முகப்பு>
2019>
2019-10
2019-10
ªó¾¢Â¡Å¢ý â÷Å£¸ì ÌÊ¸Ç¡É ¾Á¢Æ÷¸Ç¢ý ãÄ Á¾§Á ªóÐÁ¾õ!
¯ûÙ¨È
1. “¦ºÂø ¬ì¸ °ì¸ô À¡Ã¡ðÎò ¾¢Õ§Å¡©Ä” - ÌÕ§¾Å÷ 28⁄07⁄1985ªø ¾ÁÐ Á¡—ì¸÷ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ¦Å.¦º¸¾£ºý «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.
2. “¦ºÂøÅ¢Çì¸î º¢ò¾¡ó¾ Á¼ø” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ÀÃÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌ ¾©Ä¨Áô ¦À¡ÚôÀ¡Ç÷ «Å÷¸Ç¢ý ãÄõ 06⁄08⁄1985ªø ±Ø¾¢Â ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.
3. “¦ºÂøÅ¢Çì¸ ¯º¡×ò ¾¢ÕÅ¡©½” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ÀÃÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌ 22⁄08⁄1985ªø ±Ø¾¢Â ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.
நம்மவர்கள் இம்மண்ணுலகின் மூல தத்துவத்தை, முதல் தத்துவத்தை, கால ஓட்டங்களை வென்ற தத்துவத்தை, கருத்துப் போராட்டங்களையும் மாற்றங்களையும் வென்ற தத்துவத்தை நூலறிவாகவும், செயலறிவாகவும், துய்ப்பறிவாகவும், உய்த்துணரும் மெய்யுணர்வாகவும் .. பெறக் கூடிய அரிய பெரிய கூரிய சீரிய நேரிய உரிய உயரிய வாய்ப்பினைப் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் காலத்தில் வாழ்வதாலும், நேரடியாக அவரோடு பழகுவதாலும்தான் பெற்றுள்ளோம் என்ற அறிவியல் நிலையோடு செயல்பட்டால் போதும். அதுதான் அருட்புரட்சியை அறிவு விழித்த நிலையில், விஞ்ஞானச் சூழலில், பகுத்தறிவுப் போக்கில் நிகழவும்; உலகியல் பயன்மிக்க ஒன்றாகச் செயலாக்கவும் செய்யும்.
மேலும் படிக்க...
நாம் எதையும் உலகியலாக சிந்தித்து ஒரு சில செயல்விளக்கச் சித்தாந்தங்களை உருவாக்கிக் கொண்டு அதனை அருளுலகத்தாரிடம் அருளுலக நாயகங்களான தாத்தாக்கள் ஆத்தாக்களிடம் கூறி ஒப்புதலும், சம்மதமும் பெற்றுத்தான் செயலாற்றுகின்றோம். எனவே, அனைத்துத் தனிமனிதர்களின் விருப்பங்களையும், அநுபவங்களையும், அநுபவச் சிந்தனைகளையும், ஆர்வமிகு செயல்திட்டங்களையும், உயர்ந்த குறிக்கோள்களையும் விரிந்த சிந்தையோடும், பரந்த நெஞ்சத்தோடும் வரவேற்பதே நமது இயக்கப் பண்பு! மாண்பு!
மேலும் படிக்க...
தமிழ் படித்த ஆசிரியர்களிடமோ, தமிழ் படிக்கும் மாணவரிடமோ தமிழ் மொழியிடத்துப் பற்றோ, பாசமோ இல்லை. இதுதான் தமிழருக்கு இனப் பற்றோ, இன ஒற்றுமை உணர்வோ, மொழிப்பெருமை உணர்வோ, மொழியுரிமை உணர்வோ வளத்தோடும், வலிவோடும், பொலிவோடும் வளர்ச்சி பெற முடியாத நிலையை விளைவித்திருக்கிறது. எனவே, ஆசிரியர்களையும், மாணவர்களையும் மிகுதியாக நம்பாமல் உலகியல் வாழ்வில் உழன்று கொண்டிருக்கின்ற இளைஞர்களையும், நடுத்தர வயதினரையும் நம்பி அங்காடிகளிலும், சந்தைகளிலும், கோயில்களிலும், ஊர் விழாக்களிலும், குடும்ப விழாக்களிலும் சந்தித்து தமிழ்மொழி பற்றி, தமிழ் இலக்கிய வளம் பற்றி, தமிழ் தத்துவ வலிமை பற்றி, தமிழ்ச் சித்தாந்தப் பொலிவு பற்றி நிறையநிறைய எடுத்துக் கூற வேண்டும்.
மேலும் படிக்க...
நமது நாட்டில் நாம் அனைத்துத் துறைகளிலும் அன்னியர்களையே தலைவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக ஏற்றுப் போற்றி பணிந்து வாழும் அடிமைச் சிந்தையும், கூலி நெஞ்சும், கங்காணி உணர்வும், தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் அடியோடு நீக்கப்பட்டேயாக வேண்டும்.
மேலும் படிக்க...