• முகப்பு>
  • 2011>
  • 2011-04
  • 2011-04

    »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    சித்திரை Á¡¾ ¦ÅǢ£Π- À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,112

    ªó¾ ª¾Æ¢ý ¯ûǼì¸õ ¾Á¢Æ¢Éò¾¢ý ¾¡ú ¿¢©Ä ¦¾¡¼÷ ¿¢©Ä¡ÅÐ ²ý ±ýÈ §¸ûÅ¢ìÌâ Ţ¨¼¸Ç¡¸ «Ç¢ì¸ô Àθ¢ýÈÉ.


    கோயில் ஒழுங்கு
    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் [கி.பி.785 - 1040] அவர்கள் அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு; மதவழி அரசியல் புரட்சி செய்து, ‘இந்து மத அருட்பேரரசாக’ப் பிற்காலச் சோழப் பேரரசை [கி.பி.785-கி.பி.1279] உருவாக்கினார். அப்பேரரசின் மன்னர் மன்னர்கள், அரசர்கள், வேளிர்கள், பெருநிலக் கிழார்களான வேளர்கள், அமைச்சர்கள், தளபதிகள், தானாதிகாரிகள் .. முதலிய அரசியல்வாதிகளால் ‘இந்துமத மறுமலர்ச்சி’, ‘அருட்பணி விரிவாக்கம்’, ‘தமிழின மொழி மத விடுதலை’, .. முதலிய பணிகள் சிறப்படையவில்லை, வளவளர்ச்சி பெறவில்லை, ஆட்சிமாட்சி பெறவில்லை. இவற்றை எண்ணியே வருந்திய இவர், தமக்கு முன் வாழ்ந்த பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய ஏட்டறிவையும், பட்டறிவையும் ‘குறிப்பேடு’ என்ற பெயரில் சிறுசிறு கட்டுரைகளாக எழுதி நாட்டிலுள்ள கோயில்களனைத்திலும் மக்களுக்குப் படித்துக் காட்டும்படிச் செய்தார். அவற்றுள் ஒன்றே இந்தக் ‘கோயில் ஒழுங்கு’.

    மேலும் படிக்க...


    அரசும் மதமும்
    ‘சமயமும் அரசியலும் ஒன்றையொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் காலக்கட்டம்’ வந்துவிட்டது. மதவாதிகள் ஆங்காங்கே நேரடியாக இன்றைய அரசியலில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். இந்த நிலை குறித்து, அரசியல் வல்லுனர்களும் பொருளாதார மேதைகளும், சமுதாய நிலை எழுத்தாளர்களும் மிகத் தீவிரமாக ‘சமயம் – அதாவது மதவாதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது’ என்றும்; ‘சமயப் போதகர்களும் குருமார்களும் சட்டமன்றத்தையும் பாராளுமன்றத்தையும் நிர்ணயிப்பதா?’.. என்றும் வினாவெழுப்பி வருகின்றனர்..

    மேலும் படிக்க...


    அருளுரைகள்
    ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் அருளுரைகள்

    மேலும் படிக்க...


    தமிழினத் தாழ்ச்சி நிலை
    வட ஆரியர்கள், மிக மிக நுட்பமான; ஆனால் திட்பமான செயல்திட்டங்களை வகுத்துத் தங்களுடைய சிறிய கூட்டத்தோடு ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும், ஒரே மாதிரியாகவும், தொடர்ந்து அடக்கமாகவும், அமைதியாகவும் செயல்பட்டு; ஆலமரம் போன்றும், மதயானை போன்றும், பெருநிலம் போன்றும் இருந்த தமிழினத்தை வீழ்த்தித் தாழ்த்தி ஆழ்த்திச் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்தி விட்டார்கள். அதாவது, என்றைக்குமே! எவருமே! எளிதில் தமிழினத்தைக் காப்பாற்ற முடியாத அளவிற்கு; அதாவது, தமிழர்களை என்றைக்குமே இன உணர்வோ! இனப்பற்றோ!, இன ஒற்றுமையோ!, இன ஒருமைப்பாடோ! அடையவே முடியாதபடிச் செய்து விட்டார்கள் வடஆரியர்கள்.

    மேலும் படிக்க...