ ÅûÇÄ¡÷ Àº©½ Á¼ò¾¢ø ¬üȢ ¯¨Ã¢ý À̾¢.
    2. żæ÷ ºýÁ¡÷ì¸ ºí¸ò¾¢É÷ ªÃ¡Á¸¢Õðʽ Á¼õ §À¡ø ¯Ä¸Ç¡Å¢î ¦ºÂøÀ¼ §ÅñÎõ ±ýÚ ÅÄ¢ÔÚò¾¢ ´Õ ¦À¡Ð§Á¨¼Â¢ø ¬üȢ ¯¨Ã.
    3. ªÃ¡ÁÄ¢í¸ «Ê¸Ç¡÷ Å¡úÅ¢Âø ¿¢©Ä¸©Ç ¬ö× ¦ºöÐ ¿¢¸úò¾¢Â ¯¨Ã.
    4. ªÃ¡ÁÄ¢í¸ «Ê¸Ç¡÷ º¢Å¦ÀÕÁ¡©Éì ¸ñ¼ ¿¢¸ú ÀüȢ ¬ö×.


    வள்ளலார் உரை 1
    ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் ஒருவன்’ என்று சொல்கிறார் ஐயா! அந்தத் திருக்கூட்ட மரபுகளுக்கெல்லாம் தலைவர்கள், வழிகாட்டுபவர்கள் நாங்கள் பீடாதிபதிகள்; கடவுளைக் கையைப் பிடித்துப் பார்த்து அதற்கு நாடி இருக்கின்றதா என்று சொல்லக் கூடியவர்கள் நாங்கள்! கோயிலைப் பார்த்ததும், வாசலை மிதித்ததும், இந்தக் கோயிலில் சாமி இருக்கிறதா? இல்லையான்னு சொல்லக் கூடியவர்கள் நாங்கள்! மனிதரைப் பார்த்ததும் எப்பொழுது செத்துப் போவான்? எப்பொழுது பிழைப்பான் என்று சொல்லக் கூடியவர்கள் நாங்கள்! இவன் அருளாளனா? மருளாளனா என்று சொல்லக் கூடியவர்கள் நாங்கள்! அந்த ஆற்றலைப் படைத்தவர்கள், இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

    மேலும் படிக்க...


    வள்ளலார் உரை - 2
    ஆறு திருமுறை எழுதி வைத்திருக்கிறார் அல்லவா?; இந்த ஆறு திருமுறையையும் படிக்க வருகிறவர் எல்லாம் வாருங்கள்; ஆண்டு முழுவதும் தங்குங்கள்; 5 வருடம் 6 வருடம் படியுங்கள். கிறித்தவர்கள் எப்படிச் சாமியார்களைத் தயார் செய்கிறார்களோ? இராமகிருட்டிண மடத்திலே எப்படி தயார் செய்கிறார்களோ? இசுலாமியர்கள் எப்படித் தயார் செய்கிறார்களோ? அதுபோல வடலூரில் இராமலிங்க அடிகளார் திருச்சபையிலே தயார் செய்யுங்கள். அப்படி அல்லாமல், நான்கு அருட்பா பாடத் தெரிந்து விட்டால், அவர்களெல்லாம் குருமார் ஆகிவிட முடியுமா? அருட்பாவை பாடத் தெரிந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

    மேலும் படிக்க...


    வள்ளலார் உரை - 3
    சித்தர்களின் உண்மையான தத்துவத்தை விளக்கியவர்தான் சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார். ஆனால், அவர் கூறிய கருத்துக்களைப் புரிந்து கொள்ளக் கூடிய மக்கள் நாட்டிலே இல்லை. அவர் பேரால் எண்ணற்ற மடங்கள் இருக்கின்றன, இயக்கங்கள் இருக்கின்றன, சபைகள் இருக்கின்றன, தலைவர்கள் இருக்கிறார்கள். யாரும் வருத்தப்படக் கூடாது. ஏறக்குறைய யாருக்குமே இராமலிங்க அடிகளாரைப் பற்றி முழு அளவு தெரியாது! அரையாக, முக்காலாகத் தெரிந்தவர்கள்தான் இருக்கிறார்கள்.

    மேலும் படிக்க...


    வள்ளலார் உரை - 4
    இதை கட்டுக் கதை என்று கூறி ஒதுக்காதே. இதைப் போன்ற செய்தி வேறு எந்த மதத்திலாவது அல்லது மொழியிலாவது உண்டா? தமிழன் ஒவ்வொருவரும் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து ‘நான் தமிழன்; என்னுடைய திருஞான சம்பந்தர் தமிழ்மொழியால்தான் குடத்திலிருந்த சாம்பலைப் பெண்ணாக மாற்றினார்’ என்று சொல்ல வேண்டும். ஆனால் தமிழன் ‘பகுத்தறிவு’, ‘சீர்திருத்தம்’ என்று சொல்லிக் கொண்டு தன் மொழியின் வரலாற்றை பகுத்தறிவோடு ஆராயாமல், தன் வரலாற்றை குப்பையில் போட்டு விடுகிறார்கள், ஆனால் இதே பகுத்தறிவு, சீர்திருத்தம் பேசுபவர்கள் மற்ற மதங்களின் வரலாற்றை ஏற்றுக் கொள்கிறார்கள். .. .. ..

    மேலும் படிக்க...