இந்த நாட்டு மக்களுக்கு நல்ல தலைமையில்லை! நல்ல வழிகாட்டல் இல்லை! நல்ல வழித்துணையில்லை! ஏறத்தாழ இந்த நாட்டு மக்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டார்கள்! வந்தாரெல்லாம் இந்நாட்டு மக்களை வேட்டையாடுகிறார்கள்! அடிமைப்படுத்தி வாட்டி வதைக்கிறார்கள்! எடுபிடிகளாக்கி கொடுமைப்படுத்தி விட்டார்கள்! பாவம், இவர்கள் தாய்மொழியைப் பற்றியோ, தங்களின் இனத்தைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ, பழம்பெருமைகளைப் பற்றியோ, வாழ்வியல் உரிமைகளைப் பற்றியோ நினைத்துப் பார்க்கக் கூடத் தெரியாதவர்களாக, முடியாதவர்களாகவே .. .. தொடர்ந்து வாழுகிறார்கள்! வாழுகிறார்கள்!! வாழுகிறார்கள்!!!
மேலும் படிக்க...
குருதி வண்ணச் செவ்வாடை அணிந்து தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் புள்ளம்பாடி மற்றும் சுற்று வட்டாரங்களில் சுற்றுப்பயணம் செய்து; பதினெண்சித்தர்களுடைய ‘சித்தர் நெறி எனும் சீவநெறியான மெய்யான இந்துமதம்’ பற்றிய பதினெண்சித்தர்களுடைய பதினெட்டு வகையான வாசகங்களை, வாக்கு வாக்கியம் வாசகம் என ஆறு வகைப்பட்ட (6 x 3 = 18) இலக்கியங்களின் கருத்துரைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறுங்கள். ஊர் தோறும் அருட்கோட்டம் வையுங்கள். இ.ம.இ.க்கும், தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களுக்கும் அமைப்புக்களை உண்டாக்குங்கள்.
மேலும் படிக்க...
பதினெண்சித்தர்களுடைய சித்தர் நெறியான சீவநெறியெனும் இந்துமதத்தில் “குருவில்லா வித்தை பாழ்”, “குரு தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது”, “குருவழியே நல்வழி”, “குருபத்தியே அனைத்து வகையான பத்தி, சத்தி, சித்தி, முத்திகளைத் தரும்”, “குருவே அனைத்துக்கும் கரு தரு திரு”, “குருவுக்குள் தான்; தனக்குள் குரு என்ற நிலை எய்துதலே முழுமையான அருள்நிலை” .. .. என்பன போன்ற கருத்துக்கள்தான் உயிர்நாடியானவை! இவற்றை நீ புரிந்து கொள்ள வேண்டும். குருவாக இருப்பவர்கள் யார்யாருக்கு என்னென்ன தரம், திரம், திறம், மனப்பக்குவம், தொண்டுள்ளம், மெய்யான குருபத்தி, .. .. என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்துத்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஏட்டறிவையும், பட்டறிவையும் முறையாக அவ்வப்போது சிறிது சிறிதாக இட்டும் தொட்டும் சுட்டியும் வழங்குவார். அப்படியல்லாமல் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முழுமையாக அருள் வழங்கிட மாட்டார்! மாட்டார்! மாட்டார்!
மேலும் படிக்க...
“மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்பதுதான் சித்தர் நெறி. அதன்படிதான் பீடாதிபதிகள் முதல் தங்களைப் போன்ற தொண்டர்கள் வரை மக்களின் நோய்நிலைகளையும், பேய்நிலைகளையும், ஏக்க நிலைகளையும், ஏமாற்ற நிலைகளையும், அச்ச கூச்ச மாச்சரிய நிலைகளையும், பல்வேறு வகையான மந்திறவாதிகளின் பாதிப்புக்களையும், நாள் கோள் மீன் பாதிப்புக்களையும் நலப்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் அருளுலகத்தவர்களின் முழுமையான அன்பையும், ஆதரவையும், எல்லாவகையான ஏந்துகளையும், பல்வேறு வகையான பாதுகாப்புக்களையும் பெற்றுக் கொண்டேயிருக்க முடியும்.
மேலும் படிக்க...
இந்து வேதம் ஒன்றினால்தான் மனிதம், மனிதத்துவம், மானுட நேயம், மானுட ஆதரவு, மானுடப் பற்று, மானுடப் பாசம், மானுடப் பிறப்பின் அருமை, பெருமை, அரிய தன்மைகள் அல்லது பண்பு நலன்கள் .. .. முதலியவற்றையெல்லாம் பாதுகாக்க முடியும்; பசுமையாக என்றென்றும் வளர்த்திட முடியும். மதமாற்றம் செய்தல், மதப்போர், சண்டை, சச்சரவு, கலகம், ஆக்கிரமிப்பு, .. .. முதலியவை எல்லாம் மானுடர்களுக்கிடையே முளை விடாமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றல் இந்து வேதத்திற்கு மட்டும்தான் இருக்கிறது
மேலும் படிக்க...
செந்தமிழ் மொழியிலுள்ள இந்து வேதத்தை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்போம்! இந்து மதத்தவர்க்கிடையில் உள்ள அறியாமைகள், புரியாமைகள், தெரியாமைகள் அனைத்தும் அகற்றுவோம்! செந்தமிழாசிரியர்களை இந்து வேத ஆச்சாரியார்களாக்கி இந்தியா முழுதும் அனுப்பி இந்து வேதம் பரப்புவோம். இந்தியர் அனைவரிடமும் விந்தைமிகு பந்த பாச இந்து மத ஒற்றுமையுணர்வை விளைவிப்போம்!
மேலும் படிக்க...