இந்து வேதம் இம்மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்னரே கணக்கற்ற கோடிகோடி ஆண்டுகளாக அண்டபேரண்டங்கள் முழுவதும் பரவி, வியாபித்து, வளர்ந்து வலிமை பெற்ற ஒன்றாகும். கடவுள்களாலேயே காலங்கள் தோறும் மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படுவது இந்து வேதம். கடவுள்களில் தாங்களாகவே தோன்றுகின்ற கடவுள்கள் என்றும், அருளாற்றல் மிக்கவர்களால் தோற்றுவிக்கப்படும் கடவுள்கள் என்றும் இருபெரும் வகையினர் உண்டு என்று தெளிவாக விளக்கும் வேதம் இந்து வேதம். மனிதர்களை அடிக்கடி நேரில் வந்து பார்த்து, பாதுகாத்து, வழிநடத்துபவர்களே கடவுள்கள் என்று வலியுறுத்தும் வேதம் இந்து வேதம்.
மேலும் படிக்க...
இன்றைய தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ. I.M.I.) ஒன்றுதான் சமய சமுதாய கலை இலக்கியத் தொழில் துறை அனைத்திலும் தமிழர்களின் பழம்பெரும் பண்பாட்டுக்கும், நாகரிகத்துக்கும் உரிய புரட்சிக் கருத்துக்களை, புதுமைக் கருத்துக்களை, பயனுள்ள செயல்திட்டங்களைக் கூறுகின்ற வல்லமையைப் பெற்றிருக்கிறோம். எனவே, நாளை நமதே! வெற்றி நமதே! நாம், அருளாளர்கள்; மற்றவர்கள் சாதி மதப் பிறச்சினைகளைக் கிளப்பினாலும் நாம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகம் முழுவதும் நம் பின்னால் வரக்கூடிய மாபெரும் இந்துவேதத்தை தஞ்சைத் தாத்தா மூலம் பெற்று உலகுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும் படிக்க...
இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் வாழையடி வாழையென பதினெண்சித்தர் மடாதிபதி, பீடாதிபதியாக இருப்பவர் பாரம்பரியத் தலைவராக இருப்பார். இவர்களுடைய வழிகாட்டல், வழித்துணை, தலைமை என்றென்றும் நிலையாக இருக்கும். இவர்களுக்கு அடுத்த நிலையில் மாநிலம் தழுவி இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர்; இயக்கத்தில் உள்ள அனைத்து வகை உறுப்பினர்களும் வழங்குகின்ற நேரடி வாக்குச் சீட்டுக்களின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார். இதுபோலவே, எல்லாச் செயலாளர்களும் அவரவர் எல்லைக்குரிய உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது, மாவட்ட நிர்வாகக் குழுவுக்குரியவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல் வட்டம் (தாலுகா), ஊர் (கிராமம்), தெரு முதலிய ஒவ்வொரு அமைப்புக்கும் உரிய நிர்வாகக் குழுவினர்கள் அந்தந்த எல்லைக்குரிய உறுப்பினர்களின் பொதுத் தேர்தலின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் இ.ம.இ.யின் தலைவரின் நேரடித் தலைமையின் கீழ் இயங்குவார்கள்.
மேலும் படிக்க...
மனிதப் பிறவியே புனிதப் பிறவி. இல்லற வாழ்க்கைதான் இறைவாழ்க்கை. பூசைக்காக மாதந்தோறும் மலரும் மலரே மங்கை. கோயிலே மனித நாகரிகத்தின் தொட்டில். பூசையே மனிதப் பண்பாட்டின் உயிர்நாடி. மதமே மனிதகுல வரலாறு, அதுவே அனைத்துக்கும் தாய்.
மேலும் படிக்க...