குருதேவர், ஞானகுரு, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், அரசயோகி ஞாலகுரு சித்தர் கருவூறார் ‘
ஆவி, ஆன்மா, உயிர் மூன்றும் உணர்த்தப்படும் முப்பெருவிழா!’, ‘
இறை, பதி, தளை மூன்றும் ஒன்றாக்கப்படும் முப்பெருவிழா!’, ‘
முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு மூன்றும் புரியச் செய்யப்படும் முப்பெருவிழா!’, ‘
இந்துமத உண்மை வரலாறும், வாழ்வியலும் விளக்கும் தத்துவத் திருவிளக்க நிறைவு விழா!’, .. நிகழ்த்துகிறார்.
மேலும் படிக்க...
15⁄10⁄83 சனி இரவு 7.15 மணிக்கு யாம், “மழையைத் தாத்தாக்கள் ஆத்தாக்கள் தருவார்கள்” என்று கூறியது 8.30 மணிக்கெல்லாம் மெய்யாகிக் கோடை மழை போல் மிக மிகப் பெரிய மழை பெய்தது. இவை சித்தர் நெறி இயற்கை ஆளும் ஆற்றலுடையது என்பதையே விளக்குகின்றன. யாம், சித்துக்கள் அனைத்தும் தனித்தனியே கடந்து விட்டோமாதலால், இப்போது நிகழ்பவை எம்மையும் மீறித் தாமாக வெளிப்படும் சித்துக்களே!
மேலும் படிக்க...
ஆரம்பப் பள்ளியில் சேர்ந்த சிறுவர்; முதுகலைப் பட்டப் படிப்புக்குரிய புத்தகங்களைப் பார்த்து விட்டு “அடேயப்பா! இதையெல்லாம் நம்மால் தூக்கக் கூட முடியாதே! .. பிறகு எப்படி? எப்போது படிப்பது?” - என்று பயந்தது போல் யாரும் சித்தர்களின் பூசைகளைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பயப்படவே தேவையில்லை. நோயாளி உடல் நலத்துக்காகக் கசப்பான மருந்துகளைச் சாப்பிடுவது போன்றதே குருவழிக் கல்வி.
மேலும் படிக்க...
நாம் 4 இலட்சம் கூட்டங்கள் நடத்துவதும் சரி, நாலு பக்கத்தில் ஒரு சிறிய அறிக்கை அச்சடித்து வழங்குவதும் சரி. = இந்தப் பேருண்மையினைத் தெரிந்தும், புரிந்தும், நம்பியும் செயல்படுக. அதாவது, பல மாநில மாநாடுகளும், எண்ணற்ற பெரிய பெரிய ஊர்வலங்களும் உருவாக்கித் தர முடியாத தொண்டர்களை சிறிய, சிறிய அறிவிப்புக்களும், அறிக்கைகளும், புத்தகங்களும் சாதித்துத் தரும். மேலும், நாம் மிகத் தெளிவான, முறையான, முழுமையான, திட்டவட்டமான, காலக் கணக்கீட்டுக்கு உட்பட்ட வரலாறும், இலக்கியமும், தத்துவமும், செயல்நிலைகளும், குறிக்கோள்களும், கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம்! பெற்றிருக்கிறோம்! பெற்றிருக்கிறோம்!
மேலும் படிக்க...
தமிழக மக்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள், இவர்களின் மதமே இந்துமதம். இதுவே இந்திய இனப் பண்பாடுகளுக்கு தாய். இதுபோலத் தமிழ்மொழிதான் இந்திய மொழிகளின் தாய்.
மேலும் படிக்க...
ஆத்திகர்கள்தான் நாடாள வேண்டும். இந்துமதம் இந்திய அரசின் மதமாக அறிவிக்கப்படல் வேண்டும். சிறுபான்மை மதத்துக்கு என்று தனிப்பட்ட சலுகை தருவதுபோல் அதே சலுகைகளை இந்துமதத்துக்கும் தர வேண்டும். கோவில் சொத்துகளுக்கு வரி விதித்தலோ, கோவில் நிலங்களுக்கு வரி விதித்தலோ கூடாது.
மேலும் படிக்க...
சித்தர்கள் நேரடியாக மக்களைச் சந்திப்பதை விட தாங்கள் உருவாக்கும் அருளாளர்கள் மூலமும், வழிபாட்டு நிலையங்கள் மூலமும் மக்களைச் சந்திப்பர். இது மரபு. எனவேதான், நமது குருதேவர் மிகமிக அவசியம் என்று கருதினால் ஒழிய சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. சந்தேகம் கேட்கிறவர்கள் கடவுளே நேரில் வந்து விளக்கினாலும் கூட சந்தேகம் மேலும் மேலும் கேட்பர். எனவே, யாராக இருந்தாலும், சித்தர்நெறிப்படி வாழ்ந்து அநுபவப் பூர்வமாக சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சித்தர் நெறி ஏட்டுச் சுரைக்காய் அல்ல! கற்பனை காரியம் அல்ல!
மேலும் படிக்க...
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் இருநூற்றைம்பதாண்டு காலத்தில் சாதிக்க முடியாதவைகளைச் சாதிக்க பல கலைக் கழகங்களைப் பல நாடுகளிலும், பல நோக்குகளில் பைந்தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு உருவாக்கினார்.
மேலும் படிக்க...