• முகப்பு>
  • 2019>
  • 2019-04
  • 2019-04

    À¢ÈÅ¢ô ¦ÀÕí¸¼ø ¸¼ìÌõ §¾¡½¢ô À½ò ÐÅì¸õ

    ¯ûÙ¨È

    1. “À¢ÈÅ¢ô ¦ÀÕí¸¼ø ¸¼ìÌõ §¾¡½¢ô À½ò ÐÅì¸õ” - 28-04-1984ªø ¾¢Õ ¾¢Õ À羺¢ ÓÕ¸ý ±ýÀÅÕìÌ ÌÕ§¾Å÷ ŨÃó¾ «ïºø.

    2. “¾¢ÕÅÕðÀ½¢Â¢ø Àí̦ÀÈ Å¢ÎìÌõ ¾¢Õ§Å¡©Ä” -  28-04-1984ªø ¾¢Õ ¾¢Õ ªÃ¡§ºó¾¢Ãý ±ýÀÅÕìÌ ÌÕ§¾Å÷ ŨÃó¾ «ïºø.

    3. “¾¢Õ Á¡Åð¼ «ÕÇ¡ðº¢ô À½¢ «¨ÆôÒò ¾¢Õ§Å¡©Ä” - §Á 1984ªø ¾¢Õ ¾¢Õ À¢ÃÀ¡¸Ãý ±ýÀÅÕìÌ ÌÕ§¾Å÷ ŨÃó¾ «ïºø.

    4. “¦ºÂøÅ¢Çì¸ °ì¸ «È¢×¨Ã ¬©½” - 16-03-1984ªø ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ §ÅõÀÊ¡ý Á½¢ «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    5. “¦ºÂø¿Äõ À¡Ã¡ðÎ Á¼ø” - 5-4-1984ªø ¾¢ÕÅûé÷ ¾¢Õ ÊøÄ¢ ±ýÀÅÕìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â Á¼ø.

    6. “ÅÇÅÇ÷ ÅÆ¢¸©Çî º¢ó¾¢òÐ ¯ÕÅ¡ì¸ §ÅñÎõ ¾¢Õ§Å¡©Ä” - 2-6-1984ªø ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ «ÆÌÁ©Äô À¢û©Ç «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    7. “«ÕÙĸ ªÇÅÃ͸û «È¢Å¢ôÒô À½ ¦ÅüÈ¢ ¿ýÈ¢ Á¼ø” - 25-6-1984ªø À¡©ÇÂí§¸¡ð¨¼î º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ¦ºó¾¢øÃ¡Í «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    8. “«ÕÇ¡ðº¢ì¸¡É ¾£Ãò ¾¢Â¡¸ò ¾¢ð¼ Å¢Çì¸ Á¼ø” - 7-3-1985ªø ´Ã¢º¡Å¢ø ªÕó¾ Íó¾ÃáÁÛìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    9. “¿¡õ ²ý Ýò¾¢Ãý” - ‘Ţξ©Ä’ Àò¾¢Ã¢¨¸Â¢ø 1984ªø ¦ÅǢ¡É, ¦Àâ¡÷ «Å÷¸Ç¢ý ¯¨Ã¢ý ´Õ À̾¢.


    பிறவிப் பெருங்கடல் கடக்கும் தோணிப் பயணத் துவக்கம்
    28-04-84இல் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், அரசயோகி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு, இந்துமதத் தந்தை, பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, தமது திருக்கூட்டத்தார்களோடு துவக்கியிருக்கும் பிறவிப் பெருங்கடல் கடக்கும் தோணிப் பயணத் துவக்க அறிவிப்பழைப்புத் திருமடல்.

    மேலும் படிக்க...


    திருவருட்பணியில் பங்குபெற விடுக்கும் திருவோலை
    மதத்துறையில் எழுப்பப்படும் எல்லா வினாக்களுக்கும் விடைகூறும் ஆற்றலும்; எல்லா ஐயங்களையும் அகற்றும் விவேகமும்; எல்லா அறியாமைகளையும் எதிர்த்துப் போராடும் தீரமிக்க வீரமும்; மனித வாழ்வின் உணர்வுகளுக்கும், ஏக்கங்களுக்கும், எரிச்சல்களுக்கும், எல்லாப் புரியாமைகளுக்கும் .. முழுமையாகப் பதில் கூறும் தரமும் திரமும் உரமும்; .. உண்மையான இந்துமதத்துக்குத்தான் உண்டு. அதாவது, பதினெண்சித்தர்களின் சித்தர்நெறிக்கே சொல்லளவிலும், செயலளவிலும் மதத்துறைக்குரிய அனைத்து விளக்கங்களும் வழங்கிடும் பேராற்றல் உண்டு. எனவேதான், தங்களைப் போன்றோர் சித்தர்நெறி காக்கவும், செழிக்கச் செய்யவும் முயற்சிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.

    மேலும் படிக்க...


    திருச்சி மாவட்ட அருளாட்சிப் பணி அழைப்புத் திருவோலை
    இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இலைமறைகாயாகவே இருந்திட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ.), அருட்பணி விரிவாக்கத் திட்டம் (அ.வி.தி.), அருளுலக ஆர்வலர் கழகம் (அ.ஆ.க.), உலக அருளாளர் திருச்சபை (உ.அ.தி.ச.), கடவுளை வழிபடுவோர் கழகம் (க.வ.க.) .. அமைப்புக்களால் மலைகளிலும், காடுகளிலும், .. தனிமைத் தவத்தில் மூழ்கித் தாங்கள் மட்டும் பயனடையும் திருவருட்செல்வர்கள்தான் மிகுந்திட்டார்கள். இதனால், இவ்வுலக முதல் மதமும், மூல மதமுமான இந்துமதம் அதனுடைய குழந்தைகளாகப் பிறந்த மதங்களாலேயே நலிவும், சிதைவும், சீர்குலைவும் அடைய நேரிட்டு விட்டது.

    மேலும் படிக்க...


    “செயல்விளக்க ஊக்க அறிவுரை ஆணை”
    நாம் தனிமனித நெஞ்சப் புரட்சி, சிந்தைப் புரட்சி என்னும் இரண்டால்தான் பண்பாட்டுப் புரட்சி, நாகரீகப் புரட்சி என்னும் இரண்டையும் செய்யமுடியும் என நம்புகிறவர். அப்பொழுதுதான் மொழிவெறி, ஆதிக்கம், ஏகாதிபத்தியம், சுரண்டல் .. முதலியவை ஒழியும். அதன் அடிப்படையில் எல்லா இனங்களும் தன்மானத்தோடும், தன்னுரிமையோடும், தனக்கே உரிய பெருமையோடும் வாழ முடியும் என்ற தத்துவத்தை விளக்கும் இந்துமதத்தின் வாயிலாகச் செயல்படும் ஒரு சமுதாய மறுமலர்ச்சி இயக்கமாக (பண்பாட்டுக் கழகம் = A Cultural Organization) வளருவோம்.

    மேலும் படிக்க...


    செயல்நலம் பாராட்டு மடல்
    இம் மண்ணுலகம் தோன்றி 500 கோடியாண்டுகளில் சித்தர்களைத் தவிர தோன்றிய அருளாளர்கள் யாராவது தமக்குச் சமமாக ஓர் அடியானையாவது தோற்றுவித்து இருக்கின்றார்களா? இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை! ஆனால், எமது குருதேவரோ! தமது காடோடி, கடலோடி, நாடோடி வாழ்க்கையில் கழித்திட்ட 36 ஆண்டுக் கால வாழ்விலும், தற்போது உலகியலில் இருந்து வரும் 12 ஆண்டுக் கால வாழ்விலும் தமக்குச் சமமாகவே பல நூறாயிரக்கணக்கான அடியான்களை, அடியாள்களை, அடியார்களை .. உருவாக்கியுள்ளார். இது அவரின் பரந்த விரிந்த போக்கையே குறிக்கின்றது.

    மேலும் படிக்க...


    வளவளர்ச்சி வழிகளைச் சிந்தித்து உருவாக்க வேண்டும் திருவோலை
    தமிழர்களை ஒற்றுமைப் படுத்திட; தன்னம்பிக்கை பெறுமாறு செய்திட; இன உணர்வும், மொழி உணர்வும் பெற்று உரிமைப் போர் புரியும் வீரம் பெற்றிடச் செய்யும் ஒரே சத்தி தமிழரின் மதமான இந்துமதத்துக்குத்தான் உண்டு. எனவே, இந்துமதத்தின் வரலாறு, தத்துவம், நடைமுறை, செயல்நிலை, இலக்கியம் ஆகியவற்றில் ஏட்டறிவையும், பட்டறிவையும் குறிப்பிட்ட அளவு வழங்கித்தான் அருட்படை திரட்ட வேண்டும்.

    மேலும் படிக்க...


    அருளுலக இளவரசுகள் அறிவிப்புப் பயண வெற்றி நன்றி மடல்
    இம்மண்ணுலக மக்களனைவரையும் ஒரே குடும்பத்தவர் போல் பற்றோடும், பாசத்தோடும், ஒற்றுமையோடும் வாழச் செய்யும் சித்தர்நெறியின் நாற்றங்கால் தமிழர்கள்தான். அதனால், இவர்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகி ஒருமித்த நிலையில் பாடுபட்டுப் போராடி உரிமையும், பெருமையுமுள்ள விடுதலை வாழ்வு அமைத்திட்டால்தான் உலகம் சித்தர் நெறியைப் புரிய நேரிடும்! விரும்ப நேரிடும்! நம்ப நேரிடும்!

    மேலும் படிக்க...


    அருளாட்சிக்கான தீரத் தியாகத் திட்ட விளக்க மடல்
    உண்மையான இந்து மதமே! இந்தியப் பண்பாடு, இந்தியர்கள், இந்துக்கள் என்ற சொற்களின் அடிப்படை. அனைத்து மொழியினரும் விடுதலை பெற்ற கூட்டாட்சி இந்தியாவில் அமைய அனைத்து மொழிகளையும் கெடுக்கும் சமசுகிருதமும்; அனைத்து இனங்களையும் கெடுக்கும் வடஆரியரும், பிறாமணரும் ஒரு முடிவுக்கு வந்து தனித்தன்மை அழிந்து அனைத்தோடும் கலக்க வேண்டும். இல்லையேல், பீடாதிபதிகளின் வாக்குகள் செயலாகிச் சாம்பலாக்கப்படுவர்; இந்திய ஒற்றுமை இந்து மதத்தால்தான் நிலைக்கும். இந்தியாவை இ.ம.இ.தான் காக்க முடியும்

    மேலும் படிக்க...


    “நாம் ஏன் சூத்திரன்”
    உனக்கு ஒரு சாமி வேண்டுமென்றால் அது உன்னைப் போல் அல்லவா இருக்க வேண்டும்? உன்னைத் தொட்டாலும், உன் நிழல் பட்டாலும் தான் செத்துப் போவதாகக் கூறுவதா உனக்கு சாமி? வெட்கமில்லையா உனக்கு? கோயில் கட்டுவதும் நீ, கும்பாபிசேகம் செய்வதற்குப் பொருள் கொடுப்பது நீ. சாமியின் பூசைக்கும், சாப்பாட்டிற்கும் படியளப்பதும் நீ. அந்தச் சாமிக்கு தன்னைப் போல் உச்சிக்குடுமி வைத்து விட்டு தன்னைப் போல் பூணூலும் போட்டுவிட்டு நீ கொடுத்த துணியைத் தன்னைப் போல் பஞ்ச கச்சம் வைத்து அதற்கு உடுத்தி விட்டு அதன்மீது மாட்டு மூத்திரத்தைத் தெளித்து விட்டு ‘சாமிக்கு உயிர் வந்துடுத்து, இனி எட்டி நில், தொடாதே’ என்று உன்னிடம் கூறிவிடுகிறானே பார்ப்பான்.

    மேலும் படிக்க...