போட்டால் உடையும் மண்சட்டியையே தட்டிப் பார்த்துத்தான் வாங்குகிறோம். ஏழு பிறப்பும் பயன்படக் கூடிய அருளைப் பெறப் போகும் மாணாக்கர்களை அல்லது வாரிசுகளை திட்டிப் பார்த்து தேர்ந்தெடுப்பவன்தான் ஆசிரியன், ஆச்சாரியன், குரு. அதாவது தட்டினால் உடைந்து போகக் கூடிய பானையை எப்படி வாங்க மாட்டோமோ! அப்படியேதான் திட்டினால் மனமுடைந்து, சிந்தை நொந்து, கருத்து மாறி மறுப்பையும், வெறுப்பையும், எதிர்ப்பையும் காட்டுகின்றவனை மாணாக்கனாகவோ, அல்லது வாரிசாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் படிக்க...
அனைத்தும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலே. அம்மையப்பன்களின் நேரடிப் பார்வையிலே அருளாட்சி அமைப்புப் பணி நடந்து வருகிறது. எனவே, அருளாட்சி அமைக்க முயலும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும், அதன் கீழுள்ள பதினெட்டு நிறுவன நிருவாகங்களும் மனிதர்களின் முயற்சிகளால் மட்டும் வளரப் போவதில்லை! வலிமை பெறப் போவதில்லை! ஆட்சி பெறப் போவதில்லை! இப்பேருண்மையினை முறையாகவும், நிறையாகவும் உணர்ந்தவர்களே நம்முடன் செயல்பட முடியும்.
மேலும் படிக்க...
நாம்தான் வேதகாலத்திலிருந்து இன்றுள்ள பிறாமணர் வரை தமிழினத்திற்குச் செய்து வந்துள்ள தீமைகளை விளக்கிப் பேசி வருகிறோம், கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறோம், நூல்களாக எழுதி வருகிறோம். நாம்தான் பகுத்தறிவுப் பகலவன், சிந்தனைச் சிற்பி, தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களை இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கெளரவத் தலைவராக அறிவித்திருக்கிறோம். நாம்தான் பெரியாரின் கனவுகளை நனவாக்கப் பிறந்திருக்கிறோம்.
மேலும் படிக்க...
‘யாவும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலாகும்’, ‘அம்மையப்பன் அருட்துணையே ஆகும்’. இப்பேருண்மையினை அநுபவப் பூர்வமாக உணர்ந்து ஒப்புக்கொள்ளுபவர்களால்தான் அருளுலக மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் புரட்சி மாவீரத் தலைவரை என்றென்றும் தமக்குரியராக்கிக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க...
இன்றைய இந்துமதத் தந்தை, குவலய குருபீடம், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் அருளாட்சி அமைப்புப் பணிக்காக ஐந்தீ வேட்டலுக்கும், முத்தீ ஓம்பலுக்கும் உரிய எண்வகைப் பீடங்களையும் புதிதாக உருவாக்குவதோடு; மந்திற, தந்திற, எந்திற, பூசை, தவ, ஞான முறைகளுக்குரிய பதினெட்டு வகைப் பீடங்களையும்; நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருட்சித்தியாளர்கள் முதலியவற்றிற்குரிய பீடங்களையும் நேரடியாகப் புதிது புதிதாகத் தோற்றுவிக்க முயற்சி செய்து வருகிறார்.
மேலும் படிக்க...
மெய்ஞ்ஞானக்கொடி என்பது குருதேவரும் அவரது அடியான்களும் தங்களது பூசையில் வெளிப்படுத்தும் அருளாற்றலைத் தங்களுக்கு வாங்கித் தரும் சாதனமே. இதற்குத் தினமும் பகலில் அல்லது இரவில் 11-1:30இல் தங்கள் வீட்டில் சமைக்கும் உணவில் சிறிது படைத்து ஊதுபத்தி காட்டி வழிபட வேண்டும். அதேபோல், தங்கள் இல்லத்திலுள்ள ஆண்களும், பெண்களும் அன்றாடம் நமது “பூசைமொழிகள்” என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து வாசகங்களையும் ஒருமுறை முழுமையாக ஓதிட வேண்டும்.
மேலும் படிக்க...
நெடிய பெரிய இடைவெளிக்குப் பிறகு தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற உணர்வு தழைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
மேலும் படிக்க...