விண்வெளியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் குருதேவருக்கு உதவி செய்வதற்காக சத்தி அண்டத்திலிருந்து அனுப்பிய தேவி (அனாதி சத்தி, ஆதி சத்தி, அனாதி ஈசுவரி, ஆதி ஈசுவரி, .. .. என்ற நிலைகளில் உள்ளவள்) வந்ததை உணர்ந்தார் குருதேவர்.
மேலும் படிக்க...
உன்னை ஓரளவாவது நம்மவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய உன்நிலை விளக்கமாக இந்தத் தமிழ் பற்றிய கருத்து விளக்க அஞ்சல் வடிவக் கட்டுரை எழுதப் படுகிறது. இதன் மூலமாவது அரசியல் வாதிகளும், சமய வாதிகளும், சமுதாய வாதிகளும், இலக்கிய வாதிகளும், கலையுலக வாதிகளும் தமிழ் பேரால் செய்யும் மோசடிகள் தடுக்கப்படட்டும்; ஏமாற்றுக்கள் அகற்றப்படட்டும்.
மேலும் படிக்க...
எருமைவெட்டி பாளையத்தில் கோசலையாற்றங் கரையில் இருந்த மொலக்காலம்மன் என்று பொதுமக்களால் அழைக்கப்படும் அம்மன் கோயிலுக்குச் சென்றோம். இந்த ஊருக்குச் சென்றதாகவோ, அங்குள்ள கோயில்களைக் கண்டதாகவோ குருதேவர் தம் நினைவில் இல்லை என்று கூறினார். ஆனால், இப்படிப்பட்ட இடத்தை எப்படி விண்வெளி சத்தி கண்டு பிடித்தது? ஏன் அருட்படைக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? என்று புரியாமல் குருதேவர் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
மேலும் படிக்க...
இப்பொழுது, ‘தமிழ்மொழி விடுதலை’, ‘தமிழின விடுதலை’, ‘தமிழ்ப் பண்பாட்டு விடுதலை’, ‘தமிழ் நாகரீக விடுதலை’ என்ற நான்கு வகையான விடுதலைப் படைகள் திரட்டப்பட்டாக வேண்டிய அவசர அவசிய நிலை வந்திருக்கிறது. ஆனால், இதற்குரிய பட்டாளம் இன்னும் திரட்டப்பட வில்லை. எனவேதான், மேற்கூறிய நான்கிற்கும் பொதுவான அல்லது இணைப்பான அல்லது அடிப்படையான அல்லது உயிர்நாடியான இந்து மறுமலர்ச்சி இயக்கத்திற்கான அருட்படை திரட்டப்படுகிறது.
மேலும் படிக்க...
நமது மதத் தலைவர்களும், மதத்தின் பெயரால் உள்ள கட்சிகளின் தலைவர்களும் அன்றாடம் முறையாகப் பூசைகளைச் செய்து அருட்சத்தியைப் பெற்று பிறருக்கு மந்திரிக்கவும், சித்திமுத்திகளைத் தரவும் வல்லவர்களாக விளங்க வேண்டும். ஆனால், ஏறத்தாழ எல்லோருமே ஏட்டுச் சுரைக்காய் போலவே இருக்கிறார்கள். இதனால்தான் அரைகுறையான சத்திகளைப் பெற்ற மந்திரவாதிகளும், குறிகாரர்களும், சித்து விளையாடல்காரர்களும் நமது மதத்தின் இருண்டநிலையில் மின்மினிப் பூச்சிகளாகவும், கண்சிமிட்டும் விண்மீன்களாகவும் வாழ்ந்து சென்று விடுகிறார்கள்.
மேலும் படிக்க...
இந்த நாட்டுச் சிந்தனையாளர்கள் பொருளாதார நோக்கு, அறிவியல் நோக்கு, சமுதாயச் சமத்துவ நோக்கு, அரசியல் சுதந்திர நோக்கு, .. .. முதலிய இன்றியமையாத பல நோக்குகளைப் பெற்றுச் சிந்திக்க வில்லை என்றே தெரிகிறது.
மேலும் படிக்க...
இதன்படிப் பார்த்தால் இந்துமதத்தைச் சேராதவர்களும், இந்துமதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும், குடும்ப ஆண்டவர்களின் பூசை நெறிமுறைகள் பற்றிக் கேட்கின்ற எந்தக் கேள்விக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அல்லது அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக இந்து வேதப் பேருண்மைகளைக் கூற முடியாது.
மேலும் படிக்க...