பதினோரு பதினெண்சித்தர் பீடாதிபதிகளும் தங்களுக்குக் கிடைத்தவர்களின் தகுதிக்கேற்ப அவரவர் விருப்பத்தையும், ஆர்வத்தையும் அளந்து அறிந்து அருட்கலைஞராக உருவாக்கினர். அதனால்தான் வாழையடி வாழையென அருட்கலைஞர்கள் ஆங்காங்கே அருகம்புல் போல் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்த அருளாளர்களில் ஆலமரம் போல் வளர்ந்தவர்கள் சிலரே என்றுதான் கூற முடியும். இருந்தபோதிலும், அந்த ஆலமரங்கள் பரந்துபட்ட நான்கு யுகங்கள் எனும் இடைவெளியில் தோன்றியும் தோன்றாதவர்களாகி விட்டார்கள். ஓகோ! என்று வெற்றிகளைப் பெற்றிருந்தும் இருந்த இடமே தெரியாமல் போனவர்களே மிகுதியாயிட்டனர்..
மேலும் படிக்க...
நமது இயக்கத்தவர்கள் இம்மண்ணுலகில் தோன்றியுள்ள அனைத்து மானுட இனங்களும் இன உரிமைகளையும், பெருமைகளையும் பேணிக் கொள்கின்ற அளவு இன விடுதலை, மொழி விடுதலை, பண்பாட்டு விடுதலை முதலிய விடுதலைகள் எங்கும் நிலவிடும் வண்ணம்; மனித வாழ்வின் உயிர்நாடியும், உலக மதங்களின் தாயும் ஆன இந்துமதம் எல்லாநிலைகளிலும், எல்லாவகைகளிலும் விடுதலை பெற்று தூய்மையோடும், வாய்மையோடும் வாழ்ந்திடுவதற்காகப் பாடுபட வேண்டும் ..
மேலும் படிக்க...
அனைத்தும் அருளுலக பொருளுலக இருளகற்றுவதற்காக தாத்தாக்கள் ஆத்தாக்கள் அருளாணைகளாலும், அம்மையப்பன் துணையாலுமே நிகழுகின்றன என்ற தத்துவத்தின் செயல்நிலை விளக்கமே இந்து மறுமலர்ச்சி இயக்கம். மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கும் சித்தாந்தத்தின் செயல்நிலை விளக்கமே அருட்பணி விரிவாக்கத் திட்டம். எனவே, ‘தனிமரம் தோப்பாகாது’ என்ற தத்துவத்தின்படி அனைத்து வகை மதங்களிலும் உள்ள அருளாளர்களை ஒன்றுதிரட்டி, ஒற்றுமைப்படுத்தி, ஒருமைப்பாடு பெறச் செய்து அருளாட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கிலும், போக்கிலும் செயல்படுகிறோம் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகிய யாம்.
மேலும் படிக்க...
குருதேவர் அரசபாரம்பரியம் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், சந்தானாச்சாரியார்களின் வரலாறு எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில்; தங்கள் அஞ்சல் கண்டு, தொடர்ந்து பல நாட்கள் நள்ளிரவு கண்விழித்து எழுதிய அஞ்சல் இது. தங்களுக்கு எழுதிய இவ்வஞ்சலின் மூலம் தேவதேவியின் சன்னிதான சித்திபூசை முறை பற்றிய விளக்கம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...
நோய்நிலைகளை அகற்றும் குருபாரம்பரிய வாசகங்கள். பதினெண்சித்தர்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானமாகிய இந்துமதத்திற்கு உட்பட்டதே அரசியல். தமிழினத்திற்கு மட்டும் நாடில்லை, நாடு சார்ந்த மொழி உரிமை, இன உரிமை இல்லை.
மேலும் படிக்க...
தன்னையறிந்து தலைவனை யறிபவனும்; தலைவனை யறிந்து தன்னை யறிபவனும் முன்னைப் பழவினைகளில் உழலாமல் பின்னைப் பிறப்புக்களுக்கும் துணையாகும் பரம்பொருளாய் உருவாகிடுவான்.
மேலும் படிக்க...