‘குருவில்லா வித்தை பாழ்’, ‘குரு தொட்டுக் காட்டாதவை சுட்டுப் போட்டாலும் வாரா’ .. என்ற மூதுரைகள் எண்ணற்று உள்ளன. இப்படி பதினெண்சித்தர்களால் வலியுறுத்தப்படும் குருவழிபாட்டை ‘நவநாத சித்தர்களில்’ ஒருவரான ‘திருமூலர்’ பரம்பொருளான சிவனை கூட வணங்க வேண்டாம்; குருவை வணங்கி வழிபட்டு ஏற்றுப் போற்றி இரண்டறக் கலந்தால் மெய்ஞ்ஞான சித்தியெல்லாம் கைவரப் பெறலாமென்று பாடுகிறார்.
மேலும் படிக்க...
சைவ சமய எழுச்சியின் மூலவரும், வைணவ சமய எழுச்சியின் மூலவரும் சுடுகாட்டுக்குரிய பேயாக, பூதமாக, பொய்யுருவாக (அருவம்) மக்களால் கருதப் பட்டது ஏன்? இம்மூவரும்
சுடுகாடே இறைவன் திருநடனமிடும் மன்றம் என்று கண்டுணர்ந்து கூறினார்கள். ‘
கல்லறைகளே இறையருள் ஊற்றெடுக்கும் கருவறைகள்’ என்ற பேருண்மையை வெளிப்படையாகக் கூறியவர்களே மேற்படி மூவரும்.
மேலும் படிக்க...
இன்றைய நிலையில் உலகெங்குமுள்ள தமிழர்கள் தங்களைப் பற்றிய மறு சிந்தனையில் ஈடுபட வேண்டியவர்களாக உள்ளார்கள். ஏனெனில், உலகெங்கும் தமிழர்கள் இழிவையும், பழியையும், சீரழிவையும், அழிவையும் அடைந்து வருகிறார்கள்.
மேலும் படிக்க...
வடமொழிக்கும், பிறாமணருக்கும், ஆரிய மதத்துக்கும், பார்ப்பனச் சனாதன தருமத்துக்கும் ஆதரவாளராக விளங்கிய பல்லவர்களையே நிலைகுலையச் செய்த திருஞானசம்பந்தர்; சீர்காழித் தமிழ் அந்தணர், குருக்கள், சிவாச்சாரியார் ஆகிய சிவபாத இருதயர் என்பவரின் மகனாகக் கருணீக சைவவேளாளர் குடும்பத்தில் தோன்றியவரே ஆவார். இவருடைய பெயர் “ஆளுடைய பிள்ளை”, “திருஞானசம்பந்தம் பிள்ளை”, “சீர்காழிப் பிள்ளை” .. என்று சித்தர் நெறிப்படி தமிழர்க்கே உரிய சிறப்புப் பட்டப் பெயரால் அழைக்கப் படுகிறார்.
மேலும் படிக்க...
‘மதவழிப் புரட்சியால்தான் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கும் விழிச்சியடையும், எழிச்சியடையும், செழிச்சியடையும், கிளர்ச்சிமிகு வளவளர்ச்சி பெறும், புரட்சிமிகு வளவளர்ச்சி பெறும், விடுதலையுணர்வு மிக்க ஆட்சி பெறும், ..’ என்ற உலகப் பேருண்மையைத்தான் மேற்படி மூவரும் தங்களுடைய வாழ்வியல் போதனையாலும், சாதனையாலும் நிலைநாட்டிக் காட்டினார்கள்
மேலும் படிக்க...
தமிழின விடுதலைப் போர்த் தளபதிகளே சமயாச்சாரியார்களும், சந்தானாச்சாரியார்களும்** ஆவார்கள். இப்படையிலுள்ள துணைச் சேனைத் தலைவர்களே நாயன்மார்களும், ஆழ்வார்களும். இவர்களின் போர்க் கருவிகளே இவர்கள் பாடிய பாடல்கள் அல்லது படைத்த இலக்கியங்கள். இவர்களுடைய பாடிவீடுகளே இவர்கள் தனித்தனியாகப் பூசை செய்த, இவர்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களின் கோயில்கள். இந்த மாபெரும் விடுதலைப் போருக்காக உருவாக்கப் பட்ட பாசறைகளே அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்கள்
மேலும் படிக்க...
தமிழகத்திலே எல்லாக் கோயில்களிலுமே பூசை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றது; பொதுவாகத் தமிழக மக்கள் தனிமனிதர் கொண்டாடும் ‘நோன்புகள்’, நிகழ்த்தும் ‘சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகள்’; குடும்பத்தார் கொண்டாடும் ‘திருநாள்கள்’; சமுதாய அளவில் கொண்டாடிடும் ‘திருவிழாக்கள்’ .. முதலிய அனைத்தையுமே நம்பிக்கையோடும், விருப்பத்தோடும், பற்றோடும், பாசத்தோடும்; உறவினரோடும், ஊராரோடும் கூடிக் குலாவிக் குதூகலித்துத்தான் கொண்டாடுகிறார்கள்.
மேலும் படிக்க...
பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கிய உயரிய உயிர் வாசகங்கள்’ என்று சித்தர் ஏளனம்பட்டியார் தொகுத்தவை.
மேலும் படிக்க...