இராமாயணக் காலத்தில் திரேதகாயுகக் கடைசியில் உருவானதுதான் சபரிமலை ஐயப்பன் ஆலயம். .. .. எனவே, இன்று 1986 சனவரித் திங்கள் வரை கணக்குப் போடும்போது சபரி மலை என்று ஓர் அருளூற்று, அருட்பெருஞ் சோதி ஆலயம். வெட்டவெளிக் கருவறை, பதினெட்டாம்படிக் கருப்புகளின் அருட்கோட்டம் உருவாகி 11,12,987 ஆண்டுகளாகின்றன.
மேலும் படிக்க...
இச்சபரி மலையின் அருளூற்றுக் காப்பாற்றப்பட அக்காலத்து அருளாட்சியில் முதன்மை பெற்று விளங்கிய பதினெட்டாம்படிக் கருப்புகள் அருவுருவ சமாதியாயினர். அத்துடன், காலங்கள் தோறும் சித்தி முத்தி பெறும் ஐயனார்களில் விருப்பமுள்ளவர்கள் இந்தச் சபரிமலையில் பதினெட்டாம்படிக் கருப்புகளின் அருட்கோட்டத்தில் சமாது ஆகி இந்து மத மலர்ச்சிக்கும் வளவளர்ச்சிக்கும் உறுதுணையாகிடும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. எனவே, சபரிமலையில் காலங்கள் தோறும் பல ஐயனார்கள் சமாது ஆகி வருகிறார்கள்.
மேலும் படிக்க...
‘ஐயனாரும் ஐயப்பனும் ஒன்றா யிடுச்சு; அன்றாடப் பூசையில் கலக்க குழப்பங்கள் மிகுந்திடுச்சு அருட்சத்தி சித்தி நிலைகளில் தேக்க ஏக்கங்கள் வந்தாச்சு’ என்ற பாடல் வரிகள் சித்தர்களாலேயே எழுதப் பட நேரிட்டு விட்டது.
மேலும் படிக்க...
இன்றைக்கு இந்துக்களிடையே ஐயப்ப பத்தர்களிடையேதான் இந்துமத உணர்வும், ஈடுபாடும், நம்பிக்கையும், பற்றும், பாசப் பிடிப்பும் செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த நூலிலேயே ஐயப்ப பத்தர்களுக்கு இந்து மதம் பற்றியும், இந்து வேதம் பற்றியும், இவற்றிற்கு அடிப்படையான மணுநீதி பற்றியும் ஒருசில கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன.
மேலும் படிக்க...
இந்துக்கள் ஐயன், ஐயர், ஐயா, ஐயப்பன், ஐயனார் எனும் ஐவரையும் பூசை செய்வதின் மூலம் எளிதாக அருளுலகப் பொருளுலக பாதுகாப்பைப் பெறுகிறார்கள்; ஏற்படக் கூடிய எல்லா பாதிப்புக்களையும் அகற்றிக் கொள்கிறார்கள். இவை பற்றி மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறிடத்தான், பதினெண்சித்தர் மடத்தின் இந்து வேதாகமப் பாடசாலை பாடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க...
இந்துவேதம் என்பது 1. நூற்றியெட்டு (108) பூசைமொழி நூல்கள், 2.நாற்பத்தியெட்டு (48) பூசைவிதி நூல்கள், 3. தொண்ணூற்றாறு (96) தத்துவ நூல்கள், 4. நூற்று நாற்பத்தி நான்கு (144) செயல் சித்தாந்த நூல்கள் என்று மொத்தம் முந்நூற்று தொண்ணூற்றியாறு (396) நூல்களைக் கொண்டது
மேலும் படிக்க...
ஐயப்ப பத்தர்கள் ஆண்டுதோறும், கார்த்திகை, மார்கழி, தை என மூன்று மாதங்கள் மட்டுமே மணுநீதியிலும், இந்துவேதத்திலும், இந்துமதத்திலும் வகுத்தளிக்கப் பட்டுள்ள
இந்துவின் பத்தி நெறிமுறை வாழ்க்கையை முழுமையாக மேற்கொண்டு விட்டு; மற்ற ஒன்பது மாதங்களும் உலகியலாக மணுநீதியையும், இந்துவேதத்தையும் இந்து மதத்தையும் பெருமளவில் மறந்தும், துறந்தும் வாழ்ந்திடுகிறார்கள்.
மேலும் படிக்க...
ஐயப்ப பூசை வழிபாடு ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களிலும் முறையாகக் கொண்டாடப்பட வேண்டும். அப்பொழுதுதான், “இந்துவேத சாத்தர, சாத்திர, சாத்திற நெறிமுறைகளின்படி மானுடர் வாழ்வதற்கென்று தேர்ந்தெடுக்கப் பட்ட இடங்களில் வாழும் மானுடர்க்கு எல்லா வகையான நலங்களும், வளங்களும், பாதுகாப்புக்களும் கிடைத்திடும்” என்று இந்துவேதம் குறிக்கின்றது.
மேலும் படிக்க...
ஒவ்வொரு ஊராரும், ஐயப்ப பத்தர்களும் கார்த்திகை, மார்கழி, தை எனும் மூன்று மாதங்களிலும் காலையிலும், மாலையிலும் தங்கள் தங்கள் ஊருக்குரிய அல்லது தங்கள் தங்களுடைய வட்டாரத்து எல்லைகளுக்குரிய ஐயன் கோயில், ஐயர் கோயில், ஐயா கோயில், ஐயனார் கோயில், ஐயப்பன் கோயில் சென்று கூட்டு வழிபாடு செய்து தங்களுக்குத் தேவையான எல்லாப் பாதுகாப்புகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மணுநிதி விளக்கமாகக் கூறுகிறது.
மேலும் படிக்க...