இந்த நிறைவுரை தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய குருமகாசன்னிதானம் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய குருபாரம்பரிய வாசகங்களையும்; செவிவழியாக வாழுமாறு செய்த குருவாக்கியங்களையும்; பிறர் எழுதி வைத்துக் காத்த குருவாக்கியங்களையும், வாசகங்களையும்; நாமக்கல் மோகனூர் உருத்திரம்பிள்ளை தொகுத்து வைத்த குறிப்புக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு கண்டப்பக்கோட்டை சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
மேலும் படிக்க...
அருட்பேரரசு [The Divine Kingdom] என்று போற்றப்படும் பிற்காலச் சோழப் பேரரசை [கி.பி.785 - கி.பி.1279 வரை] தோற்றுவித்து பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தமது முன்னோர்கள் படைத்திட்ட அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களும் வற்றாத அருள் ஊற்றுக்களாக இருந்தும் பாழ்பட்டுப் போய்விட்டன என்று வருந்தி இருபெரும் அருளூற்றுக்களைப் படைத்தார். அவற்றிற்காக பொதியமலை குகைக்குள் பன்னெடுங் காலமாக இருந்திட்ட சத்தி இலிங்கம், சிவலிங்கம் என்ற இரண்டையும் முதல் விசயாலயன் தலைமையில் கொண்டு வந்து; தஞ்சாவூரிலும், சோழபுரத்திலும் நிறுவினார். தஞ்சையில் சத்தி இலிங்கமும், சோழபுரத்தில் சிவலிங்கமும் அருளூற்றுக்களாக அமைக்கப்பட்டன.
மேலும் படிக்க...
நம்மவர்கள் தங்கள் தங்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் சுற்று வட்டாரத்திலுமுள்ள வண்ணான் [சலவைத் தொழிலாளி] கடை = 108, 243, 1008 என்றும்; அம்பட்டையன் [முடிதிருத்தும் தொழிலாளி] கடை = 108, 243, 1008 என்றும் எண்ணிக் கொண்டு வசதிபோல் கண்டிப்பாக விபூதி, குங்குமப் பொட்டலம் போட்டு அறிக்கையை நன்றாக மந்திரித்து ஒவ்வொரு கடையிலும் நேரில் சென்று கொடுத்துவிட வேண்டும். திருவாணை! குருவாணை! எச்சரிக்கை!
மேலும் படிக்க...
கருவூர்த் தேவர் தமது தந்தையின் கனவையும், தமது தந்தையால் உருவாக்கப்பட்ட பேரரசனான முதலாம் இராசராசனின் கனவையும் நிறைவேற்றுவதற்காக நூற்றாண்டுகளுக்கு மேலாக உழைத்து கி.பி. 1160இல் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் ‘பன்னிரு திருமுறைகள்’ என்ற தலைப்பில் சீவநெறித் திருமுறைகள் அனைத்தையும் தொகுத்து நிறைவு செய்தார். அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலில் துவங்கிய தொகுப்புப் பணி கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் நிறைவு பெற்றது இங்கு நினைவு கூரத் தக்கது. திருமாலின் பெருமை கூறும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் உள்ள சிவலிங்கச் சன்னிதியில் துவங்கி தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சத்திலிங்க சன்னிதியில் நிறைவு பெற்றது.
மேலும் படிக்க...
இந்துமதம் மறுமலர்ச்சி அடைய வேண்டுமென்றால் உடனடியாக எல்லாக் கோயில்களிலும் மணியடிப்பதற்கு மணிமண்டபம் உயரத்தில் கட்டி யிருப்பது போல்; நகரா மண்டபம் கோயில் முன் மண்டப மேல்தளத்தில் கட்டப்பட்டாக வேண்டும். சிறிய கோயில்களில் பூசைக்கு முன்னும் பின்னும் வாசலில் கொண்டு வந்து முழக்க நகராக்கள் செய்து வைக்க வேண்டும். கோயில் விழாக்களில் நகராக்கள் முன்னும் பின்னும் வர வேண்டும். எல்லா வழிபாட்டு நிலையங்களிலும் அன்றாடம் ஆறுகாலமும் நகராக்கள் முழங்கி தொழுகை முறையில் வழிபாடுகள் நிகழ வேண்டும்.
மேலும் படிக்க...
பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாக, குருமகாசன்னிதானமாக செயல்பட்டு வரும் ஞாலகுரு சித்தர் கருவூறார் ஆவார். இவர், மிகத் தெளிவாக இந்தியத் துணைக்கண்டத்தில் மொழிகளும், மொழிவழி இனங்களும் தனித்தன்மை இழந்து, நலிந்து, சிதைந்து, சீர்குலைந்து வருங்காலமே இருண்டு போகக் கூடிய இந்திமொழி ஆதிக்கமே அனைத்துத் துறைகளிலுமே நிகழ்ந்து வருவதைக் கண்டித்து; மொழிச் சமத்துவமும், இனச் சமத்துவமும், அதிகாரப் பொதுவுடமையும் விரைவில் உருவாக்கப் பட வேண்டும் என்று தொடர்ந்து அறிவித்தும் அரசினர், அரசியல்வாதிகள், சமய சமுதாய கலை இலக்கியவாதிகள் யாருமே புரிந்து திருந்தவில்லை.
மேலும் படிக்க...