தாங்கள் ‘சென்னை காரணோடை கருகுலத்தில் எழுந்தருளி அருளாட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் குருமாரியம்மனே என் மூலம் அருள்வாக்குச் சொல்லுங்கள்’ என மனதுக்குள் வேண்டிக் கொள்ளுங்கள். இது பற்றி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஏதாவதொரு சனி, ஞாயிறு வந்து தங்கிப் பயிற்சி பெற்றுப் போகலாம். நீங்கள் பூசையின் போது குருமாரியம்மனை வேண்டியதும், உங்களை அறியாமல் அருள்வாக்கு சொல்ல வரும்.
மேலும் படிக்க...
நீங்கள் குருதேவருக்குள் இருக்கிறீர்கள்! உங்களுக்குள் குருதேவர் இருக்கிறார்!” உங்களை யார் குறை சொன்னாலும், திட்டினாலும் அதைப் பற்றி கவலையே இல்லை. நீங்கள் முழுக்க துணிவோடும், பணிவோடும், கனிவோடும் மேற்கு மண்டலத்திற்கே தலைவராகச் செயல்படக் கூடியவர்; தமிழகத்தின் தலைவர்களில் ஒருவராகவும், தளபதிகளில் ஒருவராகவும் இருக்க வேண்டியவர்; உங்களுக்கு பகுத்தறிவுப் பாரம்பரியம் உண்டு; தமிழ்ப் பற்று உண்டு, இனப் பற்று உண்டு, நாட்டுப் பற்று உண்டு. இன்றைக்கு நமது குருதேவரை விட்டால்; அவருடைய காலத்தில் செயல்படாமல் விட்டு விட்டோம் என்றால்; தமிழ்மொழியோ, தமிழினமோ, தமிழ்நாடோ என்றைக்குமே உருப்படாது, அடிமைப்பட்டுத்தான் இருக்கும்.
மேலும் படிக்க...
ஒரு நாட்டின் கடவுளையோ, ஒரு மொழிக்குரிய கடவுளையோ, ஓர் இனத்தின் கடவுளையோ; மற்ற நாட்டினரோ, மற்ற மொழியினரோ, மற்ற இனத்தினரோ வழிபட்டுப் பயனே இருக்காது. ஏனென்றால் ஏறத்தாழத் தமிழ்மொழியின் ஒலி அலைகளைக் கொண்டு உலக மொழிகள் அனைத்தையும் பேசமுடியும் என்பது போல்; வேறெந்த மொழியையும் கொண்டு தமிழ்மொழியைப் பேச முடியாது. எல்லா மொழிகளுக்குமே மனிதர்களை அருளுலகில் உள்ள நாற்பத்தெட்டு வகையான சித்திநிலைகளைப் படிப்படியாகப் பெற்றுக் காலப்போக்கில் கடவுளாக ஆக்கிடும் வல்லமை உண்டு. ஆனால் அந்த வல்லமையின் அளவு தமிழ்மொழியினால் கிடைக்கும் அளவிற்கு இருக்காது.
மேலும் படிக்க...
நமது தமிழின மொழி மத விடுதலை புத்தகம், கொள்கை விளக்கப் புத்தகம், இந்துமத விளக்கப் புத்தகம், அருட்பணி விரிவாக்கத் திட்ட விளக்கப் புத்தகம், .. .. முதலியவைகளின் கருத்துக்களை எல்லோருக்கும் கூறுங்கள். தாங்கள் ஆசிரியர் என்பதால் கருத்து விளக்கம் கூறுங்கள். கொள்கைகள்தான் மதத்தை வளர்க்கும். வெறும் சடங்குகளால் மதத்தை வளர்க்க முடியாது. பொதுவாக இந்துமதப் பத்தர்கள் கோயில்களில் பெரிய பெரிய விழாக்களை செய்வதுதான் புண்ணியம் என நினைக்கின்றார்கள். ஆனால், அந்த கோயில்களின் அடிப்படையும், உயிர்நாடியும், செயல்நிலையும் பதினெண்சித்தர்களுடைய நூல்களில்தான் இருக்கின்றன. எனவே, பதினெண்சித்தர்களுடைய நூல்களை அச்சிட்டு வெளிக் கொணருவதிலும்; அந்த நூல்களில் உள்ள கருத்துக்களை தங்களைப் போன்றோர் எல்லா இடங்களிலும் எடுத்துக் கூறி விளக்கம் கூறுவதிலும்தான் இந்துமதத்தின் மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், ஆட்சிமீட்சியும் இருக்கின்றது.
மேலும் படிக்க...
அருளுலகைப் பொறுத்தவரை இம்மண்ணுலகிலேயே முதன்முதலாக விஞ்ஞானப் பூர்வமாகவும், பகுத்தறிவுப் பூர்வமாகவும் ஆராய்ச்சிகளைச் செய்து வரலாற்று அடிப்படையில், அதிலும் தெளிவாகக் காலக் கணக்கீட்டு அடிப்படையில் கடவுள்களை விளக்கிடும் முதல் அருளாளர் யாம்தான். இது பெருமைக்காகக் கூறப்படுவதில்லை. இதுதான் உண்மை. இன்னும் சொல்லப் போனால், இம்மண்ணுலகில் தோன்ற வேண்டிய 48 பதினெண்சித்தர் பீடாதிபதிகளில் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகவும், இராசிவட்ட நிறைவுடையாராகவும் தோன்றியுள்ள யாம்தான், இதுவரை தோன்றிட்ட பதினோரு பதினெண்சித்தர் பீடாதிபதிகளும் மறைவாக (இரகசியமாக) காத்து வந்திட்ட வரலாறுகளையும், தத்துவங்களையும், செயல்சித்தாந்தங்களையும், அருளூறு பூசாமொழிகளையும், பூசாவிதிகளையும், பிறவற்றையும்; மொழி இனம் சாதி மதம் நாடு என்ற வேறுபாடுகளைப் பார்க்காமல் அனைவருக்குமே அறிவிப்பதோடு, பயிற்சிகளையும் வழங்கி வருகின்றோம்.
மேலும் படிக்க...
இ.ம.இ. கொள்கை விளக்கம், தமிழினத் தாழ்ச்சிநிலை தொடர்ச்சி நிலையாவது ஏன்? தமிழின மொழி மத விடுதலை இயக்கத்தின் கொள்கை விளக்க நூல், பூசாமொழியின் முன்னுரை, .. .. முதலியவற்றைக் கட்டாயமாக நூற்றுக்கணக்கான முறை திரும்பத் திரும்பப் படித்திடு! அப்பொழுதுதான் உன் சேவை நாட்டுக்குத் தேவை! நமது மொழிக்குத் தேவை! நமது இனத்துக்குத் தேவை! நமது மதத்துக்குத் தேவை! .. .. . தேவை! தேவை! தேவை! என்ற பேருண்மை உனக்கு விளங்கிடும்! விளங்கிடும்! விளங்கிடும்!
மேலும் படிக்க...
இந்த மண்ணுலகில், தோன்றக் கூடிய (அ) தோற்றுவிக்கப்படக் கூடிய எந்த ஒரு வேதமானாலும் சரி (அ) எந்த ஒரு வேத மதமானாலும் சரி, அவை இந்துவேதம் எனும் ஆலமரத்தின், (அ) இந்து வேத மதம் எனும் ஆலமரத்தின் இலையாகவோ! பூவாகவோ! காயாகவோ! கனியாகவோ! கொப்பாகவோ! கிளையாகவோ! விழுதாகவோதான் இருக்க முடியும்! இருக்க முடியும்!! இருக்க முடியும்!!!
மேலும் படிக்க...