நம்மை யார் ஆளுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலையில்லை?! நம்மை எது ஆளுகிறது என்பதைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும்” என்ற இந்த வாசகம்தான் தமிழருடைய அரசியல் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும், இதை உருவாக்குபவர்களின் வரலாறுகளையும் தொகுத்துக் கூறும் பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் அரசபாரம்பரியம் (The Political History) என்ற தொடர் வரலாற்று நூலின் ஆரம்பத்தில் இருக்கிறது. அதாவது நம்மை எந்தத் தத்துவம் ஆளுகிறது அல்லது நாம் எந்தச் சித்தாந்தப்படி ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துதான் அல்லது புரிய முயன்றுதான் வாழ வேண்டும் என்ற அறிவுரையையே வழங்குகிறார்கள் பதினெண்சித்தர்கள்.
மேலும் படிக்க...
உலகியல் வழக்கில், “பெண்களிடம் இரகசியம் கூறக் கூடாது”, “பெண்புத்தி பின்புத்தி”, “பெண்ணை நம்பிக் கெட்டவர்களே மிகுதி”, “பெண்ணை விடப் பேதமை பிரிதொன்றுமில்லை”, .. .. என்பன போன்ற பழமொழிகளும், மூதுரைகளும் நிறைய இருக்கின்றன. ஆனால், சித்தர் நெறி இவற்றையெல்லாம் ஏற்கவில்லை! ஏற்கவில்லை! ஏற்கவில்லை! ஏற்கவேயில்லை! எனவேதான் சித்தர் நெறிப்படிப் பார்த்தால் பெரும்பாலும் அனைத்து வகையான துறைகளுக்கும் பெண்களையே தலைவியாக நியமித்துள்ளனர். சித்தர்கள் அனைத்துக்கும் வீரமாகச் செயல்பட பராசத்தி, பொருள் வழங்கிடத் திருமகள், கல்வியும் கலையும் வழங்கிடக் கலைமகள், நீர் வழங்கிட மாரியம்மன், நெருப்பு வழங்கிடக் காளியம்மன், மேலே வான்மகள் விண்மகள் .. .. என்று ஏழு வகைப் பெண்கள், மண்ணுக்கு நிலமகள், .. .. என்றிப்படி அனைத்தையும் பெண்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் படிக்க...