இம்மண்ணுலகிலேயே மூத்த இனமாகவும், முதல் மொழியை உடைய இனமாகவும், மூலக் கருவான தத்துவ மதத்தை உடைய இனமாகவும், மிகப் பழமையான பண்பட்ட நெடிய பெரிய வரலாற்றுப் புகழினை உடைய இனமாகவும் உடைய தமிழினம் உலக அளவில் யாராலுமே அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அற்பமான மதிப்பைப் பெற்றிருப்பதற்குக் காரணமே தமிழர்களின் ஒற்றுமையின்மையே.
மேலும் படிக்க...
அருளாட்சி என்பது அருளுலகத்தவரின் முடிவுப்படி பிறக்கின்ற ஆணைகளின்படி அப்படியே செயல்பட்டால்தான் அமையும் என்பதை உணருகிறோம், நம்புகிறோம், ஒப்புக் கொள்கிறோம். எனவே, எக்காரணம் பற்றியும் அருளாட்சிக்காக வழங்கப்படுகின்ற குருவாணைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் ஊசிமுனை அளவு கூட தயங்க மாட்டோம்.
மேலும் படிக்க...
அருட்போருக்காக அருட்படை திரட்டவும், திரட்டிய படைவீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிக்கப்பட்ட படையை அணிவகுத்து அருளாட்சி நாயகம், தஞ்சைத் தாத்தா வழங்கும் வியூகப்படி போர் நடத்தவும் தேவையான வீரத் தளபதிகளைத் தயாரிக்க தஞ்சைத் தாத்தா பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளாணை வழங்கியுள்ளார். அதற்கேற்ப குருதேவர் இன்றைய நிலையில் நம்மிடம் இருப்பவர்களில் ஆர்வமுள்ள அனைவரையுமே இப்பொழுது வீரத் தளபதிகளாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க...
பதினைந்து ஆண்டுகள் படித்தால்தான் B.A. பட்டமும், பதினேழு ஆண்டுகள் படித்தால்தான் M.A. பட்டமும் கிடைக்கும். உலகியல் படிப்புக்கே இவ்வளவு காலம் என்றால்!? அருளுலக படிப்புக்கு ஆயுள் முழுவதும் படிக்க வேண்டாமா? திடீரென வந்து விடுமா? சாதிமத வேறுபாடோ, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடோ சித்தி பெறுவதற்கு இல்லை. முயலுக.
மேலும் படிக்க...
நமது குருதேவருக்காகத் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களும்!; பனிமூடிய இமயமலை முகடு முதல் அலைகடல் தழுவி விளையாடும் கன்னியாகுமரி முனை வரைக் கணக்கற்றோராக இருப்பதால்தான்; நமது குருதேவர் கையில் ஆயுதம் ஏதுமின்றித் தத்துவ நாயகமாக, தமிழின மொழி மத விடுதலை இயக்கத்துக்காகவும், இந்து மறுமலர்ச்சி இயக்கத்துக்காகவும் இரவுபகலாகச் சுற்றுப்பயணம் செய்கிறார்.
மேலும் படிக்க...
இந்துமதத்தின் மீது பற்றுள்ள தாங்கள் இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும். பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம் மூடநம்பிக்கையற்றது; கண்மூடிப் பழக்க வழக்கமற்றது; புராண குப்பைகளை நம்பாதது; அனைத்திலும் பகுத்தறிவுப் போக்கினையும், மெய்ஞ்ஞானப் போக்கினையும் உடையது.
மேலும் படிக்க...
இந்துக்களில் கணிசமானவர்கள் வெளிப்படையாகவே மாற்று மதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வதையும், காணிக்கை செலுத்துவதையும், மாற்று மதத்தவரிடம் மந்திரித்துக் கொண்டு தாயத்து, முடிகயிறு, சக்கரங்கள் வாங்குவதையும் தடுக்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை, தடுக்க முடியவே இல்லை.
மேலும் படிக்க...