ஊராரின் புகழுக்காகவோ, ஏச்சுக்காகவோ, பேச்சுக்காகவோ மயங்கவோ, அச்சப்படவோ, கூச்சப்படவோ செய்கிறவனால் எள்முனையளவு சாதனையைக் கூட எக்காலத்திலும் செய்ய முடியாது. குருதேவரைக் குரங்குப் பிடியாக, முதலைப் பிடியாகப் பிடித்துக் கொள்கிறவனால்தான் கடையவனாக இருந்தாலும் கடைத்தேற முடியும். ஊசலாட்டம் உடையவன் எத்தகைய உயர்விற்கு உரியவனானாலும், எத்தகைய அரிய பெரிய தொண்டுகளைக் குருவுக்காக ஆற்றினாலும் கடைத்தேறவே முடியாது - குருபாரம்பரிய வாசகம்.
மேலும் படிக்க...
வேட்பாளர் விளம்பரத் தாள்களை கையில் ஏந்திக் கொண்டு, கண்ணெதிரே தென்பட்டவர்க்கும், வீடுகளின் வாயிலில் நின்று கூவி அழைத்து வருவோர்க்கும் கொடுத்து, வேட்பாளர் “தானே” என அறிமுகம் செய்து ஓட்டுக் கேட்டார். சுடலைச் சன்னிதானம் அவர்கள் திருநீறு குங்குமம் தந்து, மந்திரித்து அருள் வழங்கிச் சென்றார். ஆண், பெண் இருபாலாரும் காலணிகளை கழற்றி விட்டு, பயபத்தியோடு திருநீறு குங்குமம் பெற்று, கண்ணில் ஒற்றி மகிழ்ந்தனர். மறந்தும் கூட ஒருவரும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவில்லை. குடிபோதையில் இருந்தவனும் மதித்தான். பருவ இளைஞர்களும் கூட தன்னை மறந்து மரியாதையுடன் நடந்து கொண்டார்கள். வீட்டுக்கு ஒரு ஓட்டு போடுங்கள் என்றதும் போடுகிறேன் என்றேதான் சொன்னார்கள்.
மேலும் படிக்க...
நம் குருதேவர் அடியேனை, “நீ இந்த உலகில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்! அது வெற்றி பெறும்!” என வாழ்த்தியுள்ளார்கள். இது போன்ற செயல்களுக்கு முன் பயிற்சி ஏதாவது உண்டா? என்றால் அதுவும் இல்லை. இல்லையென்றால் எப்படி நடக்கிறது? நமக்குள் குருதேவர் இருக்கிறார். அவ்வப்போது தேவையான வழி முறைகளைச் சொல்லி, முயற்சிகளைத் தூண்டி, அனைத்துக்கும் காரண, காரிய, கர்த்தாவாகவும் செயலாற்றுவதை உணர்கிறேன்.
மேலும் படிக்க...
தமிழின சமுதாயத்தில் பலரும் தமிழின குருபீடமாகவும், ஞானாச்சாரியாராகவும், தலைவராகவும் விளங்கும் குருதேவரின் அடியான்கள் மூலம் தங்களுக்குள்ள குறைகளைப் போக்கி நிறைவுகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் குருதேவரின் செயல்திட்டம். அது இப்பொழுது உங்களுக்கு நல்ல பயனை அளித்து இருக்கிறது. உங்களுக்குப் போல் பலருக்கும் பயனை அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க...
பொதுத் தொண்டு ஆற்றப் புறப்பட்டு இருக்கின்றாய்; எந்த நேரத்திலும் எதிர்ப்போ, பகையோ, பழியோ ஏற்படலாம். அது கண்டு அஞ்சாமல் பெண் சிங்கம் போல் செயல்பட வேண்டும் நீ. வாழ்க! வளர்க!
மேலும் படிக்க...
பனி மூடிய தென் இமயமலைப் பகுதிகளில் வாழும் “மாதா சீ” (மாதா ஜீ) எனப்படும் சத்திநிலைப் பெண்டிர்கள், சமாது நிலை கொண்டருளு சித்தர்கள், .. .. .. எனப்படுவோரெல்லாம் வெளிக் கிளம்பி நமக்கு நேரடியாகவே உதவ வந்து விட்டார்கள், வந்து கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
“ஞானம் என்பது ‘அறிவுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’ என்ற இரண்டையும் கண்களாக, கைகளாக, கால்களாகப் பெற்றது. அதே நேரத்தில் அருள் என்பது ‘அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ என்ற இரண்டையும் கண்களாக, கைகளாக, கால்களாகப் பெற்றது.
மேலும் படிக்க...