சங்கப் புலவர்களையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும், பெருங்காப்பிய புலவர்களையும், சிறுகாப்பிய புலவர்களையும் .. .. மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். நாம் நமது இலக்கியங்களையும், இலக்கியக் கலைஞர்களையும், இலக்கிய நாயகர்களையும், இலக்கியக் காவலர்களையும் பெருவாரியான பொதுமக்களின் நெஞ்சிலும், சிந்தையிலும் நிலைபேறு பெறச் செய்ய வேண்டும். அல்லது நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களின் வாழ்வியலில் தமிழ் மணம் கமழும், கமழும், கமழும். இல்லையேல் தமிழர்களின் வாழ்வியலில் பிண நாற்றமே வீசும், வீசும், வீசும்..
மேலும் படிக்க...
மந்திரவாதிகள் நலப்படுத்தும் விதத்துக்கும், நமது அருட்கோட்டங்கள் வழியாக சித்தரடியான்கள் நலப்படுத்தும் விதத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? பாதிப்புள்ள மக்கள் மந்திரவாதிகளிடம் போய் சரிசெய்து கொள்வதை விட நம்மிடம் வருவதால் என்ன சிறப்பான பயன்?.
மேலும் படிக்க...
குருதேவரிடம் மதிப்பும், நம்பிக்கையும், பற்றும், பாசமும் வைத்து; எதையும் சாதிக்கின்ற நெஞ்சுறுதியும், சிந்தை உரமும், எதையும் விடாப்பிடியாகத் தொடர்ந்து செய்யும் ஆர்வமிகு உணர்வும், பற்றுணர்வும் பெற்றிருந்தால் போதும் என்றெண்ணியே அருட்பட்டங்கள் வழங்கப்படுகின்றன; அருட்பட்டங்கள் கிடைத்த உடனேயே அந்த அம்மையப்பன்களும், தாத்தாக்களும், ஆத்தாக்களும், மற்ற கடவுள்களும், தெய்வங்களும், தேவர்களும், தேவதைகளும், ஆண்டவர்களும், இறைவர்களும், .. .. தங்களுடைய வாக்குக்கு அல்லது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாவார்கள் என்று எண்ணி விடுகிறார்கள். எனவேதான் எல்லாவிதத் தவறுகளும் நிகழுகின்றன.
மேலும் படிக்க...
வெறும் பதவி வேட்டைக்காக நேர்மாறான அல்லது எதிரிடையான அல்லது பகையான கருத்துக்களையும், கொள்கைகளையும் உடைய அரசியல் கட்சிகள் கூடத் தேர்தலின் போது கூட்டுச் சேர்ந்து கட்டித் தழுவிச் செயல்படுவதை உலகியலாகக் காண்கிறோம். ஆனால், இந்தச் சாதாரண உலகியலான ஒத்துப்போகும் பண்பினை இந்துமதத்தின் பெயரால் உள்ள கட்சிகள் ஆக்கரீதியாகவும், மத விழிச்சிக்காகவும், எழிச்சிக்காகவும், செழிச்சிக்காகவும் கூட்டுச் சேரத் தயங்கும் நிலைதான் தொடர்ந்து வருகிறது.
மேலும் படிக்க...
எமது நூறாயிரக்கணக்கான கட்டுரைகளும், நூற்றுக்கணக்கான நூல்களும் கையெழுத்துப் பிறதிகளாக உலவியே உலகெங்கும் “அருளாளர்களை” (Divinators, Mystics, Sages and Saints) உருவாக்கியிருக்கின்றன என்கின்ற நிலையில், அவற்றில் சிலவாவது அச்சேறிய நூல்களாக (Printed Books) உலவ ஆரம்பித்திட்டால் மண்ணில் விண்ணைக் காணலாம்.
மேலும் படிக்க...