மிக மிகத் தொன்மையான காலம் என்று எதையும் கூற முடியாதபடி காலக் கணக்கீட்டு அடிப்படையில் பேரண்டங்கள், அண்டங்கள், மீன்கள், கோள்கள், இராசிகள், இந்த மண்ணுலகப் பிண்டங்கள் .. அனைத்துக்கும் வரலாறு எழுதியுள்ளார்கள் பதினெண்சித்தர்கள். இவர்கள் மிகச் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களாக, மேதைகளாக, தந்தைகளாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க...
தமிழினத்தின் ஆட்சி எழிச்சியும், வீழ்ச்சியும் கடலலை போல் தொடர்ந்து எழுந்தும், வீழ்ந்தும் வாழக் கூடிய அவலநிலை வந்து விட்டது. இனிமேல் இதைத் தவிர்க்க முடியாது. மிக விரைவில்; இந்த அருட்பேரரசு இமயம் கடந்தும், குமரிக் கடல் கடந்தும் வல்லாட்சியினை நல்லாட்சியாகச் செலுத்தினாலும் வீழ்ச்சியுற்றே தீரும். பிறகு நெடுங்காலம் தமிழர்களின் இன உணர்வு, மொழியுணர்வு, பாரம்பரிய உரிமையுணர்வு, நாகரிகப் பெருமித உணர்வு, மத உணர்வு, தன்மான உணர்வு, .. முதலியவை பெருமளவில் நோயுற்று விடும். அதனால், தமிழர்கள் கூலிகளாக, அடிமைகளாக, நடைப் பிணங்களாக, ஏவலாட்களாக, பணியாட்களாகப் போலியான அவல வாழ்வு வாழவே நேரிடும். அது எவ்வளவு காலம் நீட்டிக்குமோ?! ..
மேலும் படிக்க...
பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குரு பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம். .. .. .. சூரிய குலத்தில் ஆலய ஊழியக்காரர் மரபில், சீர்காழி அந்தணர் சிவபாத இருதயர் செல்வர் திருஞானசம்பந்தர் புகழ் பரப்பி இந்துமதம் வளவளர்ச்சி அடையச் செய்தது போல்; அப் பரம்பரையில் தோன்றிய காலடிச் சிவகுரு செல்வர் ஆதிசங்கரரும் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே பாலுகப் பருவம், இளஞ்சிறாஅர் பருவம், வாலிபப் பருவம், .. என்று பருவங்கள் தோறும் சூரியகுலத்தார்க்குரிய கலைகளைக் கற்பித்தோம். ஆனால், அருளுலகத்தாராலும், பல்வேறு காரணங்களாலும் அவரை முழுமையாகத் தயாரிக்க முடியாமல் போய்விட்டது.
மேலும் படிக்க...
தென்பாண்டித் தமிழனாகிய ஆதிசங்கராச்சாரியார் ஆரம்பம் முதல் நெடுங்காலம் சிவபெருமான் போன்று நீண்ட, அகண்ட, உயரிய சடைமுடியும், தாடி மீசையும் வைத்திருந்தார்; நெற்றியில் திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம், கருஞ்சாந்து, மை என்று ஆறு பொருட்களும் (ஐந்து பொருட்கள் என்று சில குறிப்புகள் உள்ளன) அணிந்திருந்தார்; தூய வெள்ளாடை அணிந்திருந்தார்; கையில் திரிசூலம், மயில்பீலி, மெய்ஞ்ஞானக்கொடி வைத்திருந்தார்; அன்றாடம் பூசைகளில் பதினெண்சித்தர்களின் தெய்வத் தமிழை, அருளூறு பூசாமொழி வாசகங்களையே ஓதினார்; தன்னால் முடிந்த வரை ஏந்தரீக, தாந்தரீக, மாந்தரீகப் பூசைகளில் பயிற்சி செய்தார்.
மேலும் படிக்க...
இன்றைய தமிழர்களை உற்று நோக்கிச் சிந்தித்திடு! எல்லா மனிதர்களையும் போல் இம்மண்ணுலக அருட்பயிர்களுக்கு நாற்றங்கால் பயிராக உள்ள தமிழர்களே பேராசை, போட்டி, பொறாமை, தானென்ற அகம்பாவமும், ஆணவமும் விளைத்த ஒற்றுமையின்மை, மொழிப்பற்றின்மை, இனப்பற்றின்மை, நாட்டுப்பற்றின்மை .. முதலிய அழிவுக்குரிய இழிந்த பண்புகளைப் பெற்றிருப்பதைக் காணலாம். இவை, இவர்களின் இயற்கைப் பண்புகளல்ல. இவையெல்லாம் அன்னியர்களால் நன்கு திட்டமிடப் பட்டுச் சூழ்ச்சியாக தமிழர்களிடையே பயிர் செய்யப்பட்ட புதிய பண்புகளே!
மேலும் படிக்க...
அன்னியர்கள் தமிழினம் என்றென்றைக்கும் ஒற்றுமைப்பட்டு விடாத அளவிற்கு மதப் பிரிவுகளையும், சாதிப் பிரிவுகளையும் இவற்றிற்கிடையே சண்டைச் சச்சரவுகளையும் திறமையாக வளர்த்து விடுகிறார்கள். எனவே, அன்னியர்களோ, அன்னிய மொழிகளோ கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம், மதம், வியாபாரம் .. முதலியவற்றின் பெயரால் தமிழகத்தில் மிகப் பெரிய நிறுவனங்களாகச் செல்வாக்குப் பெற்றிருப்பதை உடைத்தெறிய வேண்டும்.
மேலும் படிக்க...
இலக்கியம் என்பது; மனிதனை தான், தனது குடும்பம், உற்றார், உறவினர், ஊரார், இனத்தார், மொழியார், நாட்டார், உலகத்தார் என்ற எல்லைகளைப் படிப்படியாக அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துக் கட்டுக்கோப்பாக வளரச் செய்திட வேண்டும். இலக்கியம் என்பது தனிமனிதனின் அகம்பாவம், ஆணவம், பேராசை, வெறி, தன்னலம், வஞ்சம், பழியுணர்ச்சி, சுரண்டலுணர்வு .. முதலியவைகளை முளையிலேயே கிள்ளியெடுத்திடப் பயன்பட வேண்டும்.
மேலும் படிக்க...
“தமிழில்தான் இந்து மதம் உருவாக்கப்பட்டது” என்ற பேருண்மையை விளக்கும் சான்றுகளும், ஊன்றுகளுமே பதினெண்சித்தர்களின் அருட்கொடைப் பட்டியல். [விரிவஞ்சி நினைவிலுள்ளவற்றின் சுருக்கப் பட்டியலே கீழே தரப் பட்டுள்ளது]. இந்துமதத்தைத் தெரிய, புரிய, கடைப்பிடிக்க உதவுவன .. ..
மேலும் படிக்க...
தனிமனிதச் செல்வாக்கும், புகழும் கட்சிகளை வளர்க்கின்றன. இப்படித் ‘தனிமனிதச் செல்வாக்கினால்தான் கட்சிகள் வளர்க்கப்படுகின்றன’ என்ற பேருண்மை மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிலவுகின்றன.
மேலும் படிக்க...