நாம் மொழி, இனம், பண்பாடு, வரலாறு, இலக்கியம், அரசு, சமுதாயம், தொழில், பொருளாதாரம், பொதுவுடமை, உலக ஆன்மநேய ஒருமைப்பாடு, .. என்று மிக மிகத் தெளிவான கொள்கைகளையும், குறிக்கோள்களையும் உடையவர்கள். எனவேதான் மற்றவர்களைப் போல் திடீரென்று வளவளர்ச்சி பெறவில்லை. சாமியார்கள், குறிகாரர்கள், சோதிடர்கள், சித்து விளையாடல்காரர்கள், .. முதலியோரெல்லாம் பொருளும், புகழும், பதவியும், செல்வாக்கும் மிகக் குறுகிய காலத்தில் பெற்றிடும் போது நாம் ஏன் பெறவில்லை?
மேலும் படிக்க...
நம்மவர்களுக்கிடையே வளர்ந்து வரும் கருத்து விளக்க வளர்ச்சி வரலாற்று இலக்கியமாகவே மாறி வருகின்றது. நம்மவர்கள் தங்களுக்கு வருகின்ற அஞ்சல்களிலும், பிறருக்கு அனுப்பும் அஞ்சல்களிலும் சிறப்பு வாய்ந்தவை எனக் கருதுபவைகளை நகலெடுத்து குருதேவருக்கும் பிறருக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். ஏனென்றால், நமது இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், தலைவரின் செயல் திட்டங்களையும் .. வினாக் குறி எழுப்பி ஐயங்களைப் போக்கிக் கொள்ளும் பழக்கம் இருக்கின்றது. இந்த ஒழுங்குமுறைதான் அல்லது செயல்முறைதான் நம்மவர்களுக்கிடையில் கொள்கைத் தெளிவையும், பற்றையும், பாசத்தையும், ஒற்றுமையையும் வளர்த்திடும்! வளர்த்திடும்! வளர்த்திடும்!
மேலும் படிக்க...
நாம் பசனைக் கூட்டம் அல்ல. பாராயணமோ, கதா காலச்சேபமோ, ஆடம்பர விழாவோ நமது கொள்கையல்ல, செயல்திட்டமல்ல. அனைத்து மதங்களும், மொழி இன பண்பாட்டு விடுதலையோடு, பூங்காவில் பூத்த மலர்கள் போல் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இந்து மதத் தலைவர்கள், சித்தியாளர்கள், உயர் சாதிக்காரர்கள்; உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளோடு சேர்ந்து கொண்டு கற்பனைகளையும், பொழுதுபோக்குகளையும் வளர்த்து வருகிறார்கள். இவர்கள் விரும்பியே மதப் போர்களையும், சாதிச் சண்டைகளையும் வளர்க்கிறார்கள். இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் நாம்.
மேலும் படிக்க...
யாம் மற்ற சாமியார்கள், பூசாறிகள், சித்தியாளர்கள், அருளாளர்கள், மதத் தலைவர்கள், ஆச்சாரியார்கள், பீடாதிபதிகள் .. முதலியோர்கள் போல கூட்டம் சேர்ந்தால் போதும் என்று செயல்படுபவர்கள் அல்ல. எம்மைப் பொறுத்தவரை பயிர் செய்யப்பட்ட காய்கறிகளையும், கனிவகைகளையும் வழங்குபவர் அல்ல யாம். மேற்சொன்ன காய்கறியையும், கனிவகைகளையும் பயிர் செய்கின்ற விதைகளையும், நாற்றுக்களையும் பயிர் செய்பவர்கள் ஆவோம் யாம். இதனைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்படுக.
மேலும் படிக்க...
பொதுவாகவே சித்தர்களின் கருத்துக்கள் விதைப் பண்ணைகளிலிருந்து வழங்கப் படும் சத்தான வித்துக்களைப் போன்றவையே. எனவே, விதைகளை விதைத்துப் பயிர் செய்து விளைச்சலை அறுவடை செய்து கொள்ளுவது போல் குருதேவர் ஏட்டிலும், மற்ற தனிப் புத்தகங்களிலும், அச்சிட்ட அறிக்கைகளிலும், அறிவிக்கைகளிலும், பீடாதிபதியின் கட்டுரைகளிலும், அஞ்சல்களிலும், நேரடிச் சொற்பொழிவுகளிலும், கலந்துரையாடல்களிலும், .. கிடைக்கின்ற கருத்து வித்துக்களை நம்மவர்கள் தங்களுடையச் சிந்தனையோட்டங்களிலும், எண்ண வயல்களிலும், உணர்வுக் காடுகளிலும், .. விதைத்துப் பயிர் செய்து அறுவடை செய்து வளமான வலிவான தத்துவ வாழ்வு வாழுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
மேலும் படிக்க...
நாயன்மார்களும், ஆழ்வார்களும் பெற்றுத் தரமுடியாத உயர்ச்சியை இந்து மதத்துக்கு பெரியார் ஈ.வெ.ரா. ஈட்டித் தந்தார் என்பதை உணர முற்படுங்கள். பெரியார் ஈ.வெ.ரா.வின் வழியில் இந்துமத மறுமலர்ச்சிப் பணிகள் நிகழ்ந்தால்தான் மத மடமைகள், சுரண்டல்கள், ஆபாசங்கள், பயனற்றவைகள், தவறுகள், .. முதலியவை அகற்றப்படும். பின்னர்தான் பதினெண்சித்தர்கள் படைத்த
சித்தர் நெறி யெனும் இந்துமதத்தின் பயன்கள் உலகுக்குத் தெரியும்.
மேலும் படிக்க...