இந்துமதத்துக்காக நாற்பத்தெட்டுப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் நாற்பத்து மூன்று இலட்சம் ஆண்டு பரந்த காலவெளியில் தோன்றுவார்கள். இவர்களே, காலவேகத்தாலும், கருத்து மாற்றங்களாலும், மானுடக் கற்பனைகளாலும், பிற தவறுகளாலும் இந்துமதத்துக்கு ஏற்படக் கூடிய எல்லாக் குறைகளையும், கறைகளையும், தேக்கங்களையும், மயக்கங்களையும், தளர்ச்சிகளையும், அயர்ச்சிகளையும் .. அகற்றுவார்கள். .. .. .. 48 வகையான அருட்கலைகளை வழங்குவார்கள்; விண்ணிலுள்ள ஒன்பது கோள்களும், பன்னிரண்டு இராசிகளும், இருபத்தேழு மீன்களும் ஆகிய நாற்பத்தெட்டும் நிகழ்த்தும் ஆட்சியைக் கட்டுப்படுத்திடும் பரிகாரங்களைச் செய்வார்கள்; ‘விண்ணையும் மண்ணையும் இணைப்பார்கள்’; ..
இப்படிப்பட்ட பீடாதிபதிகளே குருவாணை இடுவார்கள்.
மேலும் படிக்க...
குருதேவரைப் பற்றியோ, சித்தர் நெறியைப் பற்றியோ கற்பனைகளையும், கனவுகளையும் வளர்த்துக் கொள்ளக் கூடாது. எனவே தெரிந்ததை மட்டும் கூறுங்கள். தெரியாததைக் கேட்டு விளக்கம் பெற்றுக் கூறுங்கள். நம் அருட்பணியால் பொருளுலக நலிவுகளும், மெலிவுகளும், தேக்கங்களும், ஏக்கங்களும், ஏமாற்றங்களும், சீற்றங்களும், இழிவுகளும், பழிகளும், சுரண்டல்களும், கொள்ளைகளும், துரோகங்களும், விரோதங்களும், தீய சத்திகளின் கடுமைகளும், கொடுமைகளும், மந்திரவாதிகளின் பாதிப்புகளும், கோள் மீன் இராசி முதலியவற்றின் சோதனைகளும், .. முறையாகவும், படிப்படியாகவும், நிறைவாகவும் அகற்றப் பட்டே தீரும்.
மேலும் படிக்க...
இம்மண்ணுலகில் பதினெண்சித்தர்கள்தான் ஆரம்பக் காலம் முதல் எண்ணற்ற மொழிகள், இலக்கியங்கள், கலைகள், அறிவியல்கள், சமுதாயக் கட்டமைப்புச் சட்டதிட்டங்கள், அரசியல் நெறிமுறை மரபுகள், தனிமனித வாழ்வியல் வகைகள், .. முதலியவைகளைப் படைத்துக் கொடுத்து வருகிறார்கள். .. .. எனவேதான், யாம் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் .. என்ற சாதனைமிகு அருட்பட்டங்களோடு குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் என்ற நிலையிலிருந்து செயல்பட்டும் கூட; உலக அருளாளர்கள் எமக்கு
இந்துமதத் தந்தை என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
மேலும் படிக்க...
மணு என்பவர் ஒரு ஆதி மூலப் பதினெண்சித்தர். அவர் வழங்கியதே மணு நீதி.
மேலும் படிக்க...
.. அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான்; இம்மண்ணுலகில் எழுதப்படுகின்ற இலக்கியங்கள் அனைத்துக்கும் வழிகாட்டியாக, அடிப்படைகளாக, நெறிகாட்டிகளாக, முறை விளக்கிகளாக, அண்டபேரண்டங்களில் வளரும், வளர்ந்திட்ட, வளர்ந்து கொண்டிருக்கின்ற, வளரப் போகின்ற முத்தமிழ் மொழியின் இலக்கியங்களின் தொகுப்புகளாக; மூன்று வகைப்பட்ட இலக்கியங்கள் .. ..
மேலும் படிக்க...