இந்து மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ.) என்பது:- நாத்திகர்களும், கடவுள் மறுப்புப் பகுத்தறிவாளர்களும், மதத்தில் ஆர்வமில்லாதவர்களும், நம்பிக்கையில்லாதவர்களும், மாற்று மதத்தவர்களும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும், பொருளாதாரப் புரட்சிக்காகவும், பண்பாட்டுப் புரட்சிக்காகவும் ஒன்று சேருகின்ற ஒரு கட்சியேயாகும். அ.வி.தி.யில் பூசாறி, குருக்கள், அருட்சகர், மருளாளி, சோதிடர், குறிகாரர்,.. .. என்பவர்களையெல்லாம் நேரடியாக உறுப்பினராக்கி ஒரு மாநில அமைப்பை உருவாக்க வேண்டும். இதேபோல் பத்தியுள்ளவர்களையெல்லாம் கடவுளை வழிபடுவோர் கழகத்தில் (க.வ.க.) சேர்த்து மாநில அமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும் படிக்க...
இ.ம.இ.யும், அ.வி.தி.யும் நமது மெய்யான இந்துமதத்தின் இருகண்களாக, இருகைகளாக விளங்கிட வேண்டும். இ.ம.இ. உலகியலாகவும், அ.வி.தி. முழுக்க முழுக்க மதவழியாகவும் செயல்பட்டேயாக வேண்டும். இதுகாறும் தோன்றிட்ட கட்சிகளைப் போல் (கழகம், இயக்கம்) நமது இயக்கமும் விரைந்து வளர வேண்டும், மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும், ஆட்சிநிலைகளைப் பெற வேண்டும் என்று யாரும் ஆசைப்பட்டு நமது மதவழிப் புரட்சியை, மதவழிச் சிந்தனையை, மதவழி அருளாட்சி அமைப்புப் பணியை அச்சத்தாலோ, கூச்சத்தாலோ, இச்சையாலோ குறைத்தும் மறைத்தும் செயலாக்கிடக் கூடாது. எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை.
மேலும் படிக்க...
தமிழ்மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும், நாகரீகத்தையும் காப்பாற்றும் முயற்சிக்குரிய இருகண்களாக, இருகைகளாக இருப்பவைதான் அல்லது செயல்பட வேண்டியவைதான் இ.ம.இ.யும், அ.வி.தி.யும். இக்கருத்தினைப் புரிந்து தமிழர்கள் இரண்டு அமைப்புக்களையும் தனித்தனியாக வளத்தோடும், வலிவோடும் வளர்த்தேயாக வேண்டும். அப்பொழுதுதான் சமயப் புரட்சியும், சமுதாயப் புரட்சியும் ஒரே சமயத்தில் நிகழ்ந்திட முடியும் அல்லது நிகழ்த்திட முடியும்.
மேலும் படிக்க...
இம்மண்ணுலகம் 500 கோடி ஆண்டில் காணும் 12வது அருளாட்சி நாயகமே யாம். எமது ஏட்டறிவு, பட்டறிவு, கடலோடிக் காடோடி நாடோடி வாழ்வின் நற்பயன்கள், .. .. முதலிய அனைத்தையும் உலக மக்களுக்கு வாரிவாரி வழங்கும் பணியில்தான் ஈடுபட்டுள்ளோம் யாம். இதில் பங்கு பெறுவது கிடைத்தற்கரிய பெரிய வாய்ப்பு. இதனை மறுக்கவும் மறக்கவும் முயல வேண்டாம்.
மேலும் படிக்க...
உழவுத் தொழிலால் பொருளீட்டுபவன் என்றுமே ஏமாற்றுக்காரனாகவோ, வஞ்சகனாகவோ, பேராசைக்காரனாகவோ மாற மாட்டான். பொருளை வாங்கி விற்கும் வணிகனே பேராசைக்காரனாகவும், பொறாமைக்காரனாகவும், வஞ்சகனாகவும், ஏமாற்றுக்காரனாகவும் மாறுகிறான். அதனால்தான், உழவன் ஒருவேளை தொழுதால் போதும். வணிகன் ஆறு வேளை தொழுதாலும் போதாது
மேலும் படிக்க...