மொழியுணர்வு, இனவுணர்வு, நாட்டுணர்வு, பொதுவுடமைச் சித்தாந்தம், உலக ஆன்மநேய ஒருமைப்பாடு, கூட்டமைப்புச் சமுதாயம், மொழி விடுதலை, இன விடுதலை, பண்பாட்டு விடுதலை, பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற அரசியல் நிலை, .. .. முதலியவை பற்றிய கருத்து விளக்கங்களைப் புரிந்தவர்களாக்கி ஒன்றுதிரட்டி அருட்படை அமைக்க வேண்டும். அருட்போர் முதலில் தமிழகத்தில் மட்டும் நிகழ்ந்தாலும்; அது விரைவில் தென்னிந்தியா, இந்தியாவெனப் பரவி; முதல்கட்டமாக இந்துமதத்துக்குரிய இந்தியாவில் அருளாட்சியை அமைக்க வேண்டும். அதற்கேற்ப அருட்போர் உருவாக்க வேண்டும். அதன்பிறகே உலகம் முழுவதும் அருளாட்சியை விரிவுபடுத்தி அருட்பேரரசு அமைக்க முடியும்.
மேலும் படிக்க...
நாம் RSS போன்றோ! இந்து முன்னணி போன்றோ! விசுவ இந்து பரிசத் போன்றோ! கிறித்துவர்களையும், முகம்மதியர்களையும் தாக்கிச் செயல்படுவதில்லை. அனைத்து அருளாளர்களும் அருளுலகில் ஒன்றே! அவர்களும் நம்மவர்களே! என்ற அடிப்படையில் செயல்படுகின்றோம். எனவே, இந்துமதம் போராட்டத்தை, வேறுபாட்டை மற்ற ஹிந்து இயக்கங்கள் நடத்துவதின் மூலம்; மக்களை வேறுபடுத்தியும், கூறுபடுத்தியும் ஆரியக் கூட்டம் தலைமையிலிருக்கவே விரும்புகின்றது என்பதை நம்மவர் உணர்ந்தும் உணர்த்தியும் செயல்பட்டிடல் வேண்டும்.
மேலும் படிக்க...
வீணான மதச் சண்டைச் சச்சரவுகளையும், போட்டி பொறாமைகளையும், பகைமைப் போர்களையும் அகற்றிடும் பணி நிகழ வேண்டும். இதற்காக விசுவ இந்து பரிசத், RSS, இந்து முன்னணி, .. .. முதலிய இயக்கங்கள் மக்களைத் திசை திருப்புவதற்காக வளர்த்து வரும் மத மறுப்புப் பணிகளையும், வெறுப்புப் பணிகளையும் தடை செய்ய வேண்டும். மெய்யான இந்துமதம் முதலாளித்துவப் போக்கையும், சர்வாதிகாரப் போக்கையும், சுரண்டலையும், அடிமை உணர்வையும், கூலி உணர்வையும், அடக்கு முறையையும், ஒடுக்கு முறையையும், தனிமனித ஆதிக்கத்தையும், சமுதாய வேறுபாடுகளையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் .. .. நேரடியாகக் கடுமையாக எதிர்க்கின்றது, மறுக்கின்றது, வெறுக்கின்றது என்ற பேருண்மையை நம்மவர்கள் விளக்கி உரைக்க வேண்டும்.
மேலும் படிக்க...
இங்கு கார§ணாடையில் பதினெண்சித்தர்கள் குவலய குருபீடம், இராமகிருட்டிணர் மடம், அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், வெட்டவெளிக் கருவறை கொண்டருளு தேவர்கள் பெரிய கோயில், ஒன்பது கோள்களின் அருட்கோட்டம், .. .. அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. அனைவரும் இது பற்றிய அவரவரின் கருத்தோட்டங்களையும், எண்ணவோட்டங்களையும், உணர்வோட்டங்களையும், சிந்தனையோட்டங்களையும் .. .. தாங்கள் திரட்டிய நிதியுடன் சேர்த்தனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப் படுகிறது.
மேலும் படிக்க...
அழைக்கிறார்! அழைக்கிறார்! அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அழைக்கிறார்! அருளாட்சி அமைக்க உழைக்க அழைக்கிறார்!
மேலும் படிக்க...