பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவில் உள்ள அருட்பட்டத்தவர்களின் அருட்பட்டங்களுக்குரிய விளக்கம். 1. மடாதிபதி, 2. பீடாதிபதி, 3. சன்னிதானம், 4. ஆதீனம், 5. தம்பிரான், 6. பண்டாரம், 7. பண்டார சந்நதி, 8. பண்டார சந்நிதி, 9. அரியவாள், 10. கூரியவாள், 11. சீரியவாள், 12. பெரியவாள், 13. நேரியவாள், 14. வீரியவாள், 15. ஏமகோடிப் பீடம், 16. காமகோடிப் பீடம், 17. சோமகோடிப் பீடம், 18. வாமகோடிப் பீடம் .. என்று பதினெட்டுப் பட்டங்கள் உள்ளன.
மேலும் படிக்க...
அண்மையில் தங்களுக்கு ஏற்பட்ட இடரைப் பத்திரிகையின் வாயிலாகவும், வானொலியின் வாயிலாகவும் கேள்வியுற்று மிக்க துயரடைந்தேன். இந்துமதத்தின் பிறப்பிடமாகவும், தாயகமாகவும் இலங்குகின்ற தமிழ் மண்ணில் மூன்றாந்தர அரசியல்வாதிகளால் தாங்களும் தங்களைப் போன்ற மதவாதிகளும் தாக்குறுவதை உணர்கின்ற போது; இந்தத் தமிழ் மண்ணில் ‘
சமயம் ஆட்சியை நடத்தி வந்த காலம்’ சென்று பின் ‘
மதம் வேறு, ஆட்சி வேறு என்ற நிலை பிரியத் துவங்கிய போதே நாட்டில் பத்தி இயக்கமும், மக்கள் இயக்கமும் பாழ்படத் துவங்கின’. அதற்கான விளக்கத்தை இன்றைய தினம் கண்ணுற முடிந்தது.
மேலும் படிக்க...
எமது இ.ம.இ.யின் பொருளாளர் அருள்மிகு அங்காள பரமேசுவரி சன்னிதானம் அவர்கள் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து எமக்கேற்பட்ட அதிர்ச்சியையும், அளப்பரிய வருத்தத்தையும் அழகிய, பொருளாழமிக்க நெடிய அஞ்சலாக வடிவப் படுத்தியுள்ளார். அவரது ஆர்வத்தையும், ஆற்றலையும், செயலூக்கத்தையும் போற்றியே இப்பரிந்துரை அஞ்சல் நல்குகிறோம். இவர் ஏற்கனவே அடியார் ஒருவருடன் தங்களை நேரில் கண்டு உரையாடியும் உரிய பயன் விளையாமல் பெரிய ஏமாற்றம் அடைந்தவர். இருப்பினும், உங்களை இ.ம.இ.யில் இணைத்துச் செயல்பட வேண்டுமென்பது இவரது பேரவா. எனவேதான், இந்த அஞ்சல்வழி முயற்சி திறந்த நெஞ்சத்தோடும், சிந்தையோடும் மேற்கொள்ளப் படுகிறது.
மேலும் படிக்க...
பதினெண்சித்தர் பீடத்தின் பீடாதிபதிகள் தோன்றும் போதுதான் பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவில் உள்ள பதினெட்டு அருட்பட்டத்தவர்களும் தோற்றுவிக்கப் படுகின்ற பணிகள் நிகழுகின்றன. எனவே, கடந்த நான்கு யுகத்தில் இந்த பதினோரு பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தவிர ஆரம்பக் காலத்தில் ஆதிசிவனார் தோற்றுவித்தது போல் பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவிற்குரிய பதினெட்டு வகைப்பட்ட அருட்பட்டத்தவர்களையும் வேறு யாரும் உருவாக்கியதில்லை, உருவாக்கியதில்லை, உருவாக்கியதில்லை. உருவாக்க முடியவில்லை, உருவாக்க முடியவில்லை, உருவாக்க முடியவில்லை
மேலும் படிக்க...
“வற்றா அருளூற்றின் மருங்கமைந்த இனிய நற்றவக் கனிமலர்ச் சோலையாய இந்துமதம் பெற்ற குழந்தையாம் செந்தமிழர் அன்னையை விற்றும் மாற்றார்க் கடிமையுறுத்தியும் இழிந்தனரே; பெற்றவரைப் பேணாப் பழியேயிவர் அழிவானது;
மேலும் படிக்க...