• முகப்பு>
 • 2019>
 • 2019-02
 • 2019-02

  ªù×ĸ¢ý Ó¾ø Á¡¦ÀÕõ ¾òЊšâ;¡ý ¿õ ÌÕ§¾Å÷

  ¯ûÙ¨È

  1. “ªù×ĸ¢ý Ó¾ø Á¡¦ÀÕõ ¾òЊšâ;¡ý ¿õ ÌÕ§¾Å÷ - «Ê¡ɢý ÌÕ¿¢©Ä Å¢Çì¸õ” - 15-2-1984ªø Ţø¡æ÷ ¼¡ì¼÷ ¿¡¸Ã¡ÍÅ¢üÌ ÌÕ§¾Åâý «Ê¡ý ªÃ¡.ªÃÌ¿¡¾ý ŨÃó¾ Á¼ø.

  2. “¿ÁÐ ¿¢©Ä Å¢Çì¸ «ïºø” - 14-2-1984ªø ÌÕ§¾Åâý «ÖÅĸ ªÕôÀ¡Ç÷ ¦Àí¸éÕ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ªÃ¡.¦º.§Åí¸ð¼ÃÁ½ÛìÌ Å¨Ãó¾ Á¼ø.

  3. “¸ÕòÐô §À¡Ã¡ð¼ Á¼ø” - 14-2-1984ªø ÌÕ§¾Å§Ã ¾ÁÐ ¦Àí¸éÕ «Ê¡ý ¾¢Õ ªÃ¡.¦º.¦Åí¸ð¼ÃÁ½ÛìÌ Å¨Ãó¾ Á¼ø.

  4. “³ó¾¡ÅÐ Óô¦ÀÕ Å¢Æ¡×õ, «.Å¢.¾¢. ¦ºÂø¿¢©Ä ³Â Å¢Çì¸Óõ” - ÁШÃ, ¸¡¨ÃìÌÊ Åð¼¡Ã «Ê¡ý¸ÙìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â ¸ÕòРŢÇì¸ Á¼ø.

  5. “º¢ò¾ÃÊ¡ý ¿¢©Ä Å¢Çì¸õ - 5” - ª¾ü¸¡É ÌÈ¢ôÒì¸û ÁðΧÁ ¯ûÇ ÍÕì¸ Å¢Çì¸ì ¸ðΨÃ.

  6. “º¢ó¾¢ì¸ Å¡Õí¸û! ª.Á.ª.¢ø §ºÕí¸û” - «îº¢ð¼ «È¢Å¢ì¨¸Â¢ý ¿¸ø.


  அடியானின் குருநிலை விளக்கம்
  ஐநூறு கோடியாண்டு வயதை உடைய இந்த மண்ணுலகத்தை விட மூத்தவர்கள் பதினெண்சித்தர்கள். அவர்கள் விண்வெளியிலுள்ள எண்ணற்ற கோடி அண்டங்களில் தங்களுடைய தாய்மொழியான தமிழ்மொழியில் கணக்கற்ற கோடியாண்டுகளாக வளர்த்து வரும் மதமே இந்துமதம். அதன் வரலாறும், வளமும், வலிவும், பொலிவும், வழங்குபயன்களும் தெரியாத, அறியமுடியாத, புரியமுடியாத .. அப்பாவிகள் எல்லாம் இந்துமதத்தை வைத்து வயிறு பிழைக்கின்ற நேரத்தில் நமது குருதேவர் வாய்மூடி மெளனியாக இருப்பதுதான் சிறந்தது. ஏனெனில், மந்திர, தந்திர, மாயவித்தைகளைக் காட்டி வளர்க்கப்பட்டது அல்ல நமது இந்துமதம்.

  மேலும் படிக்க...


  நமது நிலை விளக்க அஞ்சல்
  ‘ஓட்டைச் சட்டி என்றாலும் இட்லி வெந்தால் போதும்’’ என்ற நிலையில்தான் நமது செயல்கள் இருக்கின்றன. எனவே, எதிர்பாராத தோல்விகளோ, சோதனைகளோ நிகழ்ந்து விட்டால் யாரும் நமது குருதேவரை குறை கூறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், குருதேவர் யார் எவ்வளவு கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி எல்லோருக்கும் அருள்வழங்கும் பூசைகள் செய்து கொண்டேதான் இருப்பார். பயன்கள் கூட குறைவாக இருக்கத்தான் செய்யும். அவர் இதனைக் கூற மாட்டார். என்னைப் போன்றோர்தான் கூற வேண்டும்.

  மேலும் படிக்க...


  கருத்துப் போராட்ட மடல்
  யார் வேண்டுமானாலும் பொருளையும் புகழையும் சேர்க்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை வழங்கியும்; செயல் சித்தாந்தத்தைப் பயிற்சியாக அளித்தும் செயல்படுவது பல கோடியில் ஒருவர்க்குக் கூட இயலாத ஒன்றே. அதுவும் சொந்த ஊர், சொந்தக்காரர், தாய்நாடு, தாய்மொழி, தாயக இன மக்கள் என்ற பற்று; பொருள் வெறியும், புகழ்வெறியும் உடையவர்களிடம் இருக்கவே இருக்காது என்ற பேருண்மை புரிந்திட்ட எம்மால் எமது தாய்நாட்டுக்கும், மொழிக்கும், இனத்துக்கும் உழைக்காமலிருக்க முடியவே முடியாது. எனவே, யாம் வயிறு பிழைக்க முயலவே இயலாது.

  மேலும் படிக்க...


  ஐந்தாவது முப்பெரு விழா
  பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மட்டும்தான் ஊழ்வினை, வினை, செய்வினை, சூழ்வினை, விதி, யோகம், பாரம்பரியம், .. முதலியவைகளையெல்லாம் கடந்து யார் எந்தவிதமான! அருளுலக நிலையினை! விரும்பினாலும் அதனை உடனே அவர்களுக்கு வழங்க முன் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் மறைகள் (இரகசியங்கள்) என்று காப்பாற்றப் படுபவைகளையும் கூடப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள்தான் எல்லாப் பொதுமக்களுக்கும் வழங்குகின்ற உரிமையினையும், ஆற்றலையும் பெற்றிருக்கின்றார்கள். எனவேதான், பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மட்டுமே உலகியலை வென்று அவரவர் காலத்தில் அருட்பேரரசுகளை (The Divine Kingdoms) உருவாக்க முடிகின்றது. இவர்களுக்கு உலகியலிலே மறுப்பும், எதிர்ப்பும், ஒத்துழையாமையும் அதிகமாகும் போது இவர்கள் விண்வெளியிலும், நிலவறையிலும், மூலக் கருவறைகளிலும் நிறைந்து விடுகின்றார்கள். இருப்பினும் இவர்களின் துணிச்சலான செயல்களால் அருளுலக இருளெல்லாம் அகன்று பேரொளி பரவி விடுகின்றது. இதுதான் அ.வி.தி.யின் சுருக்க விளக்கம்.

  மேலும் படிக்க...


  சித்தரடியான் நிலை விளக்கம் 5
  அரசபாரம்பரியம், குரு பாரம்பரியம், குரு வாக்கு, குரு வாசகம், இலக்கிய பாரம்பரியம் எனும் ஐந்து நூல்களிலிருந்து நினைவுக்கு வந்த வாசகம் மட்டும் இங்கே குறிக்கப் படுகின்றன. எந்த வாசகம் எந்த நூலைச் சார்ந்தது என்று குறிப்பிட முடியாத நினைவு நலிவு வந்து விட்டதால் தான் கற்றவைகளை (அ) பெற்றவைகளை உலகுக்கு வழங்கியேயாக வேண்டும் என்ற உணர்வுப் போக்கில் 27⁄5⁄83 அன்று இரவு 11.00 மணியளவில் ஞாலகுரு குருமகாசன்னிதானம் சித்தர் கருவூறார் அவர்களால் வழங்கப்பட்டது.

  மேலும் படிக்க...


  சிந்திக்க வாருங்கள்! இ.ம.இ.யில் சேருங்கள்
  இன்றைய இளைஞர் சமுதாயமும் வருங்காலச் சந்ததிகளும் சிக்கல்களைத் தீர்த்து நல்வாழ்வு பெற வேண்டுமானால் மொழிவழி இன ஒற்றுமை, இனக் கட்டுக்கோப்பு, இனநலம் பேணல், இன உரிமைக்கும், பெருமைக்கும் போராடல், .. முதலியவை இத் திருநாடு முழுதும் அனைத்து மொழியினரிடையேயும் ஏற்பட வேண்டும். இதற்குரிய வழியைப் பதினெண்சித்தர்களின் இந்துமதம்தான் வழங்குகிறது. ‘உலகமெல்லாம் உள்ள அனைத்து மொழிகளிலும் வழிபாடு, பூசை, தவம், வேள்வி, .. முதலிய அனைத்தும் செய்து பத்தி, சத்தி, சித்தி, முத்தி பெறலாம்’ - என்ற விஞ்ஞானச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத் தத்துவத்தை மெய்ஞ்ஞானமாக வழங்குகிறது சித்தர் நெறி.

  மேலும் படிக்க...


  சித்தர் ஏளனம்பட்டியாரின் கொள்கை விளக்க வாசகங்கள்
  சித்தர் ஏளனம்பட்டியாரின் இ.ம.இ. கொள்கை விளக்க வாசகங்கள்: “மதம்தான் அனைத்து மிதவாதங்களையும் தீவிரவாதங்களையும் கட்டுப்படுத்தும்”;

  மேலும் படிக்க...


  வியத்தகு குருபாரம்பரியச் செய்திகள்
  ‘குரு பாரம்பரியம்’, ‘அரச பாரம்பரியம்’, ‘இலக்கிய பாரம்பரியம்’ என்ற மூன்றும் அனாதிகாலம் தொட்டு எழுதப்பட்டு வருபவை. பதினெண்சித்தர் பீடாதிபதிகள் எழுதுபவை மட்டுமே இரகசியமாகக் காக்கவும், வளர்க்கவும், செயல்நிலை பெறவும் வேண்டும். தமிழ்க் குழந்தைகள் யவனம், சோனகம், பிராகிருதம், சமசுக்கிருதம்.. முதலிய பிற மொழிகளைப் படிக்கும் வரை இனத்துக்கும் மொழிக்கும் நாட்டுக்கும் துரோகிகள் தோன்றிக் கொண்டுதான் இருப்பார்கள். பதினெட்டாண்டுப் பருவம் கடந்த பிறகே பிறமொழி கற்கும் முறைதான் கற்புக் கெடாமல் இனப்பற்றும் பாசமும் ஒற்றுமையும் பெற்று வாழச் செய்யும் தமிழர்களை.

  மேலும் படிக்க...