நமது இ.ம.இ.தான் அடுத்து தமிழகத்தையும், இந்தியத் துணைக் கண்டத்தையும் ஆளக் கூடிய அரசியல் இயக்கமாக இருந்திடும். ஏனென்றால், இந்த இ.ம.இ.யின் தலைவரும், பேச்சாளர்களும், தொண்டர்களும் இதுவரை யாரும் பேசாத கருத்துக்களை இந்துவேதத்திலிருந்தும், இந்துமதத்திலிருந்தும் எடுத்துக் கூறுகிறார்கள். அத்துடன் கைரேகை, சாதகம், பெயரியல், எண்ணியல், மனையடி சாத்திறம் .. .. முதலியவற்றின் மூலம் சோதிடம் கூறுகிறார்கள். மக்களுக்கு மந்திரிக்கிறார்கள். பொதுமக்கள் இவர்களை வணங்கி வழிபட்டு காலைத் தொட்டுக் கும்பிட்டு திருநீறு, குங்குமம், முடிகயிறு, தாயத்து, உருத்திராட்சம் முதலிய பொருள்களை பத்தியோடு பெற்றுக் கொள்கிறார்கள். எனவே, ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும், ஊரிலும் இந்த இ.ம.இ. புயல் போல் காட்டுத் தீ போல் வெகுவேகமாக வளர்ந்திடும்! வளர்ந்திடும்!! வளர்ந்திடும்!!!
மேலும் படிக்க...
புண்ணியங்களைச் செய்கின்ற காரணத்தினால் புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்துப் புண்ணியர்களாக வாழுகின்ற மனிதர்களை, நேரடியாகவே கடவுளாக மாறிடுவதற்குரிய பூசைமொழியினை வழங்கும் இந்து வேத மதமான இந்துமதத்தின் தலைமை ஆச்சாரியாராகவும், தலைமைக் குருபீடமாகவும் உள்ள யாம்; கடந்த 54 ஆண்டுகளில், விவரம் தெரியாத சிறுபிள்ளைப் பருவத்தைத் தவிர மற்ற வாழ்நாள் முழுவதும் இந்து வேத மறுமலர்ச்சிக்கும், இந்து வேத மதமான இந்து மதத்தின் ஆட்சிமீட்சிக்கும், மாட்சிக்கும் உழைத்துக் கொண்டேயிருக்கிறோம்! உழைத்துக் கொண்டேயிருக்கிறோம்!! உழைத்துக் கொண்டேயிருக்கிறோம்!!!
மேலும் படிக்க...
நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், குறைந்தது முழங்கால் அளவு நீரிலாவது நிற்க வேண்டும். அதற்குப் பிறகு படிப்படியாக இடுப்பளவு தண்ணீருக்கும்; அடுத்து கழுத்தளவு தண்ணீருக்கும் சென்று நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோலத் தாங்கள் அச்சிட்டுப் புத்தகமாகக் கொடுத்துள்ள பூசைமொழி வாசகங்களை மனப்பாடம் செய்து பூசையில் பயன்படுத்தி பத்தி, சத்தி, சித்திகளைப் பெற வேண்டும். இதற்குத் தேவையான பயிற்சிகளை, கடந்த இருபதாண்டுக் காலமாக குருகுலம், திருகுலம், தருகுலம், கருகுலம் முதலியவைகளின் மூலம் உருவாகியுள்ள சன்னிதானங்கள், ஆதீனங்கள், அரியவாள்கள், பெரியவாள்கள், ஏமகோடி பீடங்கள், காமகோடி பீடங்கள், .. .. முதலியவர்களிடமிருந்து தங்களைப் போன்று தயாராக விரும்புகிறவர்கள் முயற்சி செய்து அவர்களைச் சந்தித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்
மேலும் படிக்க...
தமிழ்நாடே இந்துமதத்தின் தலைமைப்பீடம், பிறப்பிடம், கருவறை, கருவூலம்; தமிழ்மொழியே இந்துமதத்தின் பூசைமொழி, தமிழகமே அருளாளர்களை, அருளூற்றுக்களை மிகுதியாகப் பெற்று இருக்கிறது; இந்துமதத்தின் அறியாமை, புரியாமை, தெரியாமை, மூடப் பழக்கவழக்கங்கள் முதலியவை அனைத்துக்கும் விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் இந்து மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ.) மூலம்தான் தர முடியும். தரப் படும்;
மேலும் படிக்க...
தன்னுடைய மதம் இந்துமதம்; இந்துமதம் தமிழர்களுடைய மதம்; இந்துமதம் பிறந்தது தமிழ்நாட்டில்; . .. என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்; மேற்படி உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்; மேற்படி உண்மைகளை நம்பிச் செயல்படத் தயாராகிட வேண்டும்..
மேலும் படிக்க...