பொதுவாக மதம் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதற்கு எதிர்ப்பும், மறுப்பும் ஏற்பட்டது ஏன்? என்ற விவரங்களைக் காலக் கணக்கீட்டு அடிப்படையில் வரலாற்றுப் பின்னணியில் இலக்கியச் சான்றுகளோடும், பிற வரலாற்று மூலங்களின் (sources) சான்றுகளுடனும் விளக்கி உரைத்தல் இப்பள்ளியின் பணி. இதன் மூலமாவது உலகம் தழுவும் மத மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும் ஏற்பட்டு மனிதப் பண்பின் ஆட்சிமீட்சி ஏற்பட வேண்டும்.
மேலும் படிக்க...
குருதேவர் ஞானாச்சாரியாராக, இந்துமதத் தந்தையாக, குவலய குருபீடமாக, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக, கருவறை மூலவர்களின் அம்மையப்பராகத் தமது சாதனைகளால் உயர்ந்தவர். எனவே, அவர் பிறர்க்குப் பாதுகாப்பு அளிப்பதாக ஒரே ஒருமுறை வாக்குக் கொடுத்தாலும் போதும், அதனை அருளுலகத்தார் ஏற்றுச் செயல்படுத்துவார்கள். அதற்காக அவர் அடிக்கடி பூசை செய்யத் தேவையில்லை.
மேலும் படிக்க...
நம்மவர்களில் படித்தவர் முதல் படியாதவர் வரை நமது நாட்டு வரலாறு, சமய வரலாறு, சமுதாய வரலாறு, மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, அறிவியல் வரலாறு, நமது முன்னோர்களின் அரிய பெரிய போதனைகளின் தன்மை, சாதனைகளின் மேன்மை, .. .. முதலியவைகளை எல்லாம் புரியாதவர்களாகவும், தெரியாதவர்களாகவுமே இருக்கின்றார்கள். இவ்வளவு பெரிய வீழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இருளிலும், இன்னலிலும் ஆழ்த்தப்பட்ட ஓர் அப்பாவியான பழம்பெரும் இனத்தைச் சார்ந்த மக்கள் நாம்”
மேலும் படிக்க...
நீங்கள் நால்வரும் சமயக்குரவர் போல், சந்தானக்குரவர் போல் வரலாற்றுப் புகழ் பெற்று இந்துமத மறுமலர்ச்சிப் பணிகளையும், ஆட்சிமீட்சிப் பணிகளையும் மிகுந்த ஒற்றுமையுடனும், பற்றுப் பாசத்துடனும் அடிக்கடி கலந்து பேசிச் செயல்பட வேண்டும். நீங்கள் நால்வருமே நமது இயக்கத்தவர்களிடம் மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும், நட்புடனும் பழகி இயக்கத்தைக் கட்டிக் காக்க வேண்டும்.
மேலும் படிக்க...
உங்கள் மூவருடைய தலைமையிலும், ‘வெண்ணந்தூர் ஐந்து முனீசுவரர் வார வழிபாடு’ சிறப்பாக நடைபெறட்டும், வாழ்த்துகிறோம். உங்களிடையில் வளமான, வலிவான ஒற்றுமையும், பற்றும் பாசமும், ஒருமைப்பாடும், கட்டுக்கோப்பும், செழிப்பான செயல்திட்டமும் இருக்க வேண்டும். குறைந்தது நாலைந்து கல் தொலைவில் சுற்றுவட்டார மக்கள் அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நல்ல வழிகாட்டிகளாக, துணைகளாக வாழ முற்படுங்கள்.
மேலும் படிக்க...
மூன்றே நாளில் சிவபெருமான் நேரில் தோன்றி ஆட்கொண்ட திருக்காளத்தி வேடன் கண்ணப்பன் பற்றிய மெய்யான வரலாறு ஒன்றே போதும், இன்றைய சைவ சமயத்தினர் இறைச்சி உணவை எதிர்த்தும், மறுத்தும், வெறுத்தும் போராடுவது தேவையில்லை என்பதை விளக்கிட. இதற்கு மேல் விளக்கம் கொடுத்திட்டால் நாமும் தெளிவற்றவர் ஆகிடுவோம். அதுமட்டுமல்ல, இந்தச் சாதாரண பொருளற்ற ‘இறை வழிபாடும், இறைச்சி உணவும்’ என்ற கருத்து ஆராய்ச்சியில் நாம் புண்படவும் தேவையில்லை, பிறரைப் புண்படுத்தவும் தேவையில்லை
மேலும் படிக்க...
ஒவ்வொரு சித்தரடியானும் பொதுவாக இடுப்பில் 4 முழ வேட்டியும், கச்சையாக 6 முழத் துண்டும், தலையில் 10 அல்லது 12 முழத் துண்டைத் தலைப்பாகையாகவும் அணிய வேண்டும். மூன்றுமே நல்ல சிவப்புத் துணியாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க...