• முகப்பு>
  • 2015>
  • 2015-13
  • 2015-13

    “¿¼Ã¡º÷ º¢©Ä - µ÷ «Ã¢Â Å¢Çì¸õ”

    Á¡÷¸Æ¢ Á¡¾ ¦ÅǢ£Π(Jan 2016) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

    ¯ûÙ¨È

    1. ³ó¦¾¡Æ¢ø ÅøÄ¡ý ¿¢©Ä [¿¼Ã¡º÷ º¢©Ä ÀüȢ µ÷ «Ã¢Â Å¢Çì¸õ].
    2. ÁШà Á¡ãà÷ Á£ÿðº¢ÂõÁý ¬ÄÂõ.
    3. ̼ÓØìÌ Å¢Æ¡Å¢ø ÌÕðÎò ¾ý¨Á!
    4. ¸¡¾½¢ Ţơ ¦¸¡ñ¼¡Îõ Ó¨È - ÌÆ󨾸ÙìÌ ¸¡Ð ÌòÐõ ÁÃÒ ±ôÀÊ Åó¾Ð? ¦À¡Õû ±ýÉ?
    5. ¯ñ¨Á¢§Ä ªóÐÁ¾ò¾¢ø Å£ú ¿¢©Ä¡?


    ஐந்தொழில் வல்லான் நிலை
    பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப்பெரிய செயல் விளக்கச் சிலையே நடராசர் சிலை. பதினெண்சித்தர்கள் படைத்த கலையழகும், தத்துவ ஆழமும் நிறைந்த அரிய படைப்பாகும் இந்த நடராசர் சிலை. இம்மண்ணுலகில் தோன்றியுள்ள மதங்கள் அனைத்தும் வியந்து, விதந்து, போற்றிப் பாராட்டி, ஏற்றுக் கொள்ளும் ஓர் ஒப்புயர்வற்ற கடவுள் நிலை விளக்கச் சிலையே இது. இச்சிலை இடம் பெறாத கலைக்கருவூலமோ, கண்காட்சியகமோ இப்புவிப்பரப்பில் எங்குமில்லை என்ற ஓர் உண்மையே போதும்; பதினெண்சித்தர்கள் மிகச் சிறந்த சிற்பிகள் என்பதை விளக்கிட.

    மேலும் படிக்க...


    மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்
    இன்றைக்கு பல கோபுரங்களோடு விரிந்து பரந்து கிடக்கின்ற ஆலவாய் மதுரை மாமூதூர் மீனாட்சியம்மன் ஆலயம் தோன்றி வளர்ந்த வரலாறு (1985ஆம் ஆண்டாகிய) இன்றோடு 43,73,086 ஆண்டுகள். எனவே, இதனுடைய முழுமையான வரலாற்றை விளக்க ஆயிரக்கணக்கான பக்கங்களையுடைய தொகுதிகளாகப் பல தொகுதிகள் வெளியிட நேரிடும். எனவே, இன்றைய மக்களின் ஆர்வத்தையும், அறிவியல் உணர்வையும், ஆராய்ச்சிப் போக்கையும், மெய்யான இந்து சமயத்தின் தொன்மையைப் பற்றிய பெருமித உணர்வையும் ஊக்குவிக்கும் வண்ணமே இந்தச் சுருக்க விளக்க அறிமுக முன்னுரைக் கட்டுரை எழுதப்படுகிறது.

    மேலும் படிக்க...


    குடமுழுக்கு விழாவில் தெரியாமை
    அருளாட்சி அலுவலகங்களே கோயில்கள்’; ‘சமுதாய நலமன்றங்களே கோயில்கள்’, ‘கலைக் கருவூலங்களே கோயில்கள்’, ‘பண்பாடு நாகரீகக் காப்பகங்களே கோயில்கள்’, ‘அருளை அநுபவப் பொருளாக வழங்கும் நிலையங்களே கோயில்கள்’, ‘அருட்கல்விக் கலாசாலைகளே கோயில்கள்’, ‘பிறவாமை பெற்ற அருளாளர்கள் நிலைத்து நின்று அருள்வழங்கும் கருவறைகளே கோயில்கள்’, .. .. .. எனவே, இவற்றிற்குப் பதினெண்சித்தர்களின் முறையில்தான் குடமுழுக்குச் செய்ய வேண்டும்.

    மேலும் படிக்க...


    குடமுழுக்கு செய்வது பற்றி
    குடமுழுக்கு செய்வது பற்றிய சிறப்புக் குறிப்பு

    மேலும் படிக்க...


    காதணி விழா கொண்டாடும் முறை
    வீரம் செறிந்த தமிழ்க் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை இறைவனுக்கே, ‘இந்துமத மூலவர்களுக்கே’ காணிக்கையாக வளர்த்து ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள ஆண்டுக் கணக்கில் [1,3,5,7, ..] குலதெய்வத்தின் திருமுன்னர் கொண்டு சென்று, முடியகற்றி (மொட்டையடித்து), நீராட்டி; எந்தவித உலக பந்தபாசச் சொந்த சொத்துமின்றி நிறை மனநிலையில் நிறுத்தி; காது இரண்டும் குத்திப் பசிய குருதித் துளியைக் கருவறை முன் காணிக்கையாக்கி அருளுலகப் பட்டியலில் தங்களின் குழந்தையையும் இடம் பெறச் செய்வார்கள். இதுவே காதணி விழா - மொட்டையடிக்கும் விழா.

    மேலும் படிக்க...


    இந்துமதத்தில் வீழ்ச்சி நிலையா?
    ஏறத்தாழப் பெரும்பாலானவர்களுக்கு நமது மதத் தத்துவங்கள், செயல் சித்தாந்தங்கள், வரலாறுகள், இலக்கியங்கள், மதப் பெரியார்களின் சாதனைகள், போதனைகள், .. முழுமையாகவே தெரியாத நிலைதான் இருக்கிறது. மீதமுள்ள சிறுபான்மையினருக்கும் மேற்படிச் செய்திகள் அரைகுறையாகத்தான் தெரிந்திருக்கின்றன. எனவேதான், நமது மதத்தின் மலர்ச்சி நிலை, வளர்ச்சி நிலை, பயிற்சி நிலை, செழிச்சி நிலை, .. முதலிய அனைத்துமே தளர்ச்சியுற்றுக் கிடக்கின்றன. இவற்றை யெல்லாம் போக்குவதற்காகத்தான், இன்றைக்கு ‘மத மறுமலர்ச்சி இயக்கம்’, ‘மதச் சீர்திருத்த இயக்கம்’ .. முதலியவை தேவைப் பட்டுள்ளன.

    மேலும் படிக்க...