• முகப்பு>
  • 2018>
  • 2018-01
  • 2018-01

    ¬Å¢, ¬ýÁ¡, ¬Õ¢÷ Å¢Çì¸õ

    ¯ûÙ¨È

    1. ¬Å¢, ¬ýÁ¡, ¬Õ¢÷ Å¢Çì¸õ - «È¢Å¢ì¨¸.

    2. «ÕÙĸ «È¢Å¢ôÒ - «Õ×ÕŠ㸡õÀ¢¨¸ ¬ÄÂõ - «È¢Å¢ì¨¸.

    3. ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ À¾¢§ÿáÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ ÌÕÁ¸¡ºýÉ¢¾¡Éõ º¢ò¾÷ ¸¡Å¢Ã¢Â¡üÈí¸¨Ãì ¸Õçþ÷ «Å÷¸û «ÕǢ ÌÕÀ¡ÃõÀâ šº¸ Åâ¸Ç¢ø º¢Ä..


    ஆவி, ஆன்மா, ஆருயிர் விளக்கம்
    உலகம் தழுவி மதமறுப்பும், வெறுப்பும், எதிர்ப்பும், பழிப்பும், அழிப்பும், நாத்திகமும் .. வளர்ந்து வரும் இந்த இருபதாம் நூற்றாண்டில் மதமறுமலர்ச்சிக்காகப் பணியாற்றப் புறப்பட்டிருக்கும் மாவீரரின் தத்துவங்களையும், செயல் சித்தாந்தங்களையும் அவர் பிறந்த மண்ணுக்குரியவர்களாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கருத்தோட்டத்தில்தான் இந்த அறிமுகவுரை வழங்கப்படுகிறது.

    மேலும் படிக்க...


    அருட்பணி விரிவாக்கம்
    பொருளுலக அறியாமைகளாலும், புரியாமைகளாலும், பேராசைகளாலும், தன்னலங்களாலும், .. மனித வாழ்வு நோய் நிலைகளையும், பேய் நிலைகளையும் பெற்றுவிட்டது. ஒரு சில மதத் தலைவர்களால் மதங்களுக்கிடையே போட்டியும், பொறாமையும் அதிகரித்து ஓயாத சண்டை சச்சரவுகளும், போர்களும் விளைந்து விட்டன. இவற்றால் மதத்தின் தூய்மையான போக்கும், உயரிய குறிக்கோளும் வீணாகி விட்டன. .. .. எனவேதான் மதத்தின் மெய்யான வரலாறும், தத்துவ விளக்கமும், சித்தாந்த நடைமுறையும் மீண்டும் வழங்கப்படும் முயற்சி அருட்பணி விரிவாக்கத் திட்டமாக (அ.வி.தி.) மலர்ந்துள்ளது. இது வளர்வதற்காக இந்த ஆவி, ஆன்மா, ஆருயிர் விளக்கம் வெளியிடப்படுகிறது.

    மேலும் படிக்க...


    இந்து மதம்
    ‘மதம்’ என்பதையே இந்து என்ற சொல்லால்தான் குறிக்கிறார்கள் பதினெண்சித்தர்கள். இன்றைய (1986ஆம் ஆண்டு) காலக்கட்டம் வரை மிகத் தெளிவாகக் கணக்கிட்டு பதினெண்சித்தர்கள் மனிதர்களை உருவாக்கி, இந்துமதத்தை முழுமையாக வழங்கி, முதன்முதல் இளமுறியாக் கண்டத்தில் தென்இமய மலையின் பஃறுளியாற்றங் கரையில் முதல் இந்துமதப் பேரரசை உருவாக்கிய காலம் (1985ஆம் ஆண்டுக் கணக்கின்படி) 43,73,086 ஆண்டுகளுக்கு முன் என்ற கணக்கு தெளிவாக இருக்கின்றது. இதைத்தான் இந்துமதம் பிறந்த காலமாகக் குருபாரம்பரியம், அரசபாரம்பரியம், இலக்கியபாரம்பரியம், வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், கரந்தங்கள், சுருதிகள், சூத்திறங்கள், சாத்திறங்கள், தோத்திறங்கள், மறைகள், வேதங்கள் .. முதலியவை தெளிவாகக் கூறுகின்றன.

    மேலும் படிக்க...


    அருளாட்சி அமைப்புப் பணி
    இன்றைய குவலய குருபீடம், ஞானாச்சாரியார், அருளாட்சி நாயகம், குருதேவர், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி, இராசிவட்ட நிறைவுடையார், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் இந்துமதத் தந்தை அவர்களால் அருளாட்சி அமைப்புப் பணி துவக்கப் பட்டுள்ளது.

    மேலும் படிக்க...


    TEN COMMANDMENTS OF INDUISM
    உலகச் சமயவாதிகளே! வழிபாட்டு நிலையங்களைத் தூய்மையும் வாய்மையும் அருளும் நிறைந்தவைகளாக ஆக்குங்கள். உலக மதவாதிகளின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மதப் போலிகளையும், காலிகளையும், துரோகிகளையும், விரோதிகளையும் திருந்தச் செய்யும்.

    மேலும் படிக்க...


    அருவுருவ மூகாம்பிகை ஆலயம்
    நிலையிலா மானுட வாழ்வு, நிலையிலாப் பொருள்களுக்கு மலையளவு முயற்சிகளைச் செய்து அலைகடல் துரும்பென அலைவதாகவே அமைகிறது. ஒவ்வொரு மானுடரும் என்றாவது ஒரு நாள், ஒரு நொடிப் பொழுதாவது தாம் யார்? தமது இப்பிறப்புக்கு முந்திய நிலைகள் என்ன? தாம் வாழப் போகும் காலம் ‘ஆயுள்’ எவ்வளவு? தமது இறப்புக்குப் பிந்திய நிலை என்ன? தாம் உருவாக்கும் உறவுகளும், உரிமைகளும், செல்வங்களும் எப்படியெப்படிப் பயன்படுத்தப்படல் வேண்டும்? தாம் பெற்றுள்ள அறிவு நலம், உடல் நலம், பொருள் நலம், புகழ் நலம், நட்பு நலம், தொழில் நலம், விருப்பாற்றல் நலம், செயலாற்றல் நலம், துய்ப்பாற்றல் நலம் முதலியன எத்தரத்தன? இவை செம்மைப்பட, மேம்பாடடைதற்குரிய முறைகள் எவை? என்று ஆழ நினைத்து, நீள முயன்று அருட்கலைகளைத் தேடிக் கற்றுப் பயன்படுத்துதல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    அருளாட்சி அழைப்பு அறிவிப்பு
    கி.பி.1040இல் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் நிலவறைக்குள் செல்லும் போது அருளிய குருபாரம்பரிய வாசக வரிகளில் சில.

    மேலும் படிக்க...


    இந்துவேதச் சிந்தனைகளில் சில-5
    இந்துமதக் கடவுள்களில் அருவங்கள், அருவுருவங்கள், உருவ அருவங்கள், உருவங்கள் என்று நான்கு வகையினரும் உண்டு. இந்துமதக் கடவுள்கள் ஊழ்வினை, ஆள்வினை, சூழ்வினை, விதி, .. முதலிய பாதிப்புக்களை அகற்றிப் பாதுகாப்புத் தருகின்றார்கள். இந்துமதக் கடவுள்கள் ‘குடும்ப ஆண்டவர்களாக’, ‘குல தெய்வங்களாக’, ‘கிராம தேவர் தேவதைகளாக’, ‘நாட்டுக் கடவுள்களாக’ .. பல நிலைகளில் வாழ்ந்து உதவுகின்றார்கள்.

    மேலும் படிக்க...