கி.பி.1992இல் துவங்க இருக்கும் அருளாட்சிப் போருக்கு முன்பாகவே, அருளுலகப் போர் 12-2-1988 (பிறவாக ஆண்டு தை மாதம் 29ஆம் நாள்) வெள்ளிக்கிழமை முதல் துவங்கி விட்டது. இப்போரில் நமது சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் அனைவரும் முழு மனதுடனும், முழு விருப்பத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்து கொள்ள வேண்டும் என்று குருவாணை இடப்படுகிறது. ஏற்கனவே அறிவித்துள்ளபடி இப்போருக்குத் திருத்தணி முருகன் தனது துணைவியர் இருவரோடு மயில் மீதமர்ந்து தலைமையேற்கிறார். அருட்படைத் தலைமைக்குத் தளபதியாக பாரத காலத்து துரோணாச்சாரியார் பொறுப்பேற்கிறார்.
மேலும் படிக்க...
சிவனே இராமனாகவும், கண்ணனாகவும், பீடாதிபதிகளாகவும் தோன்றும் பேருண்மையைப் புரிந்தவர்களுள் ஒருவரான விசுவாமித்திரரே மாபெரும் தவறைச் செய்கிறார். தன்னுடைய தவறுகளுக்கு இம் மண்ணுலகுக்கு முந்திய உலகங்களில் இருந்தே பல்வேறு வகையான தீயசத்தியினர்களை; அசுரர்களிலும், அரக்கர்களிலும் தீயவர்களை; மானுடர்களில் தீயவர்களை, .. .. தேடித் தேடித் தொகுத்து இணைத்து இம் மண்ணுலக முடிவுக்குள் தம் விருப்பம் போல் அருளுலகுக்கு மாறான, விரோதமான ஓர் ஆட்சியை உருவாக்க விரும்புகின்றார்.
மேலும் படிக்க...
கி.பி.1992இல் துவங்க இருக்கும் அருளாட்சிப் போருக்கு முன்பாகவே அருளூலகப் போர் 1988இல் துவங்கி விட்டது. இப்போரில் அனைத்து சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும் முழு மனதுடனும், முழு விருப்பத்துடனும் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளும் முறை இதில் விவரிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க...
இந்துமதம் வெறும் அறிவியல் பூர்வமான மதமோ! அல்லது இயற்கையிறந்த தெய்வீகப் பூர்வமான மதமோ அல்ல! அல்ல! அல்ல!.. .. இந்துமதம் முழுக்க முழுக்க உணர்வுப் பூர்வமான மதம். அதுவும் ஒவ்வொறு மனிதனும் இந்துமதத்தைத் தனது அன்றாட வாழ்வில் உணர்வுப் பூர்வமாகக் கடைப்பிடித்திடும் தன்மை இம்மதத்துக்கு மிகுதியாக இருக்கிறது. எனவே, வெறும் அறிவியல் பூர்வமான பகுத்தறிவு வாதத்தாலோ! நாத்திக வாதத்தாலோ! பொருள்முதல் வாதத்தாலோ.. .. .. இந்துமதத்தை வெல்லவே முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது!
மேலும் படிக்க...
யாம், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் பிரிவாற்றாமையாலும்; எமது ஏட்டுலகப் படைப்புக்களும், நாட்டுலகப் படைப்புக்களும் ஒன்றுதிரண்டு, ஒற்றுமைப்பட்டு, ஒருமைப்பாட்டுடன் செயல்பட முடியாமல் போனதாலும் ஏற்பட்டுள்ள மனச் சோர்வையும், சிந்தைத் தளர்ச்சியையும் அகற்றிக் கொள்ளும் வண்ணம் ‘இந்துமதப் பேருண்மைகள்’ என்ற தலைப்பில் சிறுசிறு குறிப்புக்களையும், சிறுசிறு கட்டுரைகளையும் மட்டும் மதக் கலைக் களஞ்சியத்திற்காக (The Religious Encyclopaedia) எழுதுகிறோம்.
மேலும் படிக்க...
ஞானக்காட்சி என்பதை இம்மண்ணுலகில் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகிய யாம்தான் முதன்முதலில் கண்டுபிடித்தோம். இது அருளுலகில் ஓர் அரிய சாதனையே! மிகப் பெரிய கண்டுபிடிப்பே! அருளாளர்கள் விரும்பினால்; தங்கள் மீது முழுமையான நம்பிக்கையும், தாங்கள் எதிர்பார்க்கும் முழுமையான பக்குவமும் பெற்றவர்கள் எவரானாலும் சரி, அவருக்கு எத்தகைய அருட்சத்தியையும், சித்தியையும், முத்தியையும் வழங்கலாம் என்பதன் விளக்கம்தான் அல்லது எடுத்துக்காட்டுதான்; அரிய பாரம்பரியமோ, பெரிய யோகமோ இல்லாதவர்களுக்குக் கூட ஞானக்காட்சி ஆற்றல், அருட்கணிப்பு ஆற்றல், அருள் வழங்கல் ஆற்றல், பிறருடைய அருளுலகப் பொருளுலக பாதிப்புக்களை யெல்லாம் அருளை அநுபவப் பொருளாக வழங்குவதின் மூலம் அகற்றிடும் ஆற்றல் முதலிய பல்வேறு வகையான ஆற்றல்களை வழங்குதல் என்ற எமது செயல்திட்டங்கள்.
மேலும் படிக்க...
இந்துமத விடுதலையின் முதல் கட்டமாகத்தான் தமிழின விடுதலைப் போரும், தமிழ்மொழி விடுதலைப் போரும் துவக்கப் பட்டிருக்கின்றன. அண்டபேரண்ட அருளுலக ஆட்சி மொழியாகவும், இம்மண்ணுலகின் மூத்த மொழியாகவும் இருக்கின்ற தமிழ்மொழியின் மூலம் இந்துமத வரலாறு, இந்துமதப் பெரியார்களின் வரலாறு, இந்துமத அருளூற்றுக்களான கோயில் ஆலயங்களின் வழிபாடு, பத்தி சத்தி சித்தி முத்தி இவைகளை வழங்கக் கூடிய அருளூறு பூசைமொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளின் தொகுப்புக்களை அச்சிட்டு வழங்கும் பணி துவக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் படிக்க...
ஆங்கிலப் புத்தாண்டிற்கான வாழ்த்துக் கவிதையில் தமிழின உரிமைக்காக உழைப்போம் என்று உறுதி ஏற்றல்.
மேலும் படிக்க...