விடுதலை இயக்கத்தில் தலைமைக்குக் கட்டுப்பட்டும், பணிந்தும், உழுவலன்போடு செயலாற்றியும், தலைவரின் நேரடிப் பாராட்டுதலை எதிர்பார்க்காமலும், தலைவரிடமிருந்தோ இயக்கத்திடமிருந்தோ எள்முனையளவு கூட உதவியை எதிர்பார்க்காமலும், எத்தகைய கடுமையான சோதனை வந்த போதிலும் தலைவரையோ, தத்துவத்தையோ, இயக்கத்தையோ, .. .. குறைகூற முயலாத பொறுப்புணர்ச்சியும்; கொள்கைப் பிடிப்பில்லாமல் அடிக்கடி இயக்கத்தை விட்டு வெளியேறிடும் அற்பச் சிந்தையில்லாமல் பக்குவப்பட்ட மனமுடையவராக இருத்தலும் வேண்டும்.
மேலும் படிக்க...
நாம் மந்திரவாதிகளல்ல, குறிகாரர்களல்ல. அருளைப் பொருளுக்கு விற்கும் அடிமைக் கூட்டமல்ல; வஞ்சகக் கயவர் கூட்டமல்ல; தன்மானத்தை விலை பேசிடும் கூலிக்கார அரசியல்வாதிகளல்ல. மாபெரும் தத்துவத்தின் வாரிசுகள். தாய்நாட்டை அன்னியர்களிடமிருந்து விடுவிக்க வேண்டி, தாய்நாட்டு மக்களுக்கு இனவுணர்வையும், மொழியுணர்வையும், நாட்டுணர்வையும், பண்பாட்டுப் பெருமையையும், நாகரீக உரிமையையும் .. .. விளக்கிக் கூற வந்திருக்கிறோம். அதை அவர்கள் மீண்டும் பெறத் தெளிவான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருப்பவர்களே நாம்.
மேலும் படிக்க...
.. .. உலக மதங்களின் மூலமாகவும், தாயாகவும் இருக்கின்ற இந்துமதம் போலியான ஹிந்துமதத்திலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். ஆரிய மாயை, பிறாமணச் சூழ்ச்சி, பார்ப்பனச் சுரண்டல், ஆச்சாரியார் தவறுகள், பீடாதிபதிகளின் முறைகேடுகள், மடாதிபதிகளின் சர்வாதிகாரங்கள், அப்பாவி மதவெறியர்களின் கண்மூடிப் போக்குகள், மத அறிஞர்களின் ஆபாசக் கற்பனைகளும், அண்டப்புளுகுகளும் நிறைந்த விரிவுரைகள், பொதுவாகச் செய்தியாளர்களும் பதிப்பகத்தார்களும் வியாபார நோக்கில் வளர்க்கின்ற மடமைகள், .. .. முதலிய அனைத்தும் முறியடிக்கப்பட்டேயாக வேண்டும்.
மேலும் படிக்க...
கார§ணாடையில் நமது பதினெண்சித்தர் குவலய குருபீடம் அமைத்ததும் அனைத்து குருகுலத்திற்கும் கருவாக, தலைமையாக அறிவிக்கப்படும். இந்நிகழ்ச்சி வரும் மாசி சிவராத்திரிக்குள் அல்லது சிவராத்திரி நாளில் பெரிய விளம்பரங்களுடன் தொடங்கப்படும். நமது அருளாளர்கள் அனைவரும் பூசைகள் செய்ய அறிவிப்பு விடுத்திடுங்கள்.
மேலும் படிக்க...
நமது அருட்பணி விரிவாக்கத் திட்ட நிலையமாகவும், யாகசாலையாகவும், தவக்குடிலாகவும், குருகுலமாகவும் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு பஞ்சவடியை உருவாக்கி (1. அசோக மரம், 2. நாவல் மரம், 3. நெல்லி மரம், 4. எட்டி மரம், 5. பொரசு, 6. ஆல், 7. அரசு, 8. வேம்பு, 9. இச்சி, 10. அத்தி அல்லது ஆத்தி, 11. பலா, 12. மா, 13. வேங்கை, 14. மருத மரம், 15. குருந்த மரம், 16. புன்னை மரம், 17. கொன்னை மரம், 18. தென்னை மரம் .. .. .. முதலிய மரங்களில் வசதிவாய்ப்புப்படி ஏதேனும் ஐந்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுவே பஞ்சவடி எனப்படும்.) வாரத்தில் கட்டாயமாக வியாழக் கிழமைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் யாகத்தீ வளர்த்து பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குரிய அருளூறு பூசைகளைச் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் (43,73,086 ஆண்டு காலத்தியது) மறை முறை நெறி வேதங்களையும், சாத்திற தோத்திற சம்பிறதாயங்களையும், பூசை தவம் வேள்விகளையும், ஆரண ஆகம மீமாம்சைகளையும், நேம நியம நிட்டைகளையும், புதைக்காடு சுடுகாட்டுப் பூசைமுறைகளையும் .. .. அடிப்படையாகக் கொண்ட பத்தி நிலைகளையும், சத்தி நிலைகளையும், சித்தி நிலைகளையும், முத்தி நிலைகளையும்; தத்துவ வித்துக்களாகவும், செயல்நிலைச் சித்தாந்தங்களாகவும் அறியலாம்! புரியலாம்! வாரீர்! என வேண்டுகோள் விடுக்கிறோம்! புரிந்திடுங்கள்.
மேலும் படிக்க...
.. .. விஞ்ஞான உலகத்தின் சாதனைகள் எல்லோரும் அறிய, புரிய, பயன்படுத்திட முடிவது போல்; மெய்ஞ்ஞானத்தின் சாதனைகள் எல்லோராலும் அறிய, புரிய, பயன்படுத்திட முடியாமல் இருக்கின்ற குறையை நிறை செய்கின்ற வரை எத்தனையாயிரம் அடியான்களும், அடியார்களும் தோன்றினாலும் கூட எல்லோருமே இலைமறை காய்களாகத்தான் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க...